இட்லி, தோசைக்கு எள்ளு சட்னி
தேவையான பொருட்கள்:
கருப்பு அல்லது வெள்ளை எள்ளு-1 கப்
துருவிய தேங்காய் -½கப்
காய்ந்த சிவப்பு மிளகாய் - 4-5
பூண்டு - 3 பல்
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு -தேவையான அளவு
தண்ணீர்-தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - ½டீஸ்பூன் உளுத்தம்பருப்பு -½ டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
முதலில் எள்ளை எண்ணெய் இல்லாமல் மணம் வரும் வரை லேசாக வறுத்து ஆறவிடுங்கள்.
அதே கடாயில் காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டை லேசாக வதக்குங்கள்.
மிக்ஸியில் வறுத்த எள்ளு, தேங்காய், மிளகாய், பூண்டு, புளி, உப்பு மற்றும் தேவையான அளவு
தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக்கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த
சட்னியில் சேர்க்கவும்.
சுவையான, ஆரோக்கியமான எள்ளு சட்னி தயார்!
குறிப்பு : இந்த சட்னி இட்லி, தோசை, அடை, பணியாரம் ஆகியவற்றுடன் சாப்பிட மிகவும்
சுவையாக இருக்கும். மேலும் எள்ளு உடலுக்கு நல்ல கால்சியம் மற்றும் ஆரோக்கியமான
கொழுப்புச் சத்துக்களை வழங்கும்.
0
Leave a Reply