இயற்கை தந்த வரம் மரங்கள்.
மரங்கள் மண்ணுக்கு மட்டுமல்ல மனிதனுக்கும் உயிர் மூச்சை தருவதாக விளங்குகிறது. நாளைய சமுதாயம் உயிர்த்து இருப்பதற்கும், உயர்ந்து இருப்பதற்கும் மரம் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது, அப்படிப்பட்ட மரங்களை வளர்ப்பதற்கு, நாம் அனைவரும் பாடுபட வேண்டும். மாசடைந்த காற்றை சுத்தப்படுத்தி மீண்டும், மீண்டும் சுவாசிக்க பயன்படுத்திட முடியும் என்று சிந்தித்ததன் விளைவால் தான் மரம் நடுதலின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே ஏற்பட்டுள்ளது. நம் கண் எதிரே மரங்கள் வெட்டப்படுவதையும், காடுகள் அழிக்கப்படுவதையும் காண்கிறோம். காடுகள் இல்லை என்றால் நாடுகள் இல்லாமல் போய்விடும். இயற்கை மனிதனுக்கு கொடுத்த மிக உயர்ந்த வரம் தான் மரங்கள். மரக்கன்று வைப்பது மிக சிறந்த செயல்.
0
Leave a Reply