ஒலிம்பிக் நிறைவு விழா அணிவகுப்பில் மனுபாகருக்கு கொடி கவுரவம்
பிரான்சின் பாரிசில் 33-வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு போட்டி நடந்தன. இதன் தகுதிச்சுற்றில் இந்தியா சார்பில் பங்கேற்ற மனு பாகர் மொத்தம் 590.24 புள்ளியுடன் இரண்டாவது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார்.நேற்று பைனல் நடந்தது. ஏற்கனவே 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் கலப்பு அணிகள் பிரிவில் தலா ஒரு வெண்கலம் என ஒரு வெண்கலம் என இரு பதக்கம் வென்றிருந்தார். மன பாகர் மீண்டும் அசத்தினால் ஒரே ஒலிம்பிக் கில் ஹாட்ரிக் பதக்கம் வென்ற வரலாறு படைக்கலாம் என்ற நிலையில் துவக்கத்தில் சற்று சரிவை சந்தித்தார். 28 புள்ளியுடன் 3வது இடத்தை ஹங்கேரியின் இடத்தை ஹங்கேரியின் வெரோனிகாவுடன் பகிர்ந்து கொண்டார்.இதையடுத்து 3வது இடம் யாருக்கு என்பதை உறுதி செய்ய ஷீட் ஆப் நடந்தது. இதில் இருவருக்கம் தலா 5 வாய்ப்பு தரப்பட்டன. மனு பாகர் 2 வெரோனிகா 3 என சுட்டனர். இதனால் மனு பாகர் 4வது இடம் பிடித்து சோகத்துடன் வெளியேறினார்.
.மனுபாகருக்கு கொடி கவுரவம் பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய மூவர்ணக்கொடியை ஏந்தி வரும் கவுரவும் துப்பாக்கி சூடுதலில் 2 பதக்கம் வென்ற மனு பாகருக்கு வழங்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply