உலக தேங்காய் தினம்
செப்டம்பர் 2ம் தேதி உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது உலகிலேயே அதிகளவில் தேங்காய் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது.2021ஆம் ஆண்டில் உலக அளவில் ஒட்டுமொத்த தேங்காய் உற்பத்தியில்34 சதவீதத்தை இந்தியா பூர்த்தி செய்தது. பெரும்பாலும் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தேங்காய் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. தினசரி சமையல்,இந்தியர்களின் கலாசாரம், பழக்க வழக்கங்களிலும் முக்கிய இடம்பெற்றுள்ளது. உடலில் நீரிழப்பைத் தடுப்பதற்கு தேவையான பொட்டாசியம், சோடியம் இரண்டையும் இளநீர் வழங்குகிறது. இளநீரில் நம் உடலுக்குத் தேவையான பல்வேறு தாதுக்கள் அடங்கியுள்ளன.தேங்காய் நீரில் இருக்கும் எலக்ட்ரோலைட்டுகள் உடலில் நீரிழப்பைத் தடுத்து சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.தேங்காயில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும் அமினோ அமிலங்கள் அதிகமாகவும், நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமாணத்திற்கு உதவி, சர்க்கரை அளவை இயல்பு அளவில் வைத்திருக்கவும், இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்தவும் உதவுவதாக உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.தேங்காயைப் போன்று அதிலிருந்து எடுக்கப்படும்எண்ணெயும், ஆரோக்கியமான கொழுப்பு ஆதாரமாக இருக்கிறது. இது உதடுகள், தோல் மற்றும் தலைமுடிக்கு ஒரு சிறந்த ஈரமூட்டியாக (மாய்ஸ்ச்சரசைர்) விளங்குகிறது. இந்துக்கள் பூஜைக்கு முக்கியமாக தேங்காய் இல்லாமல் பூஜை நிறைவு அடையாது.
0
Leave a Reply