வில்வித்தையில் கலக்கும் அன்கிதா, தேவரா
பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை கலப்பு அணிகளுக்கான ரவுண்டு 16 போட்டியில் இந்தியா இந்தோனேஷியா அணிகள் மோதின. இந்தியா சார்பில் அன்கிதா பகத்திராஜ். பொம்ம தேவரா ஜோடி பங்கேற்றது. இதில் இந்திய அணி 5-1 (37-26, 38-38, 38-37) என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அடுத்து நடந்த காலிறுதியில் இந்தியா, ஸ்பெயின், அணிகள் மோதின. இதில் மீண்டும் அசத்திய இந்திய ஜோடி 5-3 (38-37,38-38, 36-37 37-36)என வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒலிம்பிக் வில்வித்தையில் அரையிறுதிக்கு முன்னேறி முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தனர்.
0
Leave a Reply