25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


சுற்றுச்சூழலை காக்க சூரிய ஒளி 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சுற்றுச்சூழலை காக்க சூரிய ஒளி 

தாவரம் சூரிய ஆற்றலைக் கொண்டு கரியமில  வாயுவையும் நீரையும் பிராணவாயு வாகவும், அதன் உணவாகவும் மாற்றுகிறது. இதே முறையைப் பின்பற்றிச் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாயுக்களைப் பயனுள்ள பொருட்களாக மாற்ற முடியும் என கனடா நாட்டைச் சேர்ந்த எம்சிகில் பல்கலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தற்போது நம் வாகனங்களில் பயன்படுத்தும் புதைப்படிவ எரிபொருட்கள் எரியும்போது மீத்தேன், கரியமில வாயு ஆகியவை வெளிப்படுகின்றன.இவற்றால் சுற்றுச்சூழல் பாதிக்கும். எனவே இவற்றைத் தங்கம், பலேடியம், கேலியம் நைட்ரைட் ஆகியவற்றை வினையூக்கிகளாகக் கொண்டு க்ரீன் மெத்தனலாகவும், கார்பன் மோனாக்சைடாகவும் மாற்றுகின்ற முறையைக் கண்டறிந்துள்ளனர். இவ்வாறு மாற்ற சூரிய ஒளியைப் பயன்படுத்தி உள்ளனர். இந்த வேதிவினைக்குக் குறைவான ரசாயனங்களே போதுமானவை. அதிகமான வெப்பநிலையும் தேவைப்படாது.

கார்பன் மோனாக்சைடை மருத்துவ ஆய்வுகள், சிகிச்சைகளுக்குப் பயன்படுத்த முடியும். இது தவிர இதை நெகிழிகளின் தயாரிப்புக்கும், வாகனங்களுக்கான எரிபொருளாகவும் பயன் படுத்த முடியும். இந்தப் புதிய முறை மேம்படுத்தப்பட்டு விரைவில் நடைமுறைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அப்படி வந்தால், ஒரே நேரத்தில் சுற்றுச் சூழலையும் காப்பாற்றலாம், பயனுள்ள பொருட்களைக் குறைந்த விலையில் தயாரித்துப் பொருளாதார ரீதியாகவும் பயனடையலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News