25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


நிலம் தொடர்பான மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.11.2024 அன்று  நடைபெற உள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நிலம் தொடர்பான மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.11.2024 அன்று நடைபெற உள்ளது

விருதுநகர் மாவட்டத்தில்  ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமைதோறும் காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நிலம் தொடர்பான மனுக்கள் அதிக அளவில் அளிக்கப்படுவதால் மேற்படி நிலம்  சார்ந்த பொருள்கள் தொடர்பான மனுக்களுக்கு உரிய தீர்வு வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய் கிழமை அன்று காலை 11 மணி முதல் 12.30 மணி வரை (நிலம் எடுப்பு, நில ஆக்கிரமிப்பு, பட்டா மாறுதல், பட்டா மேல்முறையீடு, பட்டா இரத்து, இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் நிலச்சீர்திருத்தம் தொடர்பான மனுக்கள்) சிறப்பு குறைதீரக்கும் முகாம் நடைபெற்று  வருகிறது. இந்த மாதத்திற்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமானது 26.11.2024 அன்று நடக்கவிருக்கிறது.

இதற்கான மனுக்கள் பதிவு காலை 10.00 மணி முதல் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து வட்டங்களைச் சார்ந்த வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல் துறை  மற்றும் பத்திரப்பதிவுத்துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். மேலும் இது குறித்த விவரம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஐ-பிரிவு, தொலைபேசி எண்: 04562-252742, விருதுநகரில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு  பொது மக்களுக்கு  தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இந்த மாதத்திற்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமானது 26.11.2024 அன்று நடக்கவிருக்கிறது. இதற்கான மனுக்கள் பதிவு காலை 10.00 மணி முதல் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து வட்டங்களைச் சார்ந்த வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல் துறை, பதிவுத்துறை உட்பட அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள்.

மேலும், இது குறித்த விவரம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஐ-பிரிவு, தொலைபேசி எண்: 04562-252742, விருதுநகரில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News