25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் ராம்கோ நிறுவனங்களின் நிறுவனர் பி.ஏ.சி ராமசாமி ராஜா பிறந்தநாள் விழா APRIL 24 கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறப்பு திட்ட முகாம் நிறைவு >> ராஜபாளையம் கோயில்வழிபாடு, திருக்கல்யாண நிகழ்ச்சி. >> ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண திருவிழா >> ஸ்ரீ ரமண வித்யாலயா பள்ளியில்  இலக்கிய மன்றம் நிறைவு விழா >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண் டாள் கோயிலில் யுகாதி விழா . >> கோதண்டராமர் கோவிலில் பிரமோற்சவ விழா. >> பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டுஇரத்ததான நிகழ்ச்சி >> ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றமாவட்ட டேக்வாண்டோ போட்டி >> ராஜபாளையம் நகராட்சியில் இந்த ஆண்டு இலக்கினை அடைய முனைப்பு காட்டி  வரும் நகராட்சியின் அனைத்து துறையினர். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Apr 25, 2025

சிவகாசி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் குருதி மையத்திற்கு தேசிய சுகாதார திட்டம் மூலம் குருதி பகுப்பாய்வு செய்யும் உபகரணம்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் குருதி மையத்திற்கு தேசிய சுகாதார திட்டம் மூலம் ரூ. 13 இலட்சம் மதிப்பில் குருதி பகுப்பாய்வு செய்யும் உபகரணம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ், ரூ.28 இலட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ள குருதி பகுப்பாய்வு செய்ய பயன்படும் உபகரணங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, .அவர்கள் (23.04.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினார். .

Apr 24, 2025

கல்லூரிக்கனவு விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டம் 01.05.2025 அன்றைய தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 27.04.2025 அன்று நடைபெற இருந்த கல்லூரிக்கனவு விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டம் 04.05.2025 அன்றைய தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் 100விழுக்காடு உயர்கல்விச் சேர்க்கையை வலியுறுத்தி நடைபெறும், இந்த நெடுந்தூர ஓட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும், மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளலாம்.ஏற்கனவே பதிவு செய்த மாணவ, மாணவிகளோடு புதியதாக பதிவு செய்பவர்களும் கலந்து கொள்ளலாம்.  04.05.2025 அன்று காலை 05.00 மணியளவில் நேரடியாகவும் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ளும் முதல் 1000 மாணவ, மாணவிகளுக்கு டி-சர்ட் பரிசாக வழங்கப்படும். மேலும் முதல் பரிசு ரூ.40,000, இரண்டாம் பரிசு ரூ.30,000, மூன்றாம் பரிசு ரூ.15,000, நான்காம் பரிசு - ரூ.10,000, ஐந்தாம் பரிசு - ரூ.5,000 வழங்கப்படும்.மேலும் விபரங்களுக்கு 96988-10699 என்ற கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Apr 24, 2025

"Coffee With Collector” என்ற 168-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (23.04.2025) உலக புத்தகத்தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த 65 ஆசிரியர்களுடனான "Coffee With Collector”  என்ற 168- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி, தொடக்க நிலையில் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி, ஆளுமை திறன் வளர்ச்சி, எதிர்கால சிறந்த மாணவ செல்வங்களை உருவாக்குதல், அரசின் நலத்திட்டங்கள் குறித்த உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ ஃ மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 168-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.     அதன்படி, நடைபெற்ற 168 -வது காபி வித் கலெக்டர் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடம் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை கண்டறிந்து, உயர்கல்வி சார்ந்து, வழங்கப்பட உள்ள பயிற்சி வகுப்புகளில் மாணவர்களை சேர்த்து, படிக்க வைப்பது குறித்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்.மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வகையில், உடனடி வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும்  புதிய பாடப்பிரிவுகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை அந்த பிரிவுகளில் சேர்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் செய்திடல் வேண்டும்.குறிப்பாக உயர்கல்வியில் சேர விரும்பும் மாணவிகளுக்கு தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் மாணவிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை குறித்தும், அரசு பள்ளி பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படுவது குறித்தும், அரசு சார்பில் வழங்கப்படும் உதவித்தொகைகள் குறித்தும்  எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.உயர்கல்விக்கு செல்லாததற்கு மாணவர்களிடையே ஆர்வமின்மையும் ஒரு காரணமாக உள்ளது. இது குறித்து மாணவர்களிடையே எடுத்துக்கூறி அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.உயர்கல்வி சேர்க்கை விகிதாச்சாரத்தினை அதிகப்படுத்தியதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானதாக இருந்தது. அதைபோல் உயர்கல்வி வழிகாட்டுதல் மூலம் மாணவர்கள் சரியான வாய்ப்புகளை அடைவதற்கும் ஆசிரியர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து ஒத்துழைப்பு நல்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Apr 23, 2025

"Coffee With Collector” என்ற 167-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (22.04.2025) இராஜபாளையம் இராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் பிரிவில் பயிலும் மாணவர்களில் போட்டித்தேர்விற்கு ஆர்வமுள்ள 65 மாணவர்களுடனான "Coffee With Collector” என்ற 167- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்  குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 167-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்களிடம் அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மத்திய மாநில அரசுகளின் மூலம் நடத்தப்பெறும் பல்வேறு போட்டித்தேர்வுகள் குறித்து தெரிந்து கொண்டு, அதில் முழு ஈடுபாட்டுடன் அந்த இலக்கை நோக்கி சென்றால் வெற்றி பெற முடியும். மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள்; உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.  

Apr 23, 2025

கட்டுமானத் தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.30 இலட்சம் மதிப்பிலான உதவித்தொகைக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 22.04.2025) கட்;டுமான தொழிலாளர் நலவாரியம் சார்பில், பணியிடத்து விபத்தில் மரணமடைந்த 6 கட்டுமானத் தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.30 இலட்சம் மதிப்பிலான உதவித்தொகைக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் தமிழ்நாடு உடலுழைப்பு நலவாரியம் முதலான 20 நலவாரியங்கள் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்காக தொழிலாளர் துறையின் கீழ் செயல்படுத்தி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 20 அமைப்புசாரா நலவாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை மரணம், விபத்து மரணம், ஓய்வூதியம் நிதி உதவி விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) அலுவலகம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, கட்டுமானப் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடையும் பதிவு பெற்ற ஃ பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளியின் வாரிசுதாரர்களுக்கு பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை ரூ.5,00,000- வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் கட்டுமானப் பணியிடங்களில் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்த திரு.விஜய் த/பெ.சேகர், திரு.கண்ணன் த/பெ.மாரியப்பன், திரு.நாகேந்திரன் த/பெ.சுப்புராஜ், திரு.சிங்கதுரை த/பெ.கந்தசாமி, திரு.கருப்பையா த/பெ.ஆறுமுகம் மற்றும் திரு.சரவணன் த/பெ.பெரியசாமி ஆகிய 6 கட்டுமானத் தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.30 இலட்சம் உதவித்தொகைக்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வின் போது விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) திரு.ஜெ.காளிதாஸ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Apr 23, 2025

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள்  (22.04.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும்  பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கங்கர்செவல் ஊராட்சி, கே.லட்சுமியாபுரம் கிராமத்தில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ், ரூ.2.40 இலட்சம் மானியத்தில் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதையும்,குண்டாயிருப்பு ஊராட்சியில், பாறைபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.51.05 இலட்சம் மதிப்பில் புதிய கணினி அறை மற்றும் வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய  உணவின் தரம், பயன்பெறும் மாணவர்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.பின்னர், டி.கரிசல்குளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.55 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதையும்   மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.             இந்த ஆய்வின் போது, அரசின் மூலம் அந்தந்த ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு  திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா என பொதுமக்கள் மற்றும் பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Apr 23, 2025

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள்  (21.4.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ஓ.கோவில்பட்டி ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.7 இலட்சம் மதிப்பில், பயணியர் நிழற்குடை புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதையும்,பின்னர், ஓ.கோவில்பட்டி ஊராட்சியில்,  பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.25 இலட்சம் மதிப்பில், புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், கட்டனார்பட்டி ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள், குழந்தைகளின் வயதுகேற்ற உயரம் மற்றும் எடை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.ஒண்டிப்புலி நாயக்கனூர் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.7 இலட்சம் மதிப்பில், பயணியர் நிழற்குடை புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதையும்,மேலும், முத்துலாபுரம் ஊராட்சியில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2.40 இலட்சம் மானியத்தில் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதையும்,முத்துலாபுரம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.5.32 இலட்சம் மதிப்பில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலையினையும், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், முத்துலாபுரம் ஊராட்சியில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.10 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளிகளிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Apr 23, 2025

2025ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமானது 25.04.2025 முதல் 15.05.2025 வரை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது .

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் நடத்தப்படும் 2025ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமானது விருதுநகர் மாவட்டத்தில் 21 நாட்கள், 18 வயது உட்பட்ட (Under 18) மாணவ ஃ மாணவியர்களுக்கு, வரும் 25.04.2025 முதல் 15.05.2025 வரை காலை 6.30 முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.இப்பயிற்சி முகாமில் தடகளம், கூடைபந்து, யோகா, கால்பந்து மற்றும் வளைகோல்பந்து போன்ற விளையாட்டுகளில் மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முகாமில் பால் / முட்டை/ பிஸ்கட் வழங்கப்படும்.பயிற்சி முகாமில் முடிவில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். மாணவ / மாணவியர் இப்பயிற்சி முகாமில் சேர்ந்து கொள்ள தங்கள் பெயர்களை மாவட்ட விளையாட்டு அரங்கில் பதிவு செய்து கொண்டு விளையாட்டு திறனை மேம்படுத்தி கொள்ளுமாறு  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

Apr 22, 2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில்  (21.04.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள்.  இக்கூட்டத்தில், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வி.துரைச்சாமிபுரம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் லேட் திருமதி எம்.ஈஸ்வரி என்பவர் பணிக்காலத்தில் மரணமடைந்ததை தொடர்ந்து,  அவரின் வாரிசுதாரரான மகள் திருமதி ப.முத்துமாரி என்பவருக்கு வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வி.துரைச்சாமிப்புரம் ஊராட்சி தொடக்கப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில்,மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Apr 22, 2025

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் பிரதான் இண்டஸ்இண்ட் வங்கி சார்பில், 200 அங்கன்வாடி மையங்களுக்கு எடை மற்றும் உயரம் அளவிடும் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (21.04.2025) ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் பிரதான் இண்டஸ்இண்ட் வங்கி சார்பில், 200 அங்கன்வாடி மையங்களுக்கு எடை மற்றும் உயரம் அளவிடும் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் வழங்கினார்.பின்னர், விவசாயப் பொருட்களின் விற்பனைக்காக 150 கிலோ வரை எடை பார்க்கும் 60 மின் தராசுகளை கண்மாய் விவசாய சங்கங்களுக்கு வழங்கினார்.பிரதான் நிறுவனமானது  இன்டஸ்இண்ட் வங்கி  மாவட்ட வளர்ச்சித் திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி, சிவகாசி உள்ளிட்ட 7 ஒன்றியங்களில் நீர் நிலைகளை புணரமைத்தல், நில மேம்பாடு, இயற்கை விவசாயம், கல்வி, சுகாதாரம்  மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு ஆகிய திட்டங்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு துறையினருடன் இணைந்து செயல்படுத்தி வருகின்றது.அதில் குறிப்பாக வளரிளம் பெண்கள் மத்தியில் அனீமியா ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்குத் தேவையான நடத்தை மற்றும் கல்வியினை மாவட்டத்தில் 3000 வளரிளம் பெண்களை குழுவாக ஒருங்கிணைத்து மாதம் ஒருமுறை அங்கன்வாடி மையங்களில் குழுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.அதன் ஒரு பகுதியாக, இன்று வளரிளம் பெண்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களின் எடை மற்றும் உயர அளவினை கணக்கிட 200 அங்கன்வாடி மையங்களுக்கு உயரம் மற்றும் எடை அளவிடும் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் (பொ)  திருமதி பத்மாவதி, பிரதான் நிறுவன சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.கணேசன், திருமதி கனகவள்ளி மற்றும் திரு.ஆதிநாராயணன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 36 37

AD's



More News