சுரைக்காயுடன் பூண்டு சேர்த்து வேகவைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறும்,சுரைக்காய் ஜூஸை அடிக்கடி குடித்து வந்தால் வயிற்றுப் புண்கள் மற்றும் வாய்ப்புண்கள் ஆறும்.சுரைக்காயை அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் கோடைக்காலத்தில் ஏற்படும் தலைவலி சரியாகும்.வாரம் ஒருமுறை கரைக்காய் ஜூஸ் குடித்தால் உடல் எடை குறையும்.
வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். வாழைப்பூவின் துவர்ப்பு தன்மை ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரையை கரைக்க உதவுகிறது. வாழைப்பூவை வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைந்துவிடும். பெண்களுக்கு மாதவிடாய் சீராக வருவதற்கு வெள்ளைப்படுதல், வயிற்று வலி பிரச்சனை சரியாக வாழைப்பூவை தினமும் சாப்பிடலாம்.
இரத்தம் அதிகரிக்கவும், இரத்தத்தை சுத்திகரிப்பு செய்யவும் உதவும்.நல்ல தூக்கத்திற்கு உதவும்.இளநரை, கண் எரிச்சல் பிரச்சனைகள் சரியாகும்.வாய் துர்நாற்றம், பற்சிதைவு பிரச்சனைகள் நீங்கும்.வயிற்று வலி மற்றும் செரிமான பிரச்சனைகள் சரியாகும்.
உறங்கும் போது தலைக்கு கீழ்தலையணை இல்லாமல் தூங்கினால் இதயம் மற்றும் மூளை வலுப்படுத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.தூங்க போவதற்கு மூன்று மணிநேரத்திற்கு முன் ஒவ்வொரு இரவும் ஒரு மாதுளை உணவு சாப்பிட வேண்டும். இந்த ஆயுர்வேத முறை மூலம் விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கலாம்.தினமும் ஒரு வேக வைத்த முட்டையை சாப்பிட வேண்டும். இந்த எளிய முறை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஏசி உடலின் ஈரப்பதத்தைக் குறைத்து விடும்.'நீண்ட நேரம் குளிரூட்டப்பட்ட ஏசி அறையில் அமரும்போது தலைவலி ஏற்படும். ஏசி சரியான பராமரிப்பில் இல்லையென்றால் அலர்ஜி. தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது. அதிக நேரம் ஏசியில் இருந்தால், கண் எரிச்சல், நீர் வற்றிப்போதல் ஏற்படும். அலுவலகத்தில் பலருக்கு உடல் அசதி, களைப்பு வருவதற்கு ஏசி தான் காரணம்.
வெள்ளரிக்காய் அதிக நீர்சத்து உடையது.சுரைக்காய் 90% தண்ணீரால் ஆனது. மேலும், எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கும்.பூசணிக்காயில் அதிகளவு நீர்ச்சத்தும், வைட்டமின் A உள்ளதால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.பாகற்காய் வெயில் காலங்களில் நம் உடலின் வெப்பநிலையை சமன்படுத்தும்.குடை மிளகாயில் 90% தண்ணீர் உள்ள இது மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும்.வெயில் காலத்தில் அதிக நீர்சத்து உடைய காய்கறிகள்சாப்பிட வேண்டும்.
தலையின் முன் பகுதியில் தலைவலி இருந்தால் அதற்கு தூங்குவதே மருத்துவம்.தலையின் மேல் பகுதியில் வலி இருந்தால் சரியாக சாப்பிடுவதும் தண்ணீர் குடிப்பதே அதற்கு மருத்துவம்.தலையின் பின் பகுதியில் வலி இருந்தால் அதற்கு மன உளைச்சலே காரணம்.ஆகையால் எதற்கெடுத்தாலும் மருந்தை உட்கொள்ளாமல் எதற்காக தலைவலி ஏற்பட்டது என்று கண்டறிந்து செயல்படுங்கள்.
பொட்டுகடலையில் நம் உடலின் சரியான வளர்ச்சிக்கு தேவையான பல ஊட்டச்சத்து கூறுகள் உள்ளன. இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைப்பதன் மூலம் ஆரோக்கியமான செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.பொட்டுகடலையில் கலோரிகள் மிகக் குறைவு மற்றும் இரும்புச் சத்து அதிகம். மேலும் இதில் அதிகம் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு சிறந்தது. பொட்டுகடலையில் நார்ச்சத்து அதிகம் மற்றும்கொழுப்பு குறைவாக உள்ளது. இது குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. மேலும் இது நமது பெருங்குடலை ஹைடரேட் செய்வதன் மூலம் மலச்சிக்கலைத் தடுக்கிறது.
நல்ல சுவை மிகுந்த பழங்களில் ஒன்று சப்போட்டாப் பழம். இப்பழத்தில் கால்சியம், பாஸ்பரம் இரும்பு போன்ற கனிமச் சத்து அதிக அளவு உண்டு. வைட்டமின் சி யும் உள்ளது.தொண்டையில் உண்டாகும் புண்களை ஆற்றும், இருமலைத் தடுக்கும், குடல் புண்ணை ஆற்றும், பெண்களின் கர்ப்பப்பை கோளாறுகளை நீக்கும். ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்யும்,நீரிழிவு வியாதிக்காரர்கள் உண்ணலாம். சிறு நீரக கோளாறை நீக்க வல்லது. மூல நோயைத் தணிக்கும் தண்மையுடையது சப்போட்டாப் பழம். நோயைத் தரும் எண்ணெய் நொறுக்குத் தீனிகளை விட பழங்கள் மென்மையானது. உடலுக்கு திடம் தருபவை. தினம் ஒரு பழம்.உங்கள்ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
நொச்சி இலை, வேம்பு, முடக்கத்தான் மற்றும்வாதநாராயணன் இலை ஆசியவற்றை ஒவ்வொன்றிலும் ஒரு கைப்பிடி எடுத்து, ஒரு குடம் அளவு தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். கரும்பச்சை நிறத்தில் இருக்கும் இந்த தண்ணீரை, இளம் சூட்டில் காலில் மேலிருந்து கீழாக மெதுவாக ஊற்ற. மூட்டுவலி, கால் வலி குணமாகும்.