பல் கூச்சம் ,ஈறு வலி சரியாக
பல் கூச்சம் என்பது பற்களின் வேர்ப்பகுதிகளில் இருக்கும் நரம்புகள் பலவீனமடைந்து, ஈறுகளில் பிரதிபலிக்கும் உணர்வாகும்.
கிருமிகளின் தொற்று, பற்களின் சிதைவு, அல்லது எனாமல் போகும்படி அதிக செறிவு மிகுந்த பேஸ்ட், நிறைய அமிலங்கள் உள்ள குளிர்பானங்கள் குடிப்பது ஆகியவற்றால் இது போன்று கூச்சம் வரும்.
நாம் உண்ணும் குளிர்ந்த மற்றும் சூடான உணவுகள் பற்களின் நரம்புகளுக்கு செல்லாமல் எனாமல் தடுக்கிறது.இந்த எனாமல் பாதிப்படையும் போது சூடான அல்லது குளிர்ந்த உணவுகள் பற்களின் நரம்புகளில் பட்டதும் சுரீரென்று ஒரு வலி உண்டாகிறது.
தினமும் பல் துலக்கிய பின், வெதுவெதுப்பான நீரில், சிறிது கல்உப்பு சேர்த்து வாய் கொப்பளித்து வர பல் கூச்சம் குணமாகும்.பல் வலி மற்றும் ஈறு வீக்கம் உள்ள பகுதிகளில், கிராம்பு எண்ணெய், அல்லது கிராம்பு பொடியை வைத்தால், பல்வலி உடனடியாக குறையும்.
தினமும் பல் துலக்கிய பின், கொய்யா இலை மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைத்த நீரில், வாய் கொப்பளித்து வர,பல்வலி,ஈறு வீக்கம், பல் ஆட்டம் , பல் கூச்சம் சரியாகும்.
0
Leave a Reply