இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் அரையிறுதியில் தான்வி
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நேற்று காலிறுதி போட்டிகள் நடந்தன.பெண்கள் ஒற்றையரில் இத்தொடரின் ‘நம்பர்–5’, உலகத் தரவரிசையில் 126வது இடத்திலுள்ள இந்தியாவின் தான்வி கன்னா, 99 வது இடத்தி லுள்ள, இத்தொடரின் ‘நம்பர்-2' வீராங்கனை, எகிப்தின் மென்னா வாலித்தை எதிர்கொண்டார்.இதில் சிறப்பாக செயல்பட்ட தான்வி, 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் 114வது இடத்திலுள்ள மலேசிய வீராங்கனை கோ ஜி ஜூவானை சந்திக்க உள்ளார்.
இந்தியாவின் அஞ்சலி, மலேசியாவின் கோ ஜி ஜுவானிடம் 1-3 மற்றொரு காலிறுதியில் என தோல்வியடைந்தார்.இந்தியாவின் பூஜா ஆர்த்தி, எகிப்தின் நுார் ககபியிடம் 0-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சுராஜ் குமார், திவாகர் சிங், ஆர்யவீர், சந்தேஷ் ரிவிகுமார், சுற்றில் இரண்டாவது முறை தோல்வியடைந்தனர்.
0
Leave a Reply