25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி 

 வெயிலின் தாக்கத்தால் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில்  பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் சுட்டெரித்தது. இதையடுத்து மாலையில் திடீரென குளிர்ந்தகாற்று வீசத்தொடங்கியது.

பின்னர் சிறிது நேரத்தில் இடியுடன் பலத்தமழை பெய்தது. பஞ்சு மார்க்கெட் நேரு சிலையில் இருந்து பழைய பஸ் நிலையம், மலையடிப்பட்டி கணபதியாபுரம். அரசு  மகப்பேறு மருத்துவமனை, காந்தி கலை மன்றம், சங்கரன்கோவில் முக்கு, புதிய பஸ் நிலையம், சொக்கர்கோவில்,  ரெயில்வே மேம்பாலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.  
 மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவ , பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *