25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


அழகுக் குறிப்பு

Jul 14, 2026

கருகருவென முடி வளர முடக்கத்தான் கீரை  .

வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும். அதுமட்டும் அல்ல ,இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.

Jul 07, 2026

லிப்ஸ்டிக் போடுவதால் என்னென்ன பிரச்சனைகள்..

பெண்களின் அலங்காரத்தில் லிப்ஸ்டிக்கான முக்கியத்துவம் அளவுக்கு மீறி உள்ளது. மேக்கப் செய்ய ஆர்வம் இல்லாதவர்கள் கூட லிப்ஸ்டிக்குடன் vஅலம் வருகின்றனர்.  ஆனால் லிப்ஸ்டிக்கின் தேர்வில் கவனம் செலுத்துவது அவசியம். சில லிப்ஸ்டிக்குகளில் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உண்டு. லிப்ஸ்டிக் போடுவதால் என்னென்ன பிரச்சனைகள் வரலாம்? லிப்ஸ்டிக்கில் உள்ள ஈயம், உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும். பித்தலேட்டுகள், நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகளை பாதிக்கும். பாலி எத்திலின், கிளைகோலிக் அமிலம் போன்றவற்றின் பயன்பாடு நரம்பு மண்டலத்திற்கும் பாதிப்புகளை உண்டாக்கக்கூடியது. பாரபின் (மெழுகு) ரசாயனமும், சருமத்துக்குள் ஊடுருவி சரும எரிச்சல், புற்றுநோய் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். லிப்ஸ்டிக் வாங்கும் முன், அதில் உள்ள பொருட்களை கவனித்து, அது எவ்வளவு பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதைக் கொஞ்சம் ஆராய்ந்துகொள்ள வேண்டும். லிப்ஸ்டிக்கில் ஈரத்தன்மை ஏற்படுவதால், உதடுகளில் திடீரென அரிப்பு ஏற்படும் போது அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அது ஒவ்வாமை பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். பெரும்பாலான ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கும் தன்மையை கொண்டுள்ளதால், லிப்ஸ்டிக் மூலம் புற்றுநோய் ஏற்படக்கூடும். லிப்ஸ்டிக்கில் சேர்க்கப்பட்ட ரசாயனங்கள், இருமல், கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுத்தும். பெட்ரோ கெமிக்கல்கள், நாளமில்லா சுரப்பி செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, அறிவாற்றல் மற்றும் இனப்பெருக்க திறன்களில் சிக்கல்களை உருவாக்கலாம். அடிக்கடி லிப்ஸ்டிக் பயன்படுத்துவது, சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தக்கூடும், ஏனெனில் காட்மியம் அதிக அளவில் இருக்கும்.

Jun 30, 2026

உடல் எடை குறைப்பு - குறிப்புகள்.

 பாலை விட தயிர் சாப்பிடுங்கள்.  Green tea தினமும் குடிக்கலாம். மிகவும் குளிர்ந்த தண்ணீர் தவிர்க்கவும். Tender coconut வாட்டர் -  நல்ல hydration. உப்பு அளவு குறைக்கவும் '.  எலுமிச்சை சேர்க்கவும். எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கவும். காலை & மாலை வெந்நீர் குடிக்கவும்.  சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்காதீர்கள்-  60 நிமிடம் gap. வெந்தயம் ஊறவைத்து காலை சாப்பிடுங்கள். Black tea குடிக்கலாம் பால் சேர்க்க வேண்டாம். Herbal water  - இஞ்சி தண்ணீர் நல்லது.!

Jun 24, 2026

தலைமுடி செழித்து வளர..

உங்கள் தலைமுடியில் பொடுகுப் பிரச்சனை இருந்தால்,1 லிட்டர் தண்ணீரில்10 கிராம் படிகாரத்தைக் கரைத்து, தினமும் உங்கள் தலைமுடியைக் கழுவினால், ஒரு வாரத்திற்குள் அனைத்து பொடுகும் நீங்கிவிடும்.தினமும் இரவு உறங்கச் செல்வதற்கு முன், உங்கள் முகத்தை விளக்கெண்ணெய் கொண்டு மென்மையாக மசாஜ் செய்யுங்கள்; 5 நாட்களுக்குள் உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்களும் கரும்புள்ளிகளும் மறைந்துவிடும்.மருதாணி இலையின் சாறு எடுத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தேய்த்துவர இளநரை நீங்கி தலை சூடு குறைந்து தலைமுடி செழித்தும். நீண்டும். செம்பட்டையின்றியும் வளரும்.

Jun 23, 2026

15 நாட்கள் ஐஸ் தண்ணீரால் முகம் கழுவினால் என்ன நடக்கும்?

தினமும் 15 நாட்கள் முகத்தை ஐஸ் தண்ணீரால் கழுவி வந்தால், சருமத்தில் இரத்த ஓட்டம் மேம்பட்டு முகம் புத்துணர்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் தோன்றலாம். குளிர்ந்த நீர் முகத்தில் உள்ள வீக்கம் மற்றும் சோர்வு தோற்றத்தை குறைக்க உதவுவதுடன், சருமத் துளைகள் தற்காலிகமாகச் சுருங்கியதுபோல் தோற்றமளிக்கவும் செய்யும்.மேலும், அதிகப்படியான எண்ணெய் பசையை கட்டுப்படுத்துவதற்கு இது ஓரளவு உதவலாம். ஆனால் ஐஸ் கட்டிகளை நீண்ட நேரம் நேரடியாக சருமத்தில் தேய்ப்பது அல்லது மிகுந்த குளிரை தொடர்ந்து பயன்படுத்துவது சருமத்தில் எரிச்சல், சிவத்தல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, குறுகிய நேரம் மட்டுமே பயன்படுத்தி, சருமத்தின் தன்மைக்கு ஏற்ப கவனமாக செயல்படுவது சிறந்தது.

Jun 16, 2026

தர்பூசணி தோல்!

பொதுவாக நாம் தர்பூசணி பழத்தை சாப்பிட்டு, அதன் வெள்ளை நிறத்தோல் பகுதியை குப்பையில் வீசி விடுவோம்.ஆனால், அந்தத் தோலில் தான், நம் சருமத்தை பளபளப்பாக்கும் அரிய சத்துக்கள் மறைந்துள்ளன. இதை எப்படி பயன்படுத்தலாம் என்று விரிவாகப் பார்ப்போம்:வெயிலில் அலைவதால் முகம், கை, கால்கள் கருத்து போய்விட்டதா? கவலை வேண்டாம். தர்பூசணி தோலின் உட்புற வெள்ளை பகுதியை அப்படியே எடுத்து, சருமத்தில் தேய்க்கவும். இது, சருமத்திற்கு நல்ல குளிர்ச்சியை தருவதோடு, வேனல் கட்டிகள் மற்றும் எரி குறைக்கும். எரிச்சலை உடனேமுகத்தில் அடிக்கடி பருக்கள் வருகிறதா? தர்பூசணி தோலில் உள்ள சத்துக்கள் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும். அந்தத் தோலை அரைத்து முகத்தில் பூசி வர, பருக்கள் குறையும் மற்றும் பருக்களால் வரும் வீக்கமும் வடியும். உடல் துர் நாற்றத்தைப்போக்க... குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை கலந்து பிறகு குளிக்கவும்...அவ்வளவு தான்... நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!

Jun 09, 2026

முகத்தில் சரும துளைகள், கரும்புள்ளிகள் ஏற்பட காரணம்.

சருமத் துளைகளில் (Open Pores) அழுக்கு மற்றும் எண்ணெய் தேங்குவதால் பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் முதிர்ந்த தோற்றம் ஏற்படுகின்றன. இதைக் கட்டுப்படுத்த செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை:செய்யக் கூடாதவை:வெந்நீர் தவிர்த்தல்: வெந்நீர் துளைகளை விரிவுபடுத்தி எண்ணெய் சுரப்பை அதிகரிக்கும்; எனவே குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரையே பயன்படுத்தவும்.அதிக மேக்கப் தவிர்த்தல்: கனமான மேக்கப் துளைகளை அடைத்துவிடும். லேசான, நான்-காமெடோஜெனிக் (Non-comedogenic) பொருட்களைத் தேர்ந்தெடுக்கவும்.அதிகம் தேய்க்கக் கூடாது: முகத்தை அடிக்கடி கழுவுவதோ அல்லது கடினமாகத் தேய்ப்பதோ சருமத்தை வறட்சியாக்கி, துளைகளை மேலும் பெரிதாக்கும்.செய்ய வேண்டியவை:தினசரி சுத்தம்: சருமத்திற்கு ஏற்ற கிளென்சர் (Cleanser) கொண்டு தினமும் இருமுறை முகத்தை மென்மையாகச் சுத்தம் செய்யவும்.எக்ஸ்ஃபோலியேஷன் (Exfoliation): வாரத்திற்கு 1-2 முறை மென்மையான ஸ்க்ரப் மூலம் இறந்த செல்களை நீக்குவது துளைகளின் அளவைக் குறைத்து அழுக்குகளை அகற்றும்.

Jun 02, 2026

கண்களின் கருவளையத்தை நீக்க …

கண்களின் கருவளையம் என்பது பலருக்கு ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும் நிலையில் இதற்கு ஏராளமான   மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும் அது நிரந்தரமாக தீர்வு கொடுக்கவில்லை என்ற நிலையில் கருவளையம் ஏற்பட என்ன காரணம்? அதை போக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து தற்போது பார்ப்போம்கருவளையம் ஏற்பட சில காரணங்கள் இதோ: * போதுமான தூக்கமின்மை* தவறான உணவுப் பழக்கம்* ஒழுங்கற்ற வழக்கம்* இரவில் தாமதமாக திரைகளைப் பார்ப்பது* சோர்வு* மன அழுத்தம்* உலர் கண்கள்* கண் ஒவ்வாமை* நீரிழப்பு* உடலில் நீர் பற்றாக்குறை கண்களில் ஏற்படும் கருவளையங்களை நீக்க ரோஸ் வாட்டர் பெரிதும் உதவுகிறது.  ரோஸ் வாட்டர் மற்றும் பால் ஆகியவற்றை சம அளவு எடுத்து பருத்தி பஞ்சின் உதவியுடன் கருவளையங்கள் உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் கழித்து  தண்ணீரில் முகத்தை கழுவினால் விரைவில் கருவளையம் மறைந்துவிடும். அதேபோல் தேன், பால் மற்றும் எலுமிச்சை ஆகியவை கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களில் தடவினாலும் விரைவில் கருவளையம் நீங்கிவிடும்.

May 26, 2026

தேவையற்ற முடிகள், அழுக்கு நீங்கி முகம் பளிச்சென்று இருக்க…

அரை டம்ளர் தண்ணீர் கொதிக்க வைத்து, வெல்லம் சேர்த்து லேசாக கெட்டியாகும் போது ,எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ,ஆற வைத்து பிறகு முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து துணியால் துடைத்தால், முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள், அழுக்கு நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும்.

May 19, 2026

முகத்திற்கு இளஞ்சிவப்பு நிறம் வர….

செம்பருத்திப் பூ இதழ்களை ரோஸ் வாட்டரில் ஊறவைத்து கற்றாழை ஜெல் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர முகத்திற்கு இயற்கையான இளஞ்சிவப்பு நிறம் (Pinkish glow) .கொடுக்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 26 27

AD's



More News