25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


வருவாய்த்துறை அலுவலர்களுடனான பணித்திறன் ஆய்வுக்கூட்டம்   மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வருவாய்த்துறை அலுவலர்களுடனான பணித்திறன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (22.11.2024) வருவாய்த்துறை அலுவலர்களுடனான அக்டோபர் - 2024 மாதத்திற்கான பணித்திறன் ஆய்வுக்கூட்டம்    மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சிறப்பாக பணியாற்றிய சிறந்த வருவாய் வட்டாட்சியர்களில், சிவகாசி வருவாய் வட்டாட்சியர் திரு.சி.லட்சம் அவர்களுக்கு முதல் பரிசும், திருச்சுழி வருவாய் வட்டாட்சியர் திரு.சிவக்குமார் அவர்களுக்கு இரண்டாம் பரிசும், சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் திரு.தி.ராமநாதன் அவர்களுக்கு மூன்றாம் பரிசும்,சிறப்பாக பணியாற்றிய சிறந்த தனி வட்டாட்சியர் (ச.பா.தி) களில் காரியாபட்டி தனி வட்டாட்சியர் (ச.பா.தி) திருமதி கி.தேவாமிர்தம் அவர்களுக்கு முதல் பரிசும், அருப்புக்கோட்டை தனி வட்டாட்சியர் (ச.பா.தி) (பொ) திரு.தே.அறிவழகன் அவர்களுக்கு இரண்டாம் பரிசும், வெம்பக்கோட்டை தனி வட்டாட்சியர் (ச.பா.தி) திருமதி வீ.கிருஷ்ணவேணி அவர்களுக்கு மூன்றாம் பரிசும்,

முழுப்புலம் பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த மண்டல துணை வட்டாட்சியர்களில் விருதுநகர் மண்டல துணை வட்டாட்சியர் திருமதி பா.தவஸ் பாண்டீஸ்வரி அவர்களுக்கும், அருப்புக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியர்-1 திரு.ஆ.பிரின்ஸ் ரஞ்சித்சிங் அவர்களுக்கும், அருப்புக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியர்-2 திருமதி சி.பானுமதி அவர்களுக்கும் முதல் பரிசும், திருச்சுழி மண்டல துணை வட்டாட்சியர் திரு.சி.சிங்கராஜ் அவர்களுக்கு இரண்டாம் பரிசும், சாத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் திரு.க.நவநீதன் அவர்களுக்கு மூன்றாம் பரிசும்,


உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த வட்டத் துணை ஆய்வாளர்களில் திருச்சுழி வட்டத்துணை ஆய்வாளர் திரு.பாலச்சந்திரன் அவர்களுக்கு முதல் பரிசும், சாத்தூர் வட்டத்துணை ஆய்வாளர் (பொ) திரு.மாரிமுத்து அவர்களுக்கு  இரண்டாம் பரிசும், வெம்பக்கோட்டை வட்டத்துணை ஆய்வாளர் திரு.விஜயகுமார்  அவர்களுக்கு மூன்றாம் பரிசும்,
அதிக எண்ணிக்கையில் கள ஆய்வு செய்து உட்பிரிவு மனுக்களை முடிவு செய்த சிறந்த வட்ட சார் ஆய்வாளர்களில் திருவில்லிபுத்தூர் வட்ட சார் ஆய்வாளர் திரு.வீரமணி அவர்களுக்கு முதல் பரிசும், சாத்தூர் வட்டம் சார் ஆய்வாளர் திரு.கண்ணன் அவர்களுக்கு இரண்டாம் பரிசும், விருதுநகர் மாவட்ட குறுவட்ட அளவர் திருமதி பாண்டிச்செல்வி அவர்களுக்கு மூன்றாம் பரிசும்,


சிறந்த தனி வட்டாட்சியர் (கு.பொ.வ)/வட்ட வழங்கல் அலுவலர்களில் இராஜபாளையம் தனி வட்டாட்சியர் திரு.மு.வடிவேல் அவர்களுக்கு முதல் பரிசும், சிவகாசி வட்ட வழங்கல் அலுவலர் திரு.அ.கோதண்டராமன் அவர்களுக்கு இரண்டாம் பரிசும், சாத்தூர் வட்ட வழங்கல்  அலுவலர் திரு.இரா.சுந்தரபாரதி அவர்களுக்கு மூன்றாம் பரிசும்,சிறந்த தனி வருவாய் ஆய்வாளர்களில் (கு.பொ) அருப்புக்கோட்டை வட்டம் தனி வருவாய் ஆய்வாளர் (கு.பொ.வ.) திரு.சு.சசிகுமார் அவர்களுக்கு முதல் பரிசும், இராஜபாளையம் வட்டம்  தனி வருவாய் ஆய்வாளர் (கு.பொ.வ.) திரு.ஆர்.தர்மராஜ்  அவர்களுக்கு இரண்டாம் பரிசும், சிவகாசி வட்டம் தனி வருவாய் ஆய்வாளர் (கு.பொ.வ.) திரு.மா.கோட்டையராஜ் அவர்களுக்கு மூன்றாம் பரிசினையும் மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராஜேந்திரன், சிவகாசி சார் ஆட்சியர்  திருமதி ப்ரியா ரவிச்சந்திரன்,I A S, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொ) மரு.பிர்தௌஸ் பாத்திமா, வருவாய் கோட்டாட்சியர்கள், வருவாய் வட்டாட்சியர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News