இந்திய துவக்க வீரர் சேவக்கின் மகன் ஆர்யவீர்
மேகாலயாவின் ஷில்லாங் நகரில், 19 வயதுக்குட்பட்டோருக்கான கூச் பெஹார் டிராபி லீக் போட்டி நடக்கிறது. இதில் டில்லி, மேகாலயா அணிகள் விளையாடுகின்றன. டில்லி அணி சார்பில் முன்னாள் இந்திய துவக்க வீரர் சேவக்கின் மகன் ஆர்யவீர் 17, விளையாடுகிறார். மேகாலயா அணி முதல் இன்னிங்சில், 260 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் டில்லி அணி முதல் இன்னிங்சில் 468/2 ரன் எடுத்திருந்தது. ஆர்யவீர் சேவக் 200 அவுட்டாகாமல் இருந்தார். நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் ஆடிய ஆர்யவீர், 309 பந்தில் 3 சிக்சர், 51 பவுண்டரி உட்பட 297 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஆட்டநேர முடிவில் மேகாலயா அணி 2-வது இன்னிங்சில் 141/5 ரன் எடுத்து, 222 ரன் பின்தங்கி இருந்தது. சேவக் வெளியிட்ட செய்தியில், 23 ரன்னில் எனது சிறந்த டெஸ்ட் ஸ்கோரை முறியடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். தொடர்ந்து சிறப்பாக விளையாடினால், என்னை விட நிறைய சதம், இரட்டை சதம், டிரிபில் செஞ்சுரி விளாசலாம் என தெரிவித்தார்.
0
Leave a Reply