JioHotstar டொமைன் சர்ச்சை முடிவு..
ஜியோஹாட்ஸ்டார் டொமைன் விவகாரம் கடந்த 48 மணிநேரமாக பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜியோஹாட்ஸ்டார் டொமைன் பெயரை வாங்கியதாகக் கூறப்படும் டெல்லி டெவலப்பர், தனது முடிவை மாற்றியுள்ளதாகவும், இணையதளத்தை முடக்க முடிவு செய்துள்ளார். இது மிகவும் முக்கியமான முடிவாகப் பார்க்கப்படுகிறது.இதுகுறித்து டெல்லி நபர் நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார், இதில் தனது பெற்றோர் சட்டப் போராட்டம் குறித்து கவலைப்படுவதாகவும், தான் இந்த விஷயம் எவ்வளவு பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் உட்பட உலகெங்கிலும் இருந்து தமக்கு கிடைத்த சட்ட ஆதரவுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், கேம்பிரிட்ஜ், லண்டன், கலிபோர்னியா, டெக்ஸாஸ் மற்றும் பெர்லினில் இருந்தும் வழக்கறிஞர்களின் ஆதரவு கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஜியோஹாட்ஸ்டார் டொமைன்: பிரச்சனை என்ன? ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இடையே இணைப்பு ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பில், டெல்லி டெவலப்பர் "JioHotstar.com" என்ற டொமைன் பெயரை வாங்கியிருந்தார்.ரிலையன்ஸ் மீடியா வர்த்தக பிரிவும் டிஸ்னி இணைப்பதாக செய்தி வந்த உடனே டெல்லியை சேர்ந்த ஒரு சாப்ட்வேர் லெவலப்பர் JioHotstar பெயரில் ஏதேனும் இணையதள டொமைன் உள்ளதா என செக் செய்த போது அவருக்கு jiohotstar.com என்ற முக்கியமான டொமைன் கிடைத்த உடன் குஷியாகி டொமைன்-ஐ வாங்கியுள்ளார்.
இதை வைத்து தற்போது டெல்லியை சேர்ந்த டெவலப்பர், தான் jiohotstar.com டொமைன்-ஐ விற்பனை செய்ய தயாராக இருப்பதாகவும் அதற்கு தான் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்க தேவையான 1 கோடி ரூபாய் பணத்தை கொடுக்க ரிலையன்ஸ்-க்கு கோரிக்கை வைத்த நிலையில் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது மட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் தர்ப்பில் இருந்து வழக்கு தொடுப்பதாக கூறியுள்ளது. 2023 ஆம் ஆண்டில் தான் இந்த டொமைன் பெயரை வாங்கியதாகக் கூறும் அந்த டெவலப்பர், சட்ட உதவியையும் நாடி இருந்தார்.இந்த சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. டெல்லி டெவலப்பர் பெற்றோரின் கவலை மற்றும் சட்டப் போராட்டத்தை எதிர்கொள்ளும் பணச் சுமைகளை கருத்தில் கொண்டு, டெவலப்பர் தனது முடிவை மறுபரிசீலனை செய்துள்ளார். இதன் மூலம், டொமைன் பெயர் தொடர்பான சட்டப் போராட்டம் தவிர்க்கப்பட்டுள்ளது
0
Leave a Reply