முட்டைக்கோஸ் சட்னி
தேவையான பொருட்கள் - முட்டைக் கோஸ் கால் கிலோ, பெரிய வெங்காயம் 2, தக்காளி 2, பச்சை மிளகாய் 3, இஞ்சி 1 துண்டு, தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 3, புளி சிறிதளவு, கடுகு அரை டீஸ்பூன், உளுந்து 2 டீஸ்பூன், பெருங்காயம் எண்ணெய்அரை டீஸ்பூன்,உப்பு தேவைக்கு, 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:கோஸ், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைக் கழுவி பொடியாக நறுக்குங்கள். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு. உளுந்து, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துப் பிறகு வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் சிறிது வதங்கியதும் பச்சை மிளகாய், இஞ்சி, கோஸ் சேர்த்து வதக்குங்கள். கோஸ் பச்சை வாடை போக வதங்கியதும் தேங்காய், தக்காளி, புளி, உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி இறக்குங்கள். ஆறியதும் நைசாக அரைத்தெடுங்கள்.கோஸ் சட்னி இட்லி, தோசைக்கு நல்ல காம்பினேஷன்.
0
Leave a Reply