ரயில்வே கொண்டு வரும் அதிரடி மாற்றங்கள்!
ரயில் பயணத்தை பலரும் விரும்புவார்கள். ஒரு சௌகரியமான பயணத்தை கொடுப்பதால் ரயில் பயணத்தை பலரும் விரும்புகின்றனர்.ஆனால் பலருக்கும் ரயிலில் உள்ள ஒரு கஷ்டம் என்றால் அது காத்திருப்பு பட்டியல் தான். டிக்கெட் புக் செய்து விட்டு அது கிடைக்குமா கிடைக்காதா என பார்த்தபடி இருப்பது தான் பெரிய சிரமம்.
அதுவும் குறிப்பாக பண்டிகை காலங்களில் மக்கள் ஊருக்கு செல்ல படும் பாடு பெரும் அவதிக்குள்ளானது தான். இனி அந்த பிரச்சனைக்கு முடிவு வந்துவிட்டது.இனிமேல் வெயிட்டிங் லிஸ்ட் என்ற ஒன்றே இல்லாமல் ஆக்க ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளின் ரயில்வேயில் ஒன்றன் பின் ஒன்றாக மாற்றம் கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காத்திருப்போர் பட்டியல் முறையை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக இந்திய ரயில்வே ஒரு நாளைக்கு3000 ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. மேலும் 7 முதல் 8 ஆயிரம் பழைய ரயில்களையும் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
ரயில்களின் வேகத்தை மணிகு50 கி.மீ வேகத்தில் அதிகரிக்கவும் ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாற்றங்களை நிகழ்த்தினால் காத்திருப்போர் பட்டியலுக்கு இனி அவசியம் இருக்காது.அமிர்த பாரத் திட்டத்தின் கீழ்1,309 நிலையங்களை புதுப்பிக்கும் திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. ரயிலின் பழைய அறைகள் மாற்றப்படும் என்றும் தெரிகிறது.மணிக்கு 250 கிமீ வேகத்தில் இயக்கக்கூடிய 1000 ரயில்கள் இயக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. ரயில் பயணிகள் இனி கவலையில்லாமல் பயணம் செய்ய முடியும்.
0
Leave a Reply