இடது கண் துடித்தால் அவர்களை நோக்கி ஒரு நல்ல செய்தி வரப்போகிறது என்று அர்த்தம்.வலது கண் துடித்தால் இனிமேல் அவர்களது கனவு நினைவாக போகிறது என்று அர்த்தம்.பெண்கள் என்றால் இடது கண் முடித்தால் நற்செய்தியும், ஆண்களுக்கு வலது கண் துடித்தால் நற்செய்தி வரும்.வலது கண்கள் நீண்ட நாட்களாக, நீண்ட நேரம் ,தொடர்ச்சியாக துடித்தால் அவர்களுக்கு தெரியாமலே அவர்களது உடலில் எதோ ஒருகண் சம்பந்தப்பட்ட நோய் உள்ளது என்றுஅர்த்தம்.
கோபுர நிழல் அல்லது கொடிமரத்தின் நிழல் நம் வீட்டு மனையின் மீது விழாதபடி வீடு கட்ட வேண்டும்.பெருமாள் கோயிலின் பின்புறம் சிவன். கணபதி கோவில் எதிர்புறம் வீடு கட்டக் கூடாது.முட்கள் உள்ள செடியை வீட்டில் வளர்த்தால் பணம் தங்காது.ஜாதி முல்லை, மல்லிகை, தாமரை, தும்பை, பாரிஜாதம், சாமந்தி போன்ற விநாயகர் மலர்களை ,வீட்டின் எல்லைக்குள் வளர்ப்பது மனை தோசத்தை சரி செய்யும்..தனியாக தென்னை மரத்தை வீட்டில் வளர்க்க .ஒற்றை பனைமரம் உள்ள இடத்தில் வீடு கட்ட கூடாது.வீட்டின் வாசலில் அல்லது நில கதவை திறந்தவுடன் முருங்கை மரம் அல்லது மாமரத்தை பார்க்க கூடாது..நன்றாக வளர்ந்த வேப்பமரத்தை அது மீண்டும் வளராமல் வெட்டப்பட்டால், அந்த வீட்டில் உள்ள ஒற்றுமை; சந்தோசம் ஆரோக்கியம் கெட்டு விடும்.
செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் பணம் பொருள் மற்றவருக்கு கொடுக்கக் கூடாது.ஏனென்றால் செவ்வாய் கிழமை முருகனுக்கு,. வெள்ளிக்கிழமை லட்சுமிக்கு உகந்த நாள். ஆகவே செவ்வாய் ,வெள்ளிக்கிழமைகளில் மற்றவருக்கு பணம் பொருளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.அதிக செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். செவ்வாய் ,வெள்ளிக்கிழமைகளில் முருகரையும் லட்சுமியையும் வழிபட்டு வந்தால் ஏட்டில் பணம் சேரும் என்பது சான்றோர் கூற்று .ஆகவே இதை அனைவரும் கடைப்பிடித்தால் நலம் வந்து சேரும்.
குரு மற்றும் சகோதரியை பார்க்க செல்லும் பொழுது, வெறுங்கையுடன் செல்லக்கூடாது. தலை வாசலுக்கு நேரே படுக்க கூடாது. வானவில்லை நாம் பிறருக்கு காண்பிக்க கூடாது. இரவுகளில் தூங்கும் முன், ஈர கால்களுடன் உறங்கக்கூடாது வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை உற்றுப் பார்க்கக் கூடாது. கன்று குட்டி கட்டி இருக்கும் கயிறை தாலாட்டக் கூடாது. சாப்பிடும் வேளையை தவிர்த்து பிற நேரங்களில், இடது கைகளால் நாம் தண்ணீர் அருந்தக்கூடாது.
1- வீட்டில் நிறைய ஊறுகாய் வகைகளை வைத்து இருப்பது குபேர சம்பத்து தரும். 2- கல்லுப்பு, புளி போட்டு வைக்கும் பாத்திரம் காலியாக இருக்க கூடாது. 3- வெள்ளிக்கிழமையில் மாலை 6-7 மணிக்குள் கல்லுப்பு வாங்கி வீட்டில் வைத்தால் பணம் சேரும். 4 - விளக்கேற்றும் போது பின்பக்க கதவை சாத்தி விட்டு ஏற்றினால் ஐஸ்வர்யம் கூடும். 5- முறம், அம்மி, ஆட்டுக்கல், உணவு தானியங்களை மிதிக்கவும் கூடாது தாண்டக்கூடாது. 6- மாலை சாய்வதற்கு ஒரு நாழிகை முன் (6.48-6.00) விளக்கேற்றினால் வீடு செழிக்கும். 7-குழந்தைகளின் உடைகளை மாலை நேரத்திற்கு முன்பே காய வைத்து எடுத்து விட வேண்டும். 8 - காலாட்டுவது வீட்டிற்கு கேடு விளைவிக்கும். 9 - பால், தயிர் ஊசி என்று வரும் இரண்டெழுத்து பொருட்களை இரவில் இரவல் தரக் கூடாது.
நாம் கோவிலுக்கு சென்று வந்த புண்ணியம், கடன் கொடுத்தவனை சென்றடையும்.சுவாமிக்கு சமர்பித்த மாலையை நாம் பிரசாதமாக பெற்று கொள்ளலாம், ஆனால் அதை அணிந்து கொள்வது பாவமாகும். வீட்டின் நிலைப்படியில் மாட்டி வைப்பது சிறப்பு.சிவன் கோயிலாக இருந்தால், சிறிது நேரம் கோயிலில் அமர்ந்து விட்டு செல்ல வேண்டும். பெருமாள் கோயிலாக இருந்தால் உட்காராமல் வீட்டிற்குச் செல்லவேண்டும், லட்சுமி தேவி நம்முடன் வருவதாக ஐதீகம்.
நல்ல ஆற்றல் வர வேண்டுமா? வீட்டை சுத்தமாக வைத்தாலே போதும்.வீட்டுக்குள் வாடிய செடிகளை வைக்க வேண்டாம்.அவை எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.அலுவலகம், வீடு, தோட்டம், பண்ணை போன்ற இடங்களில் உலர்ந்த மரங்கள் இருந்தால் வறுமை உண்டாகும்.துருப்பிடித்த இரும்பு, கிழிந்த ஆடைகள், பழைய துணிகள் இருந்தாலும் வீட்டில் நெகட்டிவ் சக்தி உருவாகும்.வேலை செய்யாத கடிகாரம் இருந்தால் குடும்பத்தில் கடன் பிரச்சனைகள் அதிகரிக்கும்.உடைந்த கண்ணாடி, பிளாஸ்டிக், மண் பானைகள் போன்றவை வீட்டில் இருந்தால் கெட்ட ஆற்றல் சேரும்.
வீட்டில் யாராவது வரும்போது கை கொண்டு கதவைத் திறப்பது நல்லது. கதவை எப்போதும் திறந்து வைப்பது செல்வம் குறையும் என ஜோதிடம், காலை-மாலை சில நேரம் மட்டும் திறந்து வைக்க வேண்டும். வாசல் முன் தினமும் விளக்கு ஏற்றி வைத்தால் கண் திருஷ்டி குறையும். தினமும் கதவை துடைத்து ,மஞ்சள்-குங்குமம் வைப்பது,வாஸ்து குறை நீங்க உதவும்.
நீங்கள் குளிக்கும் போது தண்ணீருடன் சேர்ந்து, சிறுநீர் கழிக்க கூடாது கங்கையின் சாபத்திற்கு ஆளாக நேரிடும். குளியல் அறையில் தண்ணீர் வடியும் இடத்தில், முடிகள் தேங்கி இருக்கக் கூடாது.கேது பகவானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். குளியலறையில் இரும்பு பொருட்களான கத்தரிக்கோல், சேவிங் மெஷின் போன்றவை வைக்கலாம், தவறில்லை. ஆனால் அது துருப்பிடிக்கும் வரை வைத்திருக்கக் கூடாது. சனியின் கோபத்திற்கு ஆளாகிர்கள். குளித்து முடித்ததும் bucket,cup போன்றவைகளை கவிழ்ந்து வைக்க வேண்டும்.தண்ணீர் தேக்கி வைக்க கூடாது. தண்ணிர்,குழாயில் சொட்டு சொட்டாக தண்ணீர் வடிந்த வண்ணம் இருக்கக் கூடாது. கடனாவீர்கள் ஜாக்கிரதை. குளிக்கும் பெண்கள்,குளியலறையில் சென்று நெற்றியில் இருக்கும் பொட்டை எடுத்து வைப்பது,வளையல், செயினை கழட்டி வைப்பது என்பது கண்டிப்பாக கூடாது.குளிக்கும் முன் சரி செய்துவிட்டு தான் குளியல் அறைக்கு செல்ல வேண்டும்.
வில்வ இலையைப் பறிக்கும் போது முழுவதுமாக (3 இதழ்களும் சேர்ந்து) காம்புடன் பறிக்க வேண்டும்.தனித்தனி இதழ்களாக பறிக்க கூடாது, பூச்சி அரித்த அல்லது கிழிந்த இலைகளை பூஜைக்குப் பயன்படுத்த கூடாது.வில்வ இலைகள் பறித்த பின்பும் நீண்ட நாட்கள் வாடாமல் இருக்கும்.வில்வ இலையை சமரப்பிக்கும் போது ,அதன் நரம்புகள் சிவ லிங்கத்தின் மேல் படும்படி (தலைகீழாக) வைப்பது மிகவும் விசேஷமானது.ஒருமுறை பயன்படுத்திய வில்வ இலையை தூய்மையான நீரால் கழுவி சுத்தம் செய்து மீண்டும் பூஜைக்குப் பயன்படுத்தலாம்.சிவபெருமானுக்கு மட்டும் இந்த விதி விலக்கு உண்டு.