மாருதி சுஸூகி ஃபிராங்க்ஸ் காரை, வெளிநாட்டு மார்க்கெட்டிலும் இந்தியா ஏற்றுமதி செய்கிறது இந்திய தயாரிப்புக்கு மவுசு
மாருதி சுஸூகி நிறுவனம், ஃபிராங்க்ஸ் காரை அறிமுகமான முதல் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான கார்களை மிக வேகமாக விற்பனை செய்து வருகிறது. இந்திய மார்க்கெட்டிலும், வெளிநாட்டு மார்க்கெட்டிலும், சுஸூகி நிறுவனம் உருவான ஜப்பான் நாட்டிற்கே இந்த தயாரிப்பை இந்தியா தான் ஏற்றுமதி செய்கிறது என்ற பெருமையை பெற்றுள்ளது. மாருதி நிறுவனம் தனது சுஸூகி ஃபிராங்க்ஸ் என்ற காரை கடந்த 2023ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் முதன்முதலாக காட்சிப்படுத்தி. ,கடந்த 2023 ஏப்ரல் 24ம் தேதி விற்பனைக்காக அறிமுகமானது. இந்த கார் அறிமுகமான 10 மாதத்திலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனையானது.தற்போது 2 லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனையாகியுள்ளது , இந்த கார் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. முக்கியமாக லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு இந்த கார்கள் ஏற்றுமதியாகும் நிலையில், தற்போது ஜப்பானிற்கும் ஏற்றுமதியாகும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது..
இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் உள்ள ஆலையில் தான் இந்த கார் தயாரிக்கப்படுகிறது. இந்த காரின் வடிவமைப்பை சுஸூகி நிறுவனம் செய்தாலும், இந்த கார் இந்தியாவில் தான் தயாரிக்கப்படுவதால் ஜப்பானில் இந்த காருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.முதற்கட்டமாக மாருதி நிறுவனம் தனது குஜராத் ஆலையில் இருந்து 1600 ஃபிராங்க்ஸ் கார்களை குஜராத் துறைமுகம் வழியாக ஜப்பானிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.. ஜப்பானிலிருந்து இந்தியாவிற்கு வந்த ஒரு கம்பெனி இந்தியாவில் வாகனங்களை தயாரித்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்தியா வளர்ந்துள்ளது தற்போது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை பயணிகள் வாகனங்களை ஏற்றுமதி செய்வதில் முன்னணி நாடாக இருக்கிறது. மாருதி நிறுவனம் தான் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. கடந்த நிதியாண்டில் மற்றும் மொத்தம் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இரண்டு 2.8 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.இந்நிறுவனம் இந்தியாவில் நடக்கும் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 42 சதவீத பங்கை வைத்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட பாதி கார்கள் மாருதி நிறுவனம் தான் ஏற்றுமதி செய்கிறது இந்த நிறுவனத்தின் வாகனங்களுக்கு உலக நாடுகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் மாருதி நிறுவனம் சிம்பிளான கார்களை தயாரிப்பது தான்.
இந்தியா போன்ற நாடுகளில் மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் காருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் அதே வேளையில் உலக நாடுகளிலும், இந்த காருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இது இந்தியாவிற்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி தான். இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு இந்த கார் ஏற்றுமதியாகிறது ஜப்பானுக்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் மீது தான் மவுசு இருக்கிறது..
0
Leave a Reply