குழாய்ப் போட்டு (குழாயில் வேக வைத்த காரம்)
தேவையான பொருட்கள் - கோதுமை ரவை 2 கப், பச்சைப் பட்டாணி 100 கிராம், காரட் சீவியது 2, முட்டைக் கோஸ் 100 கிராம் வெட்டி வேக வைத்தது. உருளைக்கிழங்கு அவித்தது 4, எண்ணெய் அல்லது நெய் கால் கப், பச்சை மிளகாய் 3 பொடியாக வெட்டியது. புளித்த தயிர் அரை கப், கரம் மசாலா அரை தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு.
செய்முறை- மேலே குறிப்பிட்டுள்ளவை அனைத்தையும் அரை கப் தண்ணீர் விட்ட சேர்த்து (புட்டுக்கு மாதிரி) கலவையாக்கவும். எண்ணெய் தடவிப் புட்டுக்குழலில் போட்டு ஆவியில் வேகவைத்து எடுக்கவும். தயிர் விருப்பமில்லாதவர்கள் அதற்குப் பதிலாக ஒரு கோப்பை பால் உபயோகிக்கலாம்.
0
Leave a Reply