ஸ்னூக்கர்
காமன் வெல்த் பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் மொரிசியசில் முதன் முறையாக நடந்தது. பெண்களுக்கான பைனலில் (8 பந்து பிரிவு) இந்தி யாவின் வித்யா பிள்ளை, தென் ஆப்ரிக்காவின் மரினா ஜேக்கப்ஸ் மோதி னர் . துவக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட வித்யா,5-1 என முன்னிலை பெற்றார். இதன் பின் போட்டி 5-5 என சமன் ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய 'ஷூட் அவுட்' நடந்தது. இதில் வித்யா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றினார்.
இந்தியாவின் சித்ரா மகிமைராஜ், சிங்கப் பூரின் வீனஸ் லிம் ஜின்யி மற்றொரு பைனலில் (10 பந்து) மோதினர். இப்போட்டி 5-5 என சமன் ஆனது. பின் நடந்த 'ஷூட் அவுட்டில்' சித்ரா 2-4 என தோல்வியடைந்து, வெள்ளி வென்றார். பெண்களுக்கான 6 பந்து பிரிவில் இந்தியாவின் அனுபமா, கீர்த்தனா அரையிறுதியில் தோல்வியடைந்து, வெண்கலம் பெற்றனர்.ஆண்களுக்கான ஸ்னுாக்கர் காலிறுதியில் இந்தியாவின் அனுபவ வீரர் பங்கஜ் அத்வானி, 2-3 என தோல்வியடைந்தார்.
0
Leave a Reply