25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
அரசு பஸ்களில் ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின்செண்பகத் தோப்பில் உள்ள சாம்பல் நிற அணில்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த அதன் ஓவியங்கள்வரையப்பட்டுள்ளது >> இந்திய சமத்துவ நாயகன் R.சங்கர் கணேஷ் 21-ம் ஆண்டு தொடர் சேவையாளர். >> ராஜபாளையத்தில் தெரு நாய்களின் தொல்லை. >> ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி இயற்கை கழகம் இணைந்து விழிப்புணர்வு கலை பயணம் துவக்க விழா. >> செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் ,போலீஸ் செக்போஸ்ட் கூண்டு பணிகள் துவக்கம். >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான  ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி  >> ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு . >> ராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில்  பாதாள சாக்கடை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை தீர்மானம் . >> ராஜபாளையத்தில் 9.2 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. >> ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு >>


ஆரோக்கியம்

Feb 04, 2025

பீர்கங்காய்

இருமல் சளி தலைவலி போன்ற உபாதைகள் இருந்தால், இதனை சாப்பிடக்கூடாது காரணம் தலையில் நீர் கோத்துக் கொள்ளும். இதில் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த காய் என்பதால் வாங்கிய உடனே ,சமைத்து சாப்பிடுவது நல்லது, அதிகபட்சம் மூன்று நாட்களுக்குள் உபயோகித்து விட வேண்டும். இதை வாங்கும்போது தோல்களில் வெடிப்பு அல்லது நிறம் மாறிப் போயிருந்தால் வாங்க வேண்டாம். இதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலுக்கும் மூல நோய்க்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் வயிற்றில் அமில சுரப்பு ,அதிகமாவதை தடுக்கும் மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். தோல் சம்பந்தமான அனைத்து கோளாறுகளுக்கும் ,நல்ல தீர்வை கொடுக்கக் கூடியது. சிறுநீரக கோளாறுகளுக்கு, நன்கு முற்றிய பீர்கங்காயை பயன்படுத்தப்படுகிறது. இதில் இருக்கும் வைட்டமின்கள், தோல்  நோய்களையும் மற்றும் நீரழிவு நோய்களையும் குணப்படுத்துவதில் உதவுகின்றன. இதனை யாரும் இரவில் சாப்பிடக்கூடாது.

Feb 01, 2025

சுகப்பிரசவம் 

மருத்துவ காரணங்கள் அல்லாமல், வலிகளை தாங்க முடியாமலும், சிசேரியனை நோக்கி செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.ஆனால் ஆரோக்கியமான உடல்வலிமையோடு மனவலிமையும் கை கூடினால் சுகப்பிரசவம் எளிதான ஒன்று.மனஅழுத்தம் பிரசவத்திற்கு முதல் எதிரி.பிரசவம் எனக்கு எளிதில் நிகழும் என்ற கருத்தை மட்டுமே மனதில் வைத்து கொண்டு அந்த காலகட்டத்தை சந்தோசமாக அனுபவியுங்கள்.கர்ப்ப காலத்தின் பொழுது மேற்கொள்ளப்படும் எளிய உடற்பயிற்சிகள் தொடை மற்றும் இடுப்பு தசைகளை வலுவாக்குகின்றன.மேலும் பிறப்புறுப்பையும் இளக்கமாக்கி சுகபிரசவம் எளிதாக  நடைபெற உதவுகின்றது. ஆனால் இத்தைகைய உடற்பயிற்சிகள் முறையாக நிபுணர்களின் ஆலோசனையின் பெயரில் மேற்கொள்ள வேண்டும் இல்லையெனில் சிலநேரம் ஆபத்தாய் முடியக்கூடும்.எளிதான சுகப்பிரசவத்திற்கு தாயின் உடல் எடையும் வயிற்றில் உள்ள குழந்தையின் எடையும் குறிப்பிட்ட விகிதத்தில் இருப்பது அவசியம்.கர்ப்ப காலத்தின் பொழுது தாய்மார்கள் அவ்வப்போது எடையை பரிசோதித்துக் கொண்டு குழந்தைக்கு ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.தேவையற்ற கலோரிகள் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.பிரசவத்துக்கு 10 நாட்களுக்கு முன்பாக சில சமயம் வலி வரும் அப்போ அது பிரசவ வலி தானா என்று தெரிந்து கொள்ள, ஒரு முட்டை (நாட்டுக்கோழி யாக இருந்தால் சிறப்பு) சிறிது மிளகு, 1 ஸ்பூன் விளக்கெண்ணை சேர்த்து ஆம்லெட் போட்டு சாப்பிட்டால் அதே நாளோ அல்லது மறு நாளோ குழந்தை வலி இல்லாமல் சுகப்பிரசவம் ஆகும். வலி வரும் போது எல்லாம் இதை செய்து சாப்பிடலாம்.

Jan 29, 2025

குடைமிளகாய்

இவற்றை சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது, அதிகசூட்டில் சமைக்கக் கூடாது.வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது.புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது.மூட்டு வலிக்கு மருந்தாகிறது.செரிமானப் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது. வயிற்று வலி ,வாயுத் தொல்லை, வயிற்றுப் போக்கு ஆகியவற்றுக்கும் இது ஒரு நல்ல நிவாரணியாக உள்ளது.இரத்தத்தில் உள்ள சர்க்கரைஅளவை  சமநிலைப்படுத்தி, நீரிழிவையும்  கட்டுப்படுத்துகிறது. இதில் கலோரிகள் மற்றும்கொழுப்பு ஆகியவை குறைவாக இருப்பதால் ,தேவையிலலாத கொலஸ்ட்ராலின் அளவுகளும் அதிகரிக்காமல் இருக்கும்.இதில் உள்ள கேயின்  என்னும் வேதிப் பலவிதமான உடம்பு வலிகளைக் குறைக்கிறது.ஒரு நல்ல ஆன்டி ஆக்சிடண்ட்டாக உள்ளது.இரத்த நாளங்கள், சருமம், எலும்புகள் ஆகியவை  சீராக செயல்பட இது உதவுகிறது.

Jan 28, 2025

வேகவைத்த முட்டைகளின் ஊட்டச்சத்து

வேகவைத்த முட்டைகள் பெரும்பாலும் முட்டைகளை. கூடுதல் பொருட்களைச் சேர்க்காமல், அவற்றின் பெரும்பாலான ஊட்டச்சத்துக்களை தயாரிப்பது மற்றும் தக்கவைப்பது எளிது. யுனைடெட் ஸ்டேட்ஸ் டிபார்ட்மெண்ட் ஆஃப் அக்ரிகல்சலின் (USDA) கூற்றுப்படி, கடின வேகவைத்த முட்டையில் தோராயமாக 6 கிராம் உயர்தர புரதம் உள்ளது, இது தசை வளர்ச்சி மற்றும் பழுதுபார்ப்பிற்கான சிறந்த தேர்வாக அமைகிறது மேலும், வேகவைத்த முட்டைகள் அத்தியாவசிய வைட்டமின்களான பி12, ஏ மற்றும் டி, இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களுடன். இது உடலை திருப்திப்படுத்த உதவுகிறது, இதனால் தேவையற்ற பசி மற்றும் எடை அதிகரிப்பில் இருந்து விடுபட உதவுகிறது. முட்டையில் கோலின் உள்ளது, இது மூளை வளர்ச்சி, நினைவக செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த அறிவாற்றல் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஊட்டச்சத்து ஆகும்.  முட்டையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளான லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் வயது தொடர்பான மாகுலர் சிதைவிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் நல்ல பார்வையை பராமரிக்கிறது வேகவைத்த முட்டைகள் வயிற்றில் மென்மையாக இருக்கும், இது நோயிலிருந்து மீண்டு வருபவர்களுக்கு அல்லது உணர்திறன் வாய்ந்த செரிமானம் உள்ளவர்களுக்கு, இது ஒரு நல்ல தேர்வாக அமைகிறது. வேகவைத்த முட்டையில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது, ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கிறது. அவற்றில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, இது ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல உதவுகிறது மற்றும் இரத்த சோகை அபாயத்தைக் குறைக்கிறது. ஒரு பெரிய வேகவைத்த முட்டையில் சுமார் 78 கலோரிகள்,ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, அவை வயது தொடர்பான கண் சிதைவிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.

Jan 21, 2025

கருப்பு திராட்சை விதை 

கருப்பு திராட்சை என்றவுடன், அனைவருக்கும் நினைவுக்கு வருவது, புளிப்பு சுவை தான். திராட்சைப் பழங்களை விட, அதன் விதையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.கருப்பு திராட்சை விதையில், புரோஆன்தோசயனிடின் எனும் சத்து அதிகமாக உள்ளது. இது, ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, வீக்கம், ரத்தக்கொதிப்பு போன்ற பிரச்னைகளை நீக்குகிறது.மூல நோயால் ஏற்படும் ரத்தப் போக்கை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.ரத்தக் குழாய்களில் உள்ள கொழுப்பை கரைத்து, சர்க்கரை நோய் மற்றும் கால்கள் மரத்துப் போதல் போன்ற பிரச்னையை குணமாக்குகிறது.சிறுநீரக செயல்பாட்டிலுள்ள குறைகளை சரி செய்கிறது. மேலும், மாலைக்கண் நோய் மற்றும் கண்புரை போன்ற கண் தொடர்பான பிரச்னைகள் வராமல் பாதுகாக்கிறது.பெண்களின் மார்பக புற்றுநோய், கருப்பை கோளாறுகள் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும். புரோஸ்டேட் புற்றுநோய் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கிறது.நம் உடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி, புத்துணர்ச்சி தரக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடெண்ட் அதிகம் நிறைந்துள்ளது. மேலும்,புற்றுநோய் செல்களை அழித்து, புதிய ஆரோக்கியமான செல்கள் அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவுகிறது.எனவே, திராட்சைப் பழத்துடன் விதைகளை சேர்த்து உண்பது, நல்ல பலனை தரும்.உடல் வளர்ச்சியில் குறைபாடு, உடல் பலகீனம், தோல் வியாதி, மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம் ஆகிய பிரச்னை உள்ளோர், திராட்சை விதை தொடர்ந்து சாப்பிட்டு வர, விரைவில் நிவாரணம் கிடைக்கும். நினைவாற்றலை பெருக்கவும் இது பயன்படுகிறது.

Jan 17, 2025

எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்யும் முருங்கைக்காய்.

முருங்கைக்காய் ஆஸ்துமா, கல்லீரல் மற்றும் கணைய வீக்கம் போன்றவற்றை குணப்படுத்துகிறது.இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும்.மலச்சிக்கல்,வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு பயன்படுகிறது.இதை சாப்பிட்டால் சிறுநீரகம் பலப்படும்,தாது உற்பத்தி அதிகரிக்கும்.இதில் ஜிங்க சத்து அதிகம் உள்ளதால் மலட்டுத்தன்மை விந்து வேகமாக வெளியேறுதல் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க மாத்திரை சாப்பிடுபவர்கள் முருங்கைக்காய்உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.இதில் உள்ள அதிகளவு நார்ச்சத்து உடலில் சேரும்போது வயிற்றுப்போக்கு மலசிக்கல், குடல் பிரச்சினைகள், வாயுக்கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏறபட வாய்ப்புள்ளது.முதியவர்கள் மூட்டு நோய் உள்ளவர்கள் இதயம் சம்பந்தப்பட்ட நோயாளிகள் இதனை குறைந்த அளவு உட்கொள்ள வேண்டும்.

Jan 13, 2025

புத்துணர்ச்சியை வழங்கி சோர்வை நீக்கும் கரும்புச்சாறு

 கரும்புச்சாறு சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட உடலுக்கு அதிக நன்மைகளை வழங்குகிறது.240 மில்லி கரும்புச் சாறில் 250 கலோரிகள், 50 கிராம் கார்போஹைட்ரேட், இரும்பு, மக்னீசியம், கால்சியம்,பொட்டாசியம்,மாங்கனீசு, வைட்டமின்கள் கரும்பின் மருத்துவ குணங்கள் உள்பட பல நுண்ணூட்ட சத்துக்கள் உள்ளன.கல்லீரலை வலுவூட்டி நன்கு செயல்பட வைப்பதற்கு கரும்பில் உள்ள சத்துகள் உதவுகின்றது.சோர்வாக இருக்கும்போது கரும்புச்சாறு குடித்தால் கரும்பில் உள்ள குளுக்கோஸ் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உடனடியாக உடலால் உறிஞ்சப்பட்டு புத்துணர்ச்சியை வழங்கி சோர்வை நீக்கும். கரும்புச்சாறில் உள்ள பொட்டாசியமானது செரிமான திறனை மேம்படுத்துகிறது. மேலும், அது குறைந்த கிளை செமிக் குறியீட்டை கொண்டுள்ளதால் இது ரத்த குளுக் கோஸ் அதிகரிப்பதை தடுக்கும் திறன் கொண்டதாகவும் கூறப்படுகிறது...கரும்புச்சாறில் உள்ள கால்சியம் சத்தானது எலும்புகள் மற்றும் பற்களின் உறுதியை அதிகரிக்கச்செய்யும். கர்ப்பிணிகள் கரும்புச்சாறு உட்கொள்வதால் அதில் உள்ள இரும்பு மற்றும் போலிக் அமிலம், சிசுவின் சரியான வளர்ச்சியை ஊக்குவிப்பதாக மருத்துவ ஆய்வுகள்கூறுகின்றன. டாக்டர்கள் பரிந்துரைக்கும் அளவில், கரும்புச்சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.பொங்கல் சமயத்தில் கிடைக்கும் கரும்புகளை கடித்து சாப்பிட்டாலும் சரி, ஜீஸ் செய்து சாப்பிட்டாலும் இந்த நன்மைகளை பெறலாம் .

Jan 08, 2025

இரத்தத்தில் கலந்துள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம்.

மூச்சுப் பிரச்சினைகள், ஆஸ்துமா, சளித் தொல்லை நுரையீரல் போன்ற பல பிரச்சனைக்கு தீர்வாகும் தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம்.இரவு நேரங்களில் இதை சாப்பிட்டால் காலையில் மலத்தின் மூலம் சளி  வெளியேறும்.வெங்காய சாறை சம அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர நெஞ்சு சளி குணமாகும்.தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற உதவியாக இருக்கும்.தினமும் காலையில் சாப்பிட்டுவர உடல் எடை குறையும், இடுப்பை சுற்றியுள்ள சதை குறையும்.தேன் கலந்த சின்ன வெங்காயம் செய்வது ஒரு பெரிய கண்ணாடி பாத்திரத்தை எடுத்து அதில் சின்ன வெங்காயத்தை லேசாக கீறி அதில் போட்டுக்கொள்ளவும். பின் அதில் தேனை ஊற்றி ஊறவிடவும். இரண்டு நாட்கள் கை படாமல் ஊறவிட்ட பிறகு நீங்கள் தினமும் சாப்பிடலாம்.

Jan 07, 2025

கத்திரிக்காயை  யாரெல்லம் தவிர்க்க வேண்டும் 

கத்திரிக்காயில் வைட்டமின் ஏ, பி,சி,கால்சியம், மாங்கனீசு, பொட்டாசியம், இரும்பு சத்து மற்றும் நார்ச்சத்து என பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது.அரிப்பு, சரும அலர்ஜி, கண் எரிச்சல் மற்றும் கண்களில் ஏதேனும் பிரச்சனை உள்ளவர்கள் சருமம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் சுத்தரிக்காயை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.கத்தரிக்காயில் உள்ள ஆக்சலேட்டுகள் சிறுநீரக கல் பிரச்சனையை மோசமாக்கும் என்பதால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.கத்திரிக்காயில் இயல்பாகவே கருச்சிதைவை ஏற்படுத்தும் பண்பு உள்ளதால் கருவுற்ற பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி சாப்பிடுவது நல்லது.கத்தரிக்காயை அதிகம் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறு, நெஞ்சு எரிச்சல் வாயு பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் அளவாகசாப்பிடுவது நல்லதுசர்க்கரை நோய், நுரையீரல் பிரச்சனை மற்றும் ஞாபக சக்திகுறைவாக உள்ளவர்கள் கத்தரிக்காயை உணவில்  தாராளமாகஎடுத்துக்கொள்ளலாம்.

Jan 06, 2025

எலும்புகள் உறுதியாக இருக்க

கேழ்வரகில் சமைத்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். எள்ளில் செய்த உணவை சாப்பிட வேண்டும்.பப்பாளி, பீன்ஸ், பாதாம் ,முந்திரி,நட்ஸ். பிரண்டை ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள எலும்புகள் உறுதியாக. வலுவாக இருக்கும்.கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள எலும்புகள் பலமாக இருக்கும்.வாழைத்தண்டு, முள்ளங்கி, சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய் போன்ற நீர்க் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொண்டால் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கலாம். ஆஸ்துமா, மார்பு சளி போன்றவை நீங்க, மலட்டுத்தன்மையை அகற்ற முருங்கை கீரை சூப் நல்லது.மஞ்சளை அனலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரித்து, பின்பு அந்த சாம்பலை தேனில் கலந்து சாப்பிட குடல் புண் குணமாகும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 15 16

AD's



More News