ராஜபாளைய நகரச் செய்திகள்
இராஜபாளையத்தில் மின்னஞ்சல் போராட்டம்.
இராஜபாளையம் நகர் பகுதி வழியேசெல்லும் தேசிய நெடுஞ்சாலை பஞ்சுமார்க்கெட் முதல் நகர் பகுதியைகடக்கும் வரை மிக மோசமானநிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகஇருந்து வருகிறது. பலரும் புகார் தெரிவித்தநிலையில் ரோடு சீரமைக்கப்படாமல் உள்ளதைஅடுத்து தேசிய நெடுஞ்சாலை துறைஅமைச்சருக்கு மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம் நடந்தது.நிகழ்ச்சி ஒருஞ்கிணைப்பாளர்கள்ராமச்சந்திர ராஜா, மணிகண்டன், மாரியப்பன், தலைமை வகித்தனர். பெண்கள் உள்ளிட்ட 30 க்கும்மேற்பட்டோர் பங்கேற்று மின்னஞ்சல் அனுப்பியதுடன், ஒரு வார காலத்திற்குதொடர்ச்சியாக அனுப்பி அரசின் கவனத்தைஈர்க்க உள்ளதால் கூட்டமைப்பு சார்பில் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் பெய்த மழை காரணமாக நிலங்களை உழுது தயார்படுத்தும் விவசாயிகள்.
ராஜபாளையம், செப். 11- ராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில்ஆடி மாதத்தில் பெய்ய வேண்டிய மழைதற்போது பெய்துள்ளதால் மண்ணை உழுது தயார்படுத்தும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.ராஜபாளையம் வட்டார கண்மாய் ஒட்டியபகுதிகள், சேத்துார், முக வூர், தெற்குவெங்காநல் லுார், சோழபுரம், முதுகுடிஉள்ளிட்ட நன்செய் பாசன பகுதிகளில்நெல் பயிரிடு வது வழக்கம். கண்மாய் ஒட்டிய பகுதி களில்நெல் விவசாயத் திற்கான ஆரம்ப கட்டபணிகளை துவக்குவதற் காக பருவ மழைக்காககாத்திருந்தோம். அதிக சுற்று நீர்வசதி இல்லாதவர்கள் ஆடி 18ல் காய்கறி, பயறு விதைப்பர்..எதிர்பார்த்த மழை பெய்யாததுடன் வெப்பம்அதிகம் இருந்த நிலையில் ,சமீபத்தில்பெய்த மழை காரணமாக உழவுபணி களை துவக்கி உள்ளோம். கண்மாய்கள் வற்றிய சூழ லில்தற்போது கிணற்று நீரை நம்பிஇறங்கியுள்ளனர். விவசாயிகள்.
தென்னை நார் தொழில் தொடர்சிக்கலை சந்திப்பதை ஒட்டி மட்டைகளை வெளியேற்ற ! முடியாமல் கண்மாயில் எரிக்கும் அவல நிலை.
மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய ஸ்ரீவில்லிபுத்தூர்வத்திராயிருப்பு இராஜபாளையம், சேத்தூர், தேவதானம், உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயம் அதிகஅளவில் நடைபெற்று வருகிறது. தேங்காய் மட்டைகள் செங்கல் சூளைகளுக்கு மட்டும்பயன்பட்டு வந்த நிலையில், வியாபாரவிரிவாக்க வாய்ப்புகளுக்காக சீனா, ரஷ்யா, உக்ரைன்உள்ளிட நாடுகளுக்கு தென்னை நார் கழிவுகள்ஏற்றுமதி செய்யப்பட்டதால் தகுந்த விலை கிடைத்துவந்தது.கொரோனா பாதிப்பை தொடர்ந்துஉலக தொழில் மந்த நிலைபோர் காரணமாக ஏற்றுமதி அதிகம்இருந்த சீனா உள்ளிட்ட நாடுகள்இறக்குமதியை குறைந்ததால் தென்னை நார் கழிவுகள்கேட்பாரற்ற சூழல் ஏற்பட்டு விட்டது. தேங்காய் பேட்டைகளில் குவியும் மட்டைகளை அப்புறப்படுத்த வழிவின்றி புதிய இடம் தேடிஅலையும் நிலை நார் உற்பத்தியாளர்களுக்குஏற்பட்டுள்ளது. ஒரு கடைக்கு மாதம் 1 லட்சம் வீதம் தேங்காய்கள் தொடர்வரத்துஇருந்து வரும் சூழலில் தேங்காயிலிருந்துபிரிக்கப்படும் மட்டைகளை வியாபரிகள் அப்புறப் படுத்த வழியின்றி கண்மாயில்கொட்டி தீ வைக்க வேண்டியுள்ளது.இந்த அவல நிலையைசரி செய்ய தென்னை நார்ஏற்றுமதிக்கு வழி கிடைக்க விவசாயிகள், வியாபாரிகள் தவிக்கின்றனர்.
ராஜபாளையம் ராமராஜு பி சர்ஜிகல்காட்டன் மில்ஸ் மு ஸ்தாபகர்ராமராஜு பிறந்த நாளை முன்னிட்டுஇலவச கண் பரிசோதனை, ரத்ததான முகாம் நடந்தது.
ராஜபாளையம் ராமராஜு பி சர்ஜிகல்காட்டன் மில்ஸ் மு ஸ்தாபகர்ராமராஜு பிறந்த நாளை முன்னிட்டுஇலவச கண் பரிசோதனை, ரத்ததான முகாம் நடந்தது. ஆலைஇயக்குனர் ஸ்ரீ கண்டன் ராஜாதலைமை வகித்தார். அரசு மகப்பேறு மருத்துவகுழுவினர் சார் பில் ரத்ததானமும், சக்தி
கண் மருத்துவமனை சார் பில் கண்பரிசோதனை முகாமும் நடந்தது. ராம்கோ டெக்ஸ்டைல்ஸ் தலைவர்மோக - னரங்கன், தலைமை நிதி நிலைஅதிகாரி விஜய் கோபால், பொதுமேலா ளர் சந்தோஷ், சுந்தர்ராஜ், ரங்கராஜ், தொழிற்சங்க ர் பிரதிநிதிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இராஜபாளையம் ரயில் பயனாளர் சங்கம்சார்பில்மாணவர்களுக்கு விழிப்புணர்வு.
இராஜபாளையம் ரயில் பயனாளர் சங்கம்சார்பில் சேவைகள், பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்சிசி ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில்நடந்தது.இராஜபாளையம் ரயில் பயனாளர் சங்கதலைவர் சுகந்தம் ராமகிருஷ்ணன் முன்னிலை விகித்தார். மதுலை ரயில்வே கோட்டவணிக ஆய்வாளர் கோவிந்தராஜ், ரயில்வே பாதுகாப்பு படைடி.எஸ்.பி. வெள்ளைத்துரைபங்கேற்று மாணவர்களிடம் முன்பதிவு இல்லாத பயண சீட்டுஎடுக்கும் அலைபேசி செயலியின் பயன்பாடு, சீசன் டிக்கெட் எடுத்தல், புதுப்பித்தல், ரயில் பயண பாதுகாப்புவிழிப்புணர்வு, ரயில் கடவுப் பாதைபாதுகாப்பு, இவற்றில் மக்களின் பங்கு குறித்து விளக்கிபேசினர்.
0
Leave a Reply