ரொட்டி புலவு
தேவையான பொருட்கள் :- ரொட்டித் துண்டுகள் 4, காரட் பட்டாணி 125 கிராம், பல்லாரி வெங்காயம் 1, தக்காளிப் பழம் 1, எலுமிச்சம் பழச் சாறு தேவையான அளவு, ஏலக்காய் 2, கறிமசாலா பட்டை 1 துண்டு சிறியது, மிளகு 8 அல்லது 10, மிளகாய்ப் பொடி கால் ஸ்பூன், அரிசி 1 கப், உப்பு தேவையான அளவு, நெய் 1 ஸ்பூன்.
செய்முறை - ரொட்டித் துண்டுகளைச் சிறிய துண்டுகளாக வெட்டி நெய்யில் வதக்கிக் கொள்ளவும். அரிசியைக் களைந்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். வாணலியில் பெரிய ஸ்பூன் அளவு நெய்யை விட்டு, மிளகு, ஏலக்காய், பட்டை மூன்றையும் போட்டு வெங்காயமும், போட்டு பொன் நிறமாக வந்த பிறகு வேகைவைத்த காய்கறிகளையும், தக்காளிளையும், நறுக்கி அதில் போட்டு 2, 3 நிமிடங்கள் வதக்கவும்.அரிசி, உப்பு, மிளகாய்ப் பொடி, பெருஞ்சீரகத் தூள் போட்டு 2 கப் தண்ணீர் விட்டு மூடி வைக்கவும், முக்கால் பதம் வெந்த பிறகு எலுமிச்சம்பழச் சாற்றை விட்டு மிதமாக சூடாகும் வண்ணம் கொதிக்க வடவும், அரிசி நன்றாக வெந்த பிறகு கீழே இறக்கி வறுத்த ரொட்டித் துண்டுகளை அதில் போட்டுக் கலந்து சூடாகப் பரிமாறவும்.
0
Leave a Reply