விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (21.03.2025) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.மேலும், கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, வனவிலங்குகளால் பயிர் சேதம் குறித்து நேர்முக கடிதம் அரசுச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும், வனவிலங்குகளால் பயிர் சேதம், மனித உயிர் சேதத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என துணை இயக்குநர், மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர் அவர்கள் தெரிவித்தார்.பின்னர், கண்மாய்கள் மற்றும் நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று முன்னுரிமை அடிப்படையில் அரசு அலுவலர்கள் அகற்ற வரும்போது அப்பகுதிக்குரிய பொதுமக்கள் தங்கள் கடமைகளை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட்டு முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு அறிவுறுத்தினார்கள்.
மேலும், சீமைக் கருவேல மரங்களை அரசு ஆணையின்படி அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சீமைக் கருவேல மரங்களை அகற்றினால் மட்டுமே வனவிலங்குகள் காட்டுப்பன்றிகள் பயிர் சேதத்தினை தடுக்க முடியும்.தென்னை மற்றும் மாமரத்திற்கு பயிர் காப்பீடு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தோட்டக்கலை துணை இயக்குநர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது. தென்னை மற்றும் மாமரங்கள் பயிர் காப்பீடு தொடர்பாக இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு வட்டாரங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி மேல் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
கண்மாய் தூர்வாருதல், சீரமைப்பு பணிகள் அதிக அளவில் நிதி தேவைப்படும் கண்மாய்களின் விபரங்களை பட்டியலிட்டு மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்ப மாவட்ட ஆட்சியர் அவர்களால் நீர்வளத்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இக்கூட்டத்தில் துணை இயக்குநர் (மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர்) திரு.தேவராஜ்,இ.வ.ப., வேளாண்மை இணை இயக்குநர் திருமதி க.விஜயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ.,) திருமதி நாச்சியார் அம்மாள் மற்றும் தோட்டக்கலை துணை இயக்குநர் உட்பட பல துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply