செல்போனே கதி என்று திருமண வீடுகளில் கல கலப்பு கிடையாது.
சுமார் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் யாருடைய வீட்டிலாவது திருமணம் என்றால் ஊரே கலகலப்பாக இருக்கும். ஒலிபெருக்கியின் அலறலும், சீரியல் பல்பு தோரணமும் ஊருக்கே ஓர் இளமையை கொண்டு வந்தது போல் இருக்கும்.வாண்டுகள் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டும், அடித்துப்பிடித்து விளையாடிக் கொண்டும் இருப்பார்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் இழுத்துப்போட்டுக் கொண்டு எல்லா வேலைகளையும் செய்வார்கள். அப்போதெல்லாம் குடிநீர் குழாய் வசதி கிடையாது என்பதால் இளம்பெண்கள் ஊர் கிணற்றுக்கு சென்று தண்ணீர் எடுத்து வருவார்கள். அவர்கள் சென்ற பிறகும் கிணற்றடியில் பூவாசம் வீசும். அரிசி ஆலைகள் வரும் முன்பு திருமணத்திற்கு தேவையான அரிசியை தயார் செய்ய நெல் குத்துவதற்கும் அவர்கள் சளைத்ததில்லை.
உறவுக்காரர்கள் ஓரிரு நாட்களுக்கு முன்பே வந்துவிடுவார்கள் என்பதால் பந்தலில் விரிக்கப்பட்டு இருக்கும் ஜமுக்காளத்தில் அமர்ந்து விடிய விடிய ஊர்க்கதைகளையெல்லாம் பேசுவார்கள். சமையல்காரர் அவ்வப்போது 'டீ' கொண்டு வந்து கொடுப்பார். இளவட்டங்களின் கேலி, கிண்டல் என்று ஒரே கலகலப்பாக இருக்கும். இளவட்ட பசங்களே பந்தி பரிமாறுவார்கள். "மாப்ள என் ஆளு அங்க உட்கார்ந்திருக்கு... நல்லா கவனி"... என்று ஆங்காங்கே குரல்களும் கேட்கும்.திருமணம் என்பது ஒரு குடும்பத்துக்கு மட்டுமின்றி அந்தஊருக்கேஒருமகிழ்ச்சிகரமானநிகழ்வாகஉறவுகளைகொண்டாடும்வாய்ப்பாகஇருந்தது.அந்தகுதூகலம், கொண்டாட்டத்தையெல்லாம் இப்போது பார்க்க முடிவது இல்லை.
நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களில்கூட வாழ்க்கை பரபரப்பா கிவிட்டது. வேகவேகமாக வருகிறார்கள்;சாப்பிடுகிறார்கள்; 'மொய்'கவரை நீட்டுகிறார்கள்; பறந்துவிடுகிறார்கள். யாருடனும் நின்று நிதானமாக பேசுவதற்கோ, விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்கோ நேரம் கிடைப்பது இல்லை. கிடைத்தாலும் அதை பயன்ப டுத்திக் கொள்ளாமல் செல்போனை நோண்டிக்கொண்டு குனிந்த தலை நிமிராமல் இருக்கிறார்கள்.
விசேஷ வீடுகளில் 'பார்ட்டி'என்ற பெயரில் மது அருந்தும் பழக்கம் தற்போது அதிகரித்து இருப்பதையும்,அதன் தொடர்ச்சி யாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதையும் பார்க்க முடிகிறது. பஸ், ரெயில், பூங்கா, கடற்கரை, உறவினர் இல்லம் என எங்கு சென்றாலும் மற்றவர்களுடன் அளவளாவுவதை குறைத்துக் கொண்டு செல்போனே கதி என்று கிடக்கிறார்கள்.
0
Leave a Reply