தினை வெண்பொங்கல்
தேவையான பொருட்கள்:
தினை 250 கிராம், பாசிப்பருப்பு -50 கிராம். மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், நெய் - 1 டேபிள்ஸ்பூன், முந்திரி - 10, இஞ்சி - சிறு துண்டு, கறிவேப்பிலை - 1 கொத்து, உப்பு - தேவைக்கு
செய்முறை:
தினையை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துக் கழுவவும். பாசிப்பருப்பை எண்ணெய் விடாமல் வறுத்துக் கழு விக் கொள்ளவும். குக்கரில்5 கப் தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும். பாசிப்பருப்பை அதில் போட்டு அரை வேக்காடு வேகவைக்கவும். அதனுடன் கழுவி வைத்துள்ள தினை அரிசியைப் போட்டு உப்பு சேர்த்து வேகவிடவும்.2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு உடைத்த முந்திரிப் பருப்பைப் போட்டு வறுக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் வறுத்த முந்திரியை அதில் சேர்க்கவும். அதனுடன் சிறிது நெய்யில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, துருவிய இஞ்சி ஆகியவற்றைத் தாளித்துச் சேர்க்கவும். தினை வெண்பொங்கல் தயார்.
0
Leave a Reply