இராஜபாளையம் புதுப்பாளையம், சக்கராஜா கோட்டை அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் பொங்கல் திருவிழா அழைப்பிதழ்
அன்புடையீர்,
திகழும் மங்களகரமான 1199-ம் ஆண்டு குரோதி வருஷம் சித்திரை மாதம் 24-ம் தேதி (07-05-2024) செவ்வாய்கிழமை இரவு 8.00 மணி அளவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அருள்ஜோதி வடிவாய் அமர்ந்து, நாதஸ்வரம், மேளவாத்தியங்கள். கிளாரினெட் கச்சேரி, வாண வேடிக்கைகளுடன் றப்பட்டு, ஜவஹர் மைதாளம் தெரு, மதுரை ராஜாக் கடைத்தெரு. தென்காசி - மதுரை மெயின் ரோடு, P.S.K. பார்க் அங்கைய ராஜா தெரு. வளையல் செட்டியார் தெரு. அம்பலப்புளி பஜார் ஸ்ரீ முத்தாலம்மன் பீடம் வந்து ஸ்ரீ குருசாமி கோவில் சிதம்பர மூப்பனார் தெரு வழியாக சுற்றி வந்து ஆலயம் வந்தடையும், அவ்வமயம் பக்த கோடிகள் அனைவரும் தவறாது ஷெ பொங்கல் விழா வைபங்களில் கலந்து கொண்டு சிறப்புவித்து அம்மன் அருள் பெற வேண்டுகிறோம்.
இரவு 10.00 மணிக்கு மேல் வில்லிசை வேந்தர், ஜோதிடர் M.V. மனோகரன் வில்லிசை கலைக் குழுவினர் வழங்கும் வில்லிசை கச்சேரி நடைபெறும். (ஸ்ரீ முத்தாலம்மன் பிறப்பு - வளர்ப்பு கதை)
2-ம் நாள் நிகழ்ச்சிகள்
08.05.2024 சித்திரை 25-ம் தேதி புதன்கிழமை பகல் முழுவதும் ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் முன்பு அமைந்துள்ள அலங்காரப் பந்தலில் ஸ்ரீ முத்தாலம்மன் அருள்ஜோதி ரூப சக்தியாய் அமர்ந்து மக்களுக்கு காட்சி கொடுக்கும். அவ்வமயம் பொதுமக்கள் அனைவரும் அம்மன் தரிசனம் செய்து, அம்மனின் அருளைப் பெற்று திகழுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
காலை 10.00 மணிக்கு மேல் மதியம் வரை திருமதி. பாண்டியம்மாள் பாடகி பாரதி இசைக்குழு அவர்களின் பக்தி இசைப்பாடல்கள், பாரம்பரிய பஜனை மற்றும் நாமாவளிகள், கும்மி கிராமிய தெம்மாங்குப்பாடல்கள் நடைபெறும்.
இப்படிக்கு
இராஜபாளையம் புதுப்பாளையம், சக்கராஜா கோட்டை
அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் டிரஸ்ட்
0
Leave a Reply