25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல் குறிப்பு

May 13, 2023

தேங்காய் சட்னி கூடுதல் சுவையுடன்' இருக்க

பீர்க்கங்காயினை எப்பொழுதும் தோல் நீக்கி தான் சமைப்போம். அந்த தோலினை வைத்து சட்னி செய்தால் சுவையாக இருக்கும்.தேங்காய் சட்னியை கடைசியில் தாளித்து சேர்ப்போம். அதற்கு பதிலாக அதே தாளித்த பொருட்களை சட்னியில் சேர்த்து அரைத்தால் கூடுதல் சுவையுடன்' இருக்கும்.வெங்காயம் நன்றாக வதங்கிய உடன், தேங்காய் விழுதினை சேர்த்து வதக்கி இறக்க வேண்டும். பின்னர் அவற்றை அரைத்தால் வெங்காயதேங்காய் சட்னி தயார்.வதக்கிய வெங்காயத்துடன் புதினா சேர்த்து சட்னி செய்தால் வெங்காயபுதினாசட்னி தயார்.தக்காளி சட்னி செய்யும் போது நன்றாக பழுத்த தக்காளியில் செய்தால் சுவையாக இருக்கும்.

May 12, 2023

தோசை மொறு மொறுப்பாக வர.....

தோசை சுடுவதற்கு சிலநிமிடங்கள் முன்னதாக, தயாராக உள்ள தோசை மாவில் சர்க்கரை சேர்த்து - கலந்து தோசை சுட்டால் தோசை மொறுமொறுப்பாக வரும்.இட்லி சுடும்போது - சட்டியில் சுட வைக்கும் தண்ணீரில் காய்ந்த கறிவேப்பிலை இலைகள் சிலவற்றை சேர்த்து கொதிக்க வைத்து இட்லி சுட - இட்லிகம கம வென மணக்கும் மிருதுவான சப்பாத்திக்கு மாவு பிசையும் போதே மாவில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பிசைவது நல்லது. அதேப்போன்று பிசைந்த மாவினை குறைந்தது 30 நிமிடத்திற்கு ஊற வைக்க நல்ல பலன் கிடைக்கும்.வீட்டில் மாமிசம் சமைக்கும் போது மாமிசங்களை,விரைவாக வேக வைக்க, சிறிதளவு பாக்கு சேர்க்கலாம். இது மாமிசங்களை வேகமாக வேக வைப்பதுடன், உணவின் சுவையை கூட்டவும் உதவும்.வெறும் கடாயில் கடுகு, மஞ்சள் தூள், மிளகாய், வெந்தயம் சேர்த்து வறுத்து - பின் பொடியாக அரைத்து குழம்பின் இறுதி நிலையில் சேர்க்க வற்றல் குழம்பின் சுவை அதிகரிக்கும்.வீட்டில் முட்டைக்கோஸ் பொரியல் செய்யும் போது அந்த முட்டைக்கோஸின்' தண்டை சாம்பாரில் சேர்த்து சமைக்க, சாம்பாரின் சுவை அதிகரிக்கும்சமைத்த உணவில் உப்பின் "சுவை அதிகமாகிவிட்டால்,ஒரு சிறு உருளைக்கிழங்கை நறுக்கி குழம்பில்சேர்த்துவிட்டால்உப்பின்சுவை குறைந்துவிடும்.

May 11, 2023

குக்கரில் இருந்து தண்ணீர் வெளிவருவதை தடுக்க

பருப்பு வேக வைக்க பயன்படுத்தும்குக்கரில் இருந்து தண்ணீர் அதிகமாகி விட்டால் பருப்பு தண்ணீர் வெளியில் வரும். இதனை தவிர்க்க பருப்பு கொதித்த பின் குக்கரின் மூடியை மூடி வைக்க வேண்டும். அதன் பிறகு நான் விசிலை போட வேண்டும். இப்படி செய்தால் தண்ணீர் அதிகமாக இருந்தாலும் குக்கரில் இருந்து தண்ணீர் வெளியே வராமல் பருப்பு எளிதாக வெந்து வரும்.எனவே மிதமான தீயில் குக்கரை வைத்து சமைத்தால் நீர் வெளியே வராது .உங்கள் குக்கரின் மூடியை சுற்றி எண்ணையை லேசாக தேய்த்து விடுங்கள், இதன் மூலம் தண்ணீர் வெளிவரும் பிரச்சனை ஏற்படாது. அது மட்டும்இல்லாமல் நீங்கள் வேக வைக்கும் பொருட்களோடு ஒரு சொட்டு எண்ணெய் சேர்த்து விடுவதின் மூலமும் இந்த பிரச்சனை ஏற்படாது..பிற சமயங்களில் உங்கள் குக்கரில் இருக்கும் விசிலில் அழுக்கு, உணவு துகள்கள் சிக்கி இருக்கும்.அதனை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் நீராவி வருவது சரியாக இருக்காது. எனவே குக்கரின் விசில் முழுவதையும் நீங்கள் சுத்தப்படுத்தி அடைப்புக்களை நீக்கி விடுவதின் மூலம் இந்த பிரச்சனை ஏற்படாது.நீங்கள் பிரிட்ஜில் வைத்திருக்கும் குளிர்ந்தநீரை பயன்படுத்தி சமைப்பதின் மூலம் உங்கள் குக்கரில் இருந்து தண்ணீர் வெளிவருவதை தடுக்க முடியும்.சில மாதங்களுக்குப் பிறகு குக்கர் மூடியின் ரப்பர் தளர்வாகிவிடும். இதனால் கூட குக்கரில் இருந்து தண்ணீர் வெளியேறும் . ரப்பர் தளர்வாக இருந்தால், அதை உடனே மாற்ற வேண்டும். ரப்பர் சீக்கிரம் தளர்வாவதை தவிர்க்க சமைத்த பிறகு குளிர்ந்த நீரில் ரப்பரைப் போட்டால், அது நீண்ட காலம் நீடிக்கும். சிலர் குக்கர் ரப்பர்களை ஃபிரிட்ஜ் ஃப்ரீசரில் வைப்பார்கள். அவ்வாறு வைத்தால் லீக்கேஜ் பிரச்சனையும் வராது .

May 08, 2023

தாளிக்கும் பொழுது கடுகு சிதறாமல் இருக்க....

ரொட்டி சப்பாத்தி இவற்றுடன்தேனை சேர்த்து சாப்பிட்டால் சக்தி அதிகரிக்கும், மிகவும் பழுத்து நொந்து போன பழங்களையோ அல்லது பழுக்காத பழங்களையோ சாப்பிட்டால் வயிறு வலிக்கும்,இஞ்சியை மிக்சியில் அரைத்துச் சாறு எடுத்து வடிகட்டி கொள்ளவும். புளியைக் கரைத்து உப்பு போட்டுக் கொதிக்க வைத்து அதில் இஞ்சி சாற்றைக் கலந்து சிறிது நேரம் கொதித்ததும் இறக்கி, ஊறுகாய் போல் ருசியாக இருப்பதோடு ஜீரண சத்தியையும் அதிகரிக்கும்,அரிவாள்மனை, தேங்காய்த்துருவி, காய்கறிகளை நறுக்கப் பயன்படுத்தும் கத்தி போன்றவைகளிலுள்ள துருவைப் போக்க இவற்றின் மீது ஒரு துண்டு வெங்காயத்தைக் கொண்டு   தேய்த்தால், துரு  போய் விடும்.சமையலில் தாளிக்க கடுகு சேர்க்கும் பொழுது    கடுகு  சிதறாமல்   இருக்க.,  கடுகு போட்ட பின் கொஞ்சம் ஒரு சிட்டிகை அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். கடுகு வெடித்தாலும் மேலே எழுந்து சிதறாது. மஞ்சள் தூளின் பச்சை வாசமும் எண்ணெயில் போய்விடும்.

May 06, 2023

டீத்தூளின் கரை பாத்திரத்தில் ஒட்டாது,

காபி தூள் பாட்டிலாக வாங்கிறவர்கள், பாட்டிலின் வாய்ப்பகுதியில் இருக்கும், அலுமினிய பேப்பர் அடைப்பை முழுமையாக நீக்கி விடவேண்டாம். அதில் ஒன்றிரண்டு துளைகள் போட்டு அதன் வழியாக காபிதூளைக் கொட்டினால், அதிக நாட்கள் பாதுக்காலாம். காபித்தூள் பாட்டிலில் ஸ்பூன் போட்டு வைப்பது நல்லதல்ல.அப்பளம் வறுக்கும் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து விட்டு, அப்பளம் வறுத்தால் அப்பளம் அதிக மொறு மொறுப்பாகவும், நல்ல நிறமாகவும் இருக்கும்.பெரிய துண்டுகளாக இருக்கும் ஐஸ்கிரீமை பரிமாறும் போது வெட்ட பயன்படுத்தும் ஸ்பூனை அடிக்கடி தண்ணீரில் முக்குங்கள். வேலை எளிதாக இருக்கும்.டீபோடும்போது முதலில் தண்ணீருடன் தேவையான  சர்க்கரை சேர்த்து கொதிக்க விடுங்கள். பிறகு டீத்தூள் சேர்த்து வடிகட்டி, சூடான பால் சேர்த்து பாருங்கள். டீ திடமாகவும், சுவையாகவும் இருக்கும்.  முதலிலேயே சர்க்கரை சேர்ப்பதால் டீத்தூளின் கரை பாத்திரத்தில் ஒட்டாது, பாத்திரத்தைக் கழுவுவது எளிது.சாம்பாரில் உப்பு அதிகமாகிவிட்டால் அதனுடன் நறுக்கியஉருளைக்கிழங்கைச் சேர்க்கும் உத்தி ஊரறிந்த ரகசியம். சோயாஉருண்டைகளை வேகவைத்து சேர்ப்பதும் பலன் தரும். சோற்று உருண்டையைப் போட்டாலும் உப்பு குறைய வாய்ப்பு இருக்கிறது. 

May 05, 2023

எலுமிச்சம்பழம்

எலுமிச்சம் பழத்தை வாங்கி அதனை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் பல நாட்களுக்கு வீணாகாமல் பாதுகாக்கலாம்.எலுமிச்சம்பழம் உலர்ந்து விட்டால் கொதிநீரில் ஐந்து நிமிடம் போட்டு பிறகு சாறு பிழிந்தால் நிறையச்சாறு கிடைக்கும்.எலுமிச்சம் பழத்தை நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு எடுத்து வைத்திருந்தால் ஒரு வாரம் வரை வாடாமலும் ,கெட்டுப் போகாமலும் இருக்கும்.எலுமிச்சை ஊறுகாய் போடுவதற்கு முன் நன்றாக கொதிக்கும் நீரில் ஒரு. டீஸ்பூன் சர்க்கரை மற்றும் பழங்களை போட்டு மூடிவைத்து விட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து நறுக்கி, ஊறுகாய் போட்டால் மறுநாளே ,உபயோகிக்கலாம். கசப்பு தன்மை இருக்காது.

May 04, 2023

குளு குளு கோல்ட் காபி

இன்ஸ்டன்ட் காபி பொடி -  1 தேக்கரண்டி அல்லது காபி டிகாஷன் - 1மேஜைக்கரண்டி,சுடு நீர் - 1 மேஜைக்கரண்டி வெனிலா ஐஸ் கிரீம் - பெரிய ஸ்கூப், குளிர்ந்த கொழுப்புள்ள பால் 1கப் அல்லது 1/4 லிட்டர், ஐஸ் கட்டி - 4,சக்கரை -1.5 மேஜைக்கரண்டி, சாக்லேட் சிரப் - 1 மேஜைக்கரண்டிஒரு குட்டி பெளலில் காபி பொடி எடுத்துக் கொண்டு அதனுடன் சுடுநீர் சேர்த்து கலந்து வைக்கவும், ஒரு மிக்ஸி ஜாரில் நாம் கலந்து வைத்த,காபிடிகாஷன்,சக்கரைமற்றும்ஐஸ்கிரீம்சேர்க்கவும்.பின்அதனுடன்குளிர்ந்தபால்மற்றும்ஐஸ்கட்டிசேர்க்கவும்,அனைத்தையும் நன்றாக நுரை வரும் வரை அடிக்கவும். பின் பரிமாறுவதற்கு டம்ளர் எடுத்துக் கொள்ளவும்.டம்ளரில் கொஞ்சம் சாக்லேட் சிரப் ஓரங்களில் ஊற்றி பின் அடித்து வைத்துள்ள  காபி ஊற்றி பரிமாறவும். சுவைத்து மகிழுங்கள். கோடைக்கு ஏற்ற குளு குளு கோல்ட் காபி,

May 03, 2023

பிரிட்ஜை சுத்தம் செய்ய....

ஃபிரிட்ஜை சுத்தம் செய்வதற்கு முன், அதை அணைத்துவிட்டு சிறிது நேரம் அப்படியே விடவும். அதன் வெப்பநிலை அறை வெப்பநிலைக்கு மாற வேண்டும்.ஃபிரிட்ஜின் உள்ளே இருக்கும் உணவுப் பொருள்கள் அனைத்தையும் எடுத்து வெளியே வைக்கவும். பின், ஃபிரிட்ஜின் அடுக்குகள் அனைத்தையும் கழற்றவும். அவற்றை முதலில் சுத்தம் செய்திடவும். பலவிதக் கறைகள், அழுக்குகள் எனச் சேர்ந்திருக்கும் இவற்றை பாத்திரம் துலக்கும் சோப் கொண்டோ, எலுமிச்சை சாறு கொண்டோ நன்றாகக் கழுவவும்.பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.ஃபிரிட்ஜ் உட்புறத்தில் நன்றாக உலர்ந்த பின் ஆன் செய்து, அடுக்குகள், டோர், டெம்ப்பரேச்சர் என அனைத்தையும் செட் செய்த பின், உணவுப் பொருள்களை உள்ளே எடுத்து வைக்கவும்.வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும்.மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறைகொடுக்கவும். பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு, அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ, சுலபமாக எடுக்க வரும்.

Apr 29, 2023

காய்கறி நறுக்கும் கத்தி கூர் மழுங்காமல் இருக்க....

நாம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறி நறுக்கும் கத்தி, விரைவாக கூர் மழுங்கிவிடும். அதற்கு உடைந்த டைல்ஸ் அல்லது பீங்கான் கப் பின்புறம்வைத்து, கத்தியை இலேசாக சூடு பறக்கத் தேய்த்தால் போதும் ,புதியது போல கூர்மை ஆகிவிடும். பின்னர் நீண்ட நாட்களுக்கு கத்தி மழுங்காமல் இருக்கும்.பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்.பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க ,பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும்.கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

Apr 27, 2023

கோதுமை மாவு அதிக நாட்கள் கெடாமல் இருக்க.....

கோதுமை மாவு  மொத்தமாக வாங்கி பயன்படுத்துபவர்கள் அதனை ஸ்டோர் செய்து கொள்வார்கள், இப்படி மொத்தமாக எடுத்து வைக்கும் பொழுது நீண்ட நாட்கள் பெரும்பாலும் வருவதில்லை. கோதுமை மாவு கட்டிகளாக மாறிவிடும் அல்லது பூச்சிகள் வரக்கூடும்.  கோதுமை மாவு அரைத்து வந்தவுடன் அதனை எடுத்து வைக்கும் பொழுது அதில் சில பிரியாணி இலைகளை போட்டு வைக்கவும், பிரியாணி இலைகளைபோட்டால் கோதுமை மாவு ,அதிக நாட்கள் கெடாமல் இருக்கும் அதில் வண்டுகள், பூச்சிகள் போன்ற தொந்தரவுகளும் ஏற்படாமல்  பாதுகாப்பாக இருக்கும்.கேரட் சாறும், சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம்  குறையும்.

1 2 ... 13 14 15 16 17 18 19 20 21 22

AD's



More News