வரவேற்பு அதிகமாக இருக்கும், ஆன்லைனிலேயே சமையல் வகுப்புகளை எடுத்து சம்பாதிக்க முடியும்
கலை, அறிவியல். விளையாட்டு என அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்துவருகிறார்கள். பெண்கள் இல்லாத துறை இன்று எங்கேயும் இல்லை. அரசியல் களத்திலும் பெண்கள் சாதித்து வரும் காலகட்டம் இது. விண்வெளித்துறையில் பெண்களின் பங்கு வியத்தகு வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது. வெளி உலகில் பெண்கள் சாதித்து வரும் காலத்தில் சமையல் தெரியாமல் சிரமப்படும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வெளியூர்களில் தனியாக வேலை பார்க்கும் ஆண்களுக்கும் சமையல் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் இந்தகால கட்டத்தில் உள்ளது. அதேநேரத்தில் கல்வி ஞானம் இல்லாவிட்டாலும் பல பெண்கள் நல்ல சமைக்க தெரிந்தவர்களாகவும், சமையல்கலையில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருப்பார்கள். ஆண்களிலும் சமையல் கலை நிபுணர்கள் உள்ளனர். இன்றைய காலகட்டத்தில் சமையல் கலையை பிறருக்கு கற்றுத்தருவது சிறந்த தொழிலாக பார்க்கப்படுகிறது. முகநூல், யூ-டியூப் போன்றவற்றில் சிலர் தனியாக சேனல் தொடங்கி சமையல் கலையை கற்றுக்கொடுத்து வருகிறார்கள். இதன் மூலம் பிரபலம் அடைந்தவர்களும் உள்ளனர். புதுமையான உணவு வகைகளை சமைக்க கற்றுத்தந்தால் அதற்கான வரவேற்பும் அதிகமாக இருக்கும். இத்தகையவர்களுக்கு இணையதள வசதி கைகொடுக்கிறது. ஆன்லைனிலேயே சமையல் வகுப்புகளை எடுத்து சம்பாதிக்க முடியும். வீடுகளிலும் சமையல் வகுப்புகளை எடுத்தும் சம்பாதிக்க வாய்ப்புகள் உள்ளன.
0
Leave a Reply