துரந்த் கோப்பை: காலிறுதிக்கு முன்னேறியது மோகன் பகான் அணி.
துரந்த் கோப்பை கால்பந்து தொடரில் மோகன் பகான் அணி காலிறுதிக்கு முன்னேறியது. லீக் போட்டியில் சி.ஐ.எஸ்.எப். புரோடக்டர்ஸ் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இந்தியாவில் 135வது துரந்த் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 24 அணிகள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றன.
கொல்கத்தாவில் நடைபெற்ற ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் மோகன் பகான் அணி, மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (சி.ஐ.எஸ்.எப்.) புரோடக்டர்ஸ் அணியை எதிர்கொண்டது.
ஆட்டம் தொடங்கியது முதலே ஆதிக்கம் செலுத்திய மோகன் பகான் அணி, கோல் மழை பொழிந்தது. முடிவில் 6-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
0
Leave a Reply