25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jul 25, 2024

காற்றிலிருந்து வெண்ணெய் தயாரிக்கும் நிறுவனம்

காற்றிலிருந்து வெண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் ஆராய்ச்சிக்கு பில் கேட்ஸ் உதவ உள்ளார். கரியமில வாயுவுடன் நீரிலிருந்து பிரிக்கப்பட்ட ஹைட்ரஜனை இணைத்துக் கொழுப்புகளை உருவாக்கும் இந்த  முயற்சியால் கால்நடைகளை அதிகளவு நம்பி இருப்பது குறையும்.

Jul 24, 2024

குடல் நுண்ணுயிரிகளுக்கும் ஆட்டிஸம் நோய்க்கும் உள்ள தொடர்பு

 குடல் நுண்ணுயிரிகளுக்கும் மனஅழுத்தம் அல்சைமர் நோய்க்கும் தொடர்பு இருப்பதை ஏற்கனவே நடந்த ஆய்வுகள் நிறுவியுள்ளன. தற்போது ஹாங்காங்கில் உள்ள சீனப் பல்கலை குறிப்பிட்ட சில குடல் நுண்ணுயிரிகளுக்கும் ஆட்டிஸம் நோய்க்கும் உள்ள தொடர்பை ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளது . இதன் வாயிலாக, எதிர்காலத்தில் ஆட்டிஸம் நோய்க் கான மருத்துவத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

Jul 24, 2024

ஆனந்த் -ராதிகா திருமணத்தில் குவிந்த பரிசுகள்

.உலகமே வியந்து போகும்படி, கடந்த ஜூலை12,2024 அன்று பிரமாண்டமாகஆனந்த் அம்பானி மற்றும்ராதிகா மெர்ச்சன்ட் தம்பதிகளின்திருமணம் நடந்து முடிந்துள்ளது.இந்த திருமணம் மும்பையில்3 நாட்கள் இடம்பெற்றது.இந்த திருமணத்தில் உலகம் முழுவதிலுமிருந்து பதினான்காயிரம் பேர் கலந்து கொண்டனர். ஆனந்த்அம்பானி மற்றும் ராதிகாமெர்ச்சன்ட் திருமணத்தில் வந்த பரிசுகள் தொடர்பிலானவிவரங்கள்.அம்பானி குடும்பத்தினர் - பாம் ஜுமேராவில் 3.000 சதுர அடி பரப்பளவில் உள்ள ஆ டம்பரமான மாளிகை (ரூ. 640 கோடி) ஜெஃப் பெசோஸ் - ரூ. 11,50 கோடி மதிப்புள்ள புகாட்டி ஜான் சினா - ரூ. 3 கோடி மதிப்புள்ள  லம்போர்கினி மார்க் ஜுக்கர்பெர்க் - ரூ.300 கோடி மதிப்புள்ள தனியார் ஜெட் விமானம் பில்கேட்ஸ் - ரூ.9 கோடி மதிப்புள்ள வைர மோதிரம், 180 கோடி மதிப்புள்ள ஒரு ஆடம்பரமான படகு சுந்தர் பிச்சை - ரூ.100 கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர் இவான்கா டிரம்ப் - அமெரிக்காவில் ரூ. 80 கோடி மதிப்புள்ள ஒரு ஆடம்பரமான மாளிகை  கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷால் - ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி - கையால் செய்யப்பட்ட ரூ. 25 லட்சம் மதிப்புள்ள சால்வய்  அக்ஷய் குமார் - ரூ. 60 லட்சம் மதிப்புள்ள தங்க பேனா ஷாருக்கான்  - பிரான்சில் ரூ. 40 கோடி மதிப்புள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பச்சன்கள் - ரூ. 30 கோடி மதிப்புள்ள மரகத நெக்பீஸ்  ஆலியா பட் - ரன்பீர் கபூர் - ரூ. 9 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் கார்  சல்மான்  - ரூ.15 கோடி மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் பைக் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் - ரூ.20 கோடி ரோல்ஸ் ராய்ஸ் கார்.

Jul 23, 2024

ஆனந்த் அம்பானி திருமணத்தன்று அணிந்திருந்த தலைப்பாகையின் விலை 160 கோடி (kalgi )

இந்தியாவின் பெரும் பணக்காரரும், ரிலையன்ஸ் நிறுவன குழுமத்தின் தலைவருமான முகேஷ் அமானியின இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு ராதிகா மெர்ச்ச ன்ட் உடன் ஜூலை12- இல் திருமணம் நடந்தது.இந்த திருமண நிகழ்வில் அம்பானி குடும்பத்தினர் மட்டுமே பல நூறு கோடி மதிப்பிலான ஆடை, ஆபரணங்களை அணிந்திருந்ததாக சொல்லப்படுகிறது.ஆனந்த் அம்பானி சிவப்பு மற்றும்  தங்கநிறத்தில் ஆன ஷெர்வானி அணிந்திருந்தார். அதிலும், ஆனந்த் அம்பானி அணிந்திருந்த தலைப்பாகை மட்டும்100 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.அந்த தலைப்பாகையில், ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்களால் அணிந்து கொள்ளப்படும் kalgi எனப்படும் ஆபரணம் இடம் பெற்றிருந்தது. அரிய வகை வைரங்களால் உருவாக்கப்பட்ட அந்த தலைப்பாகையின் விலை மட்டும் சுமார் ரூ.160  கோடி என சொல்லப்படுகிறது.5000 கோடி வரை செலவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த திருமண விழாவில் நாட்டின் பிரதமர்மோடி முதல் திரை பிரபலங்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஆனந்த் அம்பானி தனது நண்பர்கள் மற்றும் திரை பிரபலங்களுக்கு,2 கோடி மதிப்பிலான ஆடெமர் ஸ் வாட்ச் (Audemars Piguet)-ஐ பரிசாக வழங்கினார்.

Jul 23, 2024

இரயில் பயணத்தின்போது இறங்க வேண்டிய இடத்தை தவற விட்டால் ….

இரவு நேர இரயில் பயனத்தின்போது இறங்க வேண்டிய இடத்தை தவறவிட்டுவிடுவோம் என்ற பயம் இனி வேண்டாம். உங்கள் கைபேசியில் 139க்கு டயல் செய்து வழிமுறைகளின்படி உங்கள் PNR எண்ணை பதிவு செய்தால் போதும். நீங்கள் இறங்க வேண்டிய இடம் நெருங்கியதும்உங்களுக்கு எச்சரிக்கை அழைப்பு வந்துவிடும். 

Jul 22, 2024

4,200 கி.மீ., கடல் கடந்து , பறக்கும் ஓர் அதிசய பட்டாம்பூச்சி

பலமான காற்று அடித் தால் விழுந்துவிடும் பலவீனமான உயிரி தான் பட்டாம்பூச்சி. ஆனால், ஓர் அதிசய பட்டாம்பூச்சி இனம் 4,200 கி.மீ., கடல் கடந்து பறந்து செல்கிறதாம். இதை ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஐபீஇ (BE) பல்கலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தத் தொலைதூரப் பயணத்தை வெறும் 5 முதல் 8 நாட்களுக்குள் நிறைவு செய்கிறது இந்தப் பட்டாம்பூச்சி. இந்த அரும்பெரும். சாதனையைச் செய்பவை பெயின்டட் லேடி' பட்டாம்பூச்சிகள் (Painted lady butterflies) இவற்றின் அறிவியல் பெயர் வனெசா கார்டுய் (Vanessa cardui). இந்தச் சிறிய உயிரினம் ஒருமுறை போதுமான அளவு உணவை எடுத்துக் கொண்டது என்றால், எங்கும் ஓய்வெடுக்காமல் 780 கி.மீ., பறக்கும். ஆனால், கடக்க வேண்டிய  துாரமோ அதிகம். இந்தப் புத்திசாலி உயிரி இயற்கையாக வீசும் கடற்காற்றை அறிந்து வைத்திருக்கிறது. முற்காலத்தில் பாய்மரக் கப்பல்களில் வணிகம் செய்தவர்கள் இதை அனுசரித்தே பயணம் செய்தனர். இதனால், இதற்கு வணிகக் காற்று  (The trade winds) என்று பெயர் வந்தது. இந்தப் பட்டாம்பூச்சி தனது ஆற்றலையும், காற்றின் போக்கையும் வண்டிய மாற்றி மாற்றிப் பயன் படுத்தி இவ்வளவு நெடிய தூரத்தைக் கடக்கிறது. முதன்முதலில் இவை தென் அமெரிக்காவின் அட்லான்டிக் கரைகளில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த இனம் உலகம் முழுக்க வாழ்ந்தாலும் ஆப்ரிக்கா, ஐரோப்பா, வட, தென் அமெரிக்காவில் வாழ்பவை தான் மரபணு ரீதியாக அதிக நெருக்கத்து படுத்தி இவ்வளவு நெடிய தூரத்தைக் கடக்கிறது. முதன்முதலில் இவை தென் அமெரிக்காவின் அட்லான்டிக் கரைகளில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த இனம் உலகம் முழுக்க வாழ்ந்தாலும் ஆப்ரிக்கா, ஐரோப்பா, வட, தென் அமெரிக்காவில் வாழ்பவை தான் மரபணு ரீதியாக அதிக நெருக்கத்துடன் உள்ளன. இதற்குக் காரணம் இவை கடல் கடந்து இனப்பெருக்கம்  செய்வதற்காக இந்த நான்கு கண்டங்களுக்கு இடையே பயணிப்பது தான்.விஞ்ஞானிகள் இந்த இனத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சிகளைச் சோதிக்கும்போது அவை ஆப்பரிக்காவில் மட்டுமே உள்ள சில தாவரங்களின் மகரந்தத்தைச் சுமந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. இதன் வாயிலாக அவை கடலைக் கடப்பதற்கு முன்பு ஆப்பிரிக்காவில் ஆற்றல் தரும் அளவிற்குப் போதுமான உணவை உண்டுள்ளன என்பதை அறிய முடிந்தது. கோடைக்காலத்தில் ஆப்ரிக்காவின் சஹாரா பாலைவனத்திலிருந்து தென் அமெரிக்கா நோக்கி வீசும் காற்று தான் இந்தப் பட்டாம்பூச்சிகளுக்கு உதவுகின்றன என்பதும் தெரியவந்தது. இந்தப் புதிய கண்டுபிடிப்பு பூச்சிகளின் புலப்பெயர்வு, வலசைச் செல்லுதல் பற்றிய நம் அறிதலை இன்னும் மேம்படுத்தி உள்ளது என்கின்றனர் உயிரியலாளர்கள்.

Jul 22, 2024

குதிரைத்திறன் எப்படி வந்தது

ஐரோப்பாவில் முன்பு இயந்திரங்களை இயக்க குதிரைகள் பயன்படுத்தப்பட்டன. நவீன நீராவி இன்ஜின்கள் வந்தபோது அவற்றின் திறன்களை கூற, ஒப்பீட்டளவில் குதிரையின் ஆற்றலோடு சமன்படுத்திக் கூறப்பட்டது. அதுவே மாறி'குதிரை சக்தி' என ஆனது. இதை அறிமுகப்படுத்தியவர் ஸ்காட்லாந்தின் ஜேம்ஸ் வாட். இவர் தயாரித்த நீராவி இன்ஜினை விற்பனை செய்யும்போது, அந்த இன்ஜின் எத்தனை குதிரைகள் செய்யும் வேலைக்கு சமமானது என எடுத்துக்கூறி விற்பனை செய்ய வேண்டியிருந்தது. இப்படிதான் இன்ஜின்களின் ஆற்றல் குதிரை திறனில் அளவிடப்படுகிறது.

Jul 20, 2024

ஒரு யூனிட்டுக்கு 20 காசு முதல் 55 காசு வரை மின் கட்டண உயர்வால் மக்களுக்கு சுமை!

மின்சாரக்கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆண்டுதோறும் தமிழ்நாடு மின்பகிர்மானக்கழகம் கட்டணத்தை உயர்த்தவேண்டும், அந்த உயர்வும் 6 சதவீதம் அல்லது அந்த ஆண்டுக்கான நுகர்வோர் விலைகுறியீட்டு எண் இதில் எது குறைவோ அந்த அளவுக்கு கட்டணத்தை உயர்த்தவேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு ஜூலை முதல் கட்டணம் உயர்த்தப்படவேண்டும் என்ற விதிகளின்படி, இப்போது நுகர்வோர் விலைகுறியீட்டு எண்ணின் அடிப்படையில் 4.83 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் அறிவித்துள்ளது. இந்த உயர்வு முன்தேதியிட்டு ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஒரு யூனிட்டுக்கு 20 காசு முதல் 55 காசு வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள 2.47 கோடி வீடுகள் மற்றும் குடிசைகளில் இலவசமாக வழங்கப்படும் 100 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்துவதால் அவர்களுக்கு மின்கட்டண உயர்வால் பாதிப்பு எதுவும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதிக மின்சாரம் பயன்படுத்தும்வீடுகளுக்கும்,வணிகநிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் இந்த கட்டண உயர்வு வலிக்கத்தான் செய்யும். குறு, சிறு, நடுத்தரத் தொழிற்சாலைகளை பொறுத்தமட்டில், மொத்த உற்பத்திசெலவில் என்ஜினீயரிங் தொழிற்சாலைகளுக்கு 15 சதவீதமும், பவுண்டரிகளுக்கு 35 சதவீதமும் மின்சாரப்பயன்பாட்டு செலவுக்கே போய்விடும். ஒரு யூனிட்டுக்கு 55 காசு என்பது சிறியதாக தெரிந்தாலும் ஆயிரக்கணக்கான யூனிட்டுகள் மின்சாரத்தை பயன்படுத்தும்போது அதன் சுமை அழுத்தும். இதனை மக்கள் மீதுதான் அவர்கள் ஏற்றிவைப்பார்கள். அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலையும் உயரும். அதை மக்களிடம் விற்பனை செய்யும்போது விலை அதிகரிக்கும். இப்போது மின்சாரவாரியம் உயர்த்தியுள்ள மின்கட்டண உயர்வால் மக்களுக்குத்தான் இரட்டைச்சுமை. ஒன்று அவர்களுடைய வீடுகளுக்கான மின்கட்டணமும் உயருகிறது. அடுத்து அவர்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் சேவைக்கட்டணமும் உயரும். 

Jul 20, 2024

பயணியரின் லக்கேஜ்களை அதிக எண்ணிக் கையில் தவற விடுவதில், 'ஏர் இந்தியா' முதலிடம்

 பயணியரின் லக்கேஜ்களை அதிக எண்ணிக் கையில் தவற விடுவதில், 'ஏர் இந்தியா' விமான நிறுவனம் உலகளவில் முதலிடத்தில் இருப்பதாக, 'லக்கேஜ் லாசர்ஸ் 'டாட் காம்' நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்நிறுவனம், பயணியர் தொலைத்த லக்கேஜ் எண்ணிக்கைகளின் அடிப்படையில் விமான நிறுவனங்களை வரிசைப் படுத்துகிறது.இதன் தரவுகளின்படி, ஏர் இந்தியா நிறுவனம், கடந்த மாதத்தில், 50,001 லக்கேஜ்களை தவற விட்டுள்ளது. மேலும், ஏர் இந்தியா நிறுவனம், ஒவ்வொரு 36 லக்கேஜ்களில், ஒரு லக்கேஜை தவறவிட்டுள்ளது. அத்துடன் அதிகளவில் லக்கேஜ்களை தொலைத்த விமானநிறுவனங்களின்பட்டியலில், அதிகஎண்ணிக்கையுடன்இந்தியாமுதலிடத்தில்உள்ளது.இந்தியவிமானநிறுவனங்கள், ஒவ்வொரு72லக்கேஜ்களில்ஒன்றைதவறவிட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுஉள்ளது.ஏர்இந்தியாவைதொடர்ந்து, வெஸ்ட் ஜெட் ஏர்லைன்ஸ், ஏர் லிங்க்ஸ் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

Jul 20, 2024

இந்திய பெண்களிடமே தங்க நகை அதிகம் இருக்கிறது 

அமெரிக்கா, சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய பெண்களிடமே தங்க நகை அதிகம் இருக்கிறது.உலகளவில் மொத்த தங்க கையிருப்பில் இந்திய பெண்களின் பங்கு 11 சதவீதமாக இருக்கிறது. அதாவது சுமார் 18 ஆயிரம் டன் தங்கம் இந்திய பெண்கள் வசமே இருக்கிறது.உலகின் மொத்த தங்க உற்பத்தி 1 லட்சத்து 89 ஆயிரம் டன்களை தாண்டியுள்ளது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 33 34

AD'sMore News