மெதுவாய், மென்று சாப்பிடுங்கள்!
நம்மில் பலர் உணவை வேக வேகமாக சாப்பிடும் வழக்கம் உடையவர்களாக உள்ளார்கள். சிலர் உணவை ரசித்து, ருசித்து வெகுநேரம் சாப்பிடுபவர்களாக உள்ளார்கள். சிலர் பசித்தாலும் பசிக்காவிட்டாலும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். சிலர் உணவின் மீது ஆர்வம் இல்லாமல் கடனே என்று சாப்பிடுவார்கள். சிலர் புத்தகத்தைப் படித்துக் கொண்டே சாப்பிடுவார்கள். மற்றும் சிலர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்த்தவண்ணம் என்ன உணவை சாப்பிடுகிறோம் என்பதைப் பற்றிய சிந்தனையின்றி சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள். உணவை எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதை விளக்குவதுதான் இந்த பதிவு.
‘மென்றுதின்பவன் நூறாண்டு வாழ்வான்’ என்பது முதுமொழி. உணவை எப்படிச் சாப்பிட வேண்டும் என்றொரு முறை இருக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் சாப்பிடும்போது வேறு எந்த சிந்தனையும் இருக்கவே கூடாது. சாப்பாட்டில் மட்டுமே நம் கவனம் முழுக்க இருக்க வேண்டும். உணவினை ரசித்து, ருசித்து முடிந்த அளவிற்கு மென்று சாப்பிட வேண்டும். நாம் சாப்பிடும் உணவு நன்கு அரைபட வேண்டும். மேலும், அதோடு உமிழ்நீரும் போதிய அளவு கலந்து உள்ளே செல்ல வேண்டும். அப்போதுதான் உணவும் எளிதில் ஜீரணமாகும். நாம் சாப்பிடும் உணவு நன்கு ஜீரணமானால் வியாதிகள் அவ்வளவு சுலபத்தில் நம்மை அணுகாது.
0
Leave a Reply