25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விளையாட்டு (SPORTS)

Oct 22, 2024

உலக விளையாடு போட்டிகள்

ஹாக்கி-ஜோகர் கோப்பை தொடர் இந்தியா-மலேசியா மோதல்.ஜோகர் கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் இன்று இந்தியா, மலேசியா மோதுகின்றன. இந்திய அணி, முதலிரண்டு போட்டியில் ஜப்பான், பிரிட்டன் அணிகளை வீழ்த்தியது.   கால்பந்து--'லா லிகா' கோப்பை பார்சிலோனா வெற்றி-ஸ்பெயினில் நடக்கும் 'லா லிகா' லீக் போட்டியில் பார்சிலோனா அணி 5-1 என்ற கணக்கில் செவில்லா அணியை வீழ்த்தியது. பந்தை தட்டிச் செல்ல போராடிய இரு அணி வீரர்கள்.   டென்னிஸ்-டபிள்யு.டி.ஏ., தரவரிசை,சபலென்கா 'நம்பர்-1' இடம்.டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் பெலாரசின் சபலென்கா 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். போலந்தின் ஸ்வியாடெக் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். கூடைப்பந்து-பெண்கள் என்.பி.ஏ., நியூயார்க் அணி சாம்பியன்.அமெரிக்காவில் நடந்த என்.பி.ஏ., கூடைப்பந்து பைனலில் நியூயார்க் லிபெர்டி அணி 3-2 என மின்னேசோடா லின்க்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 

Oct 22, 2024

உலக கோப்பை வில்வித்தையில் தீபிகா குமாரி வெள்ளி வென்றார்.

மெக்சிகோவில், உலக கோப்பை வில்வித்தை பைனலில் நடந்தது. பெண்களுக்கான தனிநபர் “ரீகர்வ்” பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி பங்கேற்றார். தீபிகா பைனலில் சீனாவின் jiymanலியை எதிர்கொண்டார். இதில் ஏமாற்றிய தீபிகா 0-6 (26-27, 28-30, 25-27) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தார்.இது உலக கோப்பை பைனலில் தீபிகாவின் 5-வது வெள்ளிப்பதக்கம், ஒன்பதாவது முறையாக உலக கோப்பை பைனலில் பங்கேற்ற தீபிகா, 5 வெள்ளி (2010 2013,2015,2024) ஒருவெண்கலம்(2018) என,6 பதக்கம்வென்றுள்ளார்.இந்தியாவின்டோலாபானர்ஜி 2007 மட்டும் உலக கோப்பை பைனலில் தங்கம் வென்றுள்ளார்.

Oct 21, 2024

மலேசியாவில், 21 வய துக்குட்பட்டோருக்கான சுல்தான் ஆப் ஜோகர்' கோப்பை ஹாக்கி 12வது சீசனில் இந்தியாவுக்கு 2வது வெற்றி

மலேசியாவில், 21 வயதுக்குட்பட்டோருக்கான சுல்தான் ஆப் ஜோகர்' கோப்பை ஹாக்கி 12வது சீசன் நடக்கிறது.நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, பிரிட்டன் அணிகள் மோதின. இரண்டாவது பாதியின்  பிரிட்டனின் மைக்கேல் ராய்டென் (56) ஒரு கோல் அடித்தார். பின் இந்தியாவின் தில்ராஜ் (50), ஷர்தானந்த், கோல் அடித்தனர். பிரிட்டன் அணிக்கு ராய் டென் (59) மீண்டும் ஒரு கோல் அடித்தார். இந்திய அணி 6-4 என்ற கணக்கில் தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்தது.

Oct 19, 2024

இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி பேட்டிங்கில் சிறப்பாக ஆடியது

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 46 ரன்னுக்கு சுருண்டது. இரண்டாவது நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 180/3 ரன் எடுத்து 134 ரன் முன்னிலை பெற்றிருந்தது.முதல் இன்னிங்சில் 356 ரன் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. இரண்டாவது இன்னிங்சில் 231/3 ரன் எடுத்து 125 ரன் பின்தங்கியுள்ளது.முதல் இனினிங்சில் குறைந்த ஸ்கோருக்கு அவுட்டான எந்த அணியும், அந்த டெஸ்டில் வென்றது. கிடையாது. இதை மாற்ற முயற்சிக்கிறது. இருப்பினும் ஏதாவது அதிசயம் நிகழ்த்தி போட்டியில் வெற்றிக்கு முயற்சிக்கும், திட்டத்துடன் ,இந்திய பேட்டர்கள் உள்ளனர். இரண்டாவது இன்னிங்சில் தற்காப்பு முறையில் விளையாடாமல் துவக்கத்தில் இருந்தே தாக்குதல் பாணியில் அடித்து விளையாடி, வேகமாக ரன் சேர்க்கின்றனர்.மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணி 125 ரன் மட்டும் பின்தங்கியுள்ளது. கைவசம் 7 விக்கெட்டுகள் மீதமுள்ளன. இன்று நான்காவது நாளில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். நான்காவது இன்னிங்சில் குறைந்த பட்சம் 100 ரன்னுக்கும் மேல் இலக்கு என்றால் கூட, இம்மைதானத்தில் சேஸ் செய்வது கடினம். விராத்கோலி, தனது 53-வது ரன்னை எடுத்த போது டெஸ்ட் அரங்கில் 9000 ரன் எட்டினார். இம் மைல் கல்லை தொட்ட 4-வது இந்திய வீரர் ஆனார்.

Oct 19, 2024

செஸ் மாஸ்டர்ஸ் தொடரில் இந்தியாவின் அர்ஜீன் கோப்பை வென்று. 18 லட்சம் பரிசு பெற்றார்

இஙகிலாந்து லண்டனில் செஸ் மாஸ்டர்ஸ் தொடர் பைனலில் இந்தியாவின் அர்ஜீன் எரிகைசி, பிரான்சின் மேக்சிம் வாசியர் மோதினர். இதன் முதல் போட்டியில் அர்ஜீன் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார்.30வது நகர்த்தலில் போட்டி டிரா ஆனது. அர்ஜீன் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய இரண்டாவது போட்டியும் டிரா ஆனது.வெற்றியாளரை முடிவு செய்ய டை பிரேக்கர் நடந்தது. இதில் அர்ஜீன் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார் இவர், 69வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். முடிவில் 2,0-1-0 என்ற கணக்கில் வென்று, கோப்பை தட்டிச் சென்றார். இவருக்கு 18 லட்சம் பரிசு கிடைத்தது.

Oct 19, 2024

தற்போதைய விளையாட்டு மசோதா

இந்திய விளையாட்டு அமைப்புகளில் ஊழலை ஒழித்து வெளிப்படைத்தன்மையை கொண்டு வர, புதிய விளையாட்டு ஒழுங்கு முறை அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. இது தொடர்பான மசோதா விரைவில் பாரிலிமென்டில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.இதன்படி தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளை ஒழுங்குமுறை அமைப்பு கண்காணிக்கும், அங்கீகாரம் நிதி உதவி, நிர்வாகிகளின் வயது வரம்பை முடிவு செய்யும், இந்தியாவில் ஏற்படும் விளையாட்டு பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண தீர்ப்பாணை யத்தை அமைக்கும்.இதற்கு  எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.அதில் கிராமப்புற அளவில் விளையாட்டு வளர்சிக்கு மாநில ஒலிம்பிக் சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், புதிய விளையாட்டு மசோதாவில் மாநில ஒலிம்பிக் சங்கங்களின் நிலை பற்றி தெளிவாக குறிப்பிடவில்லை. அனைத்து அதிகாரமும் ஒழுங்குமுறை அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய ஒலிம்பிக் சஙகம், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளின் தன்னாட்சி பாதிக்கப்படும் என்றார்.

Oct 18, 2024

டில்லி உலககோப்பை துப்பாக்கி சூடுதல் விவான் கபூர் வெள்ளிப்பதக்கம்.

டில்லியில் உலக கோப்பை துப்பாக்கி சூடுதல் பைனல் நடக்கிறது. ஆண்களுக்கான டிராப் பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் விவான் கபூர், 120 புள்ளிகளுடன் 3-வது இடம் பைனலுக்கு முன்னேறினார். அடுத்து நடந்த பைனலில் விவான்கபூர் 44 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரர் மைராஜ் அகமது கான் வயது 16, 6-வது இடத்தை கைப்பற்றினார். இத்தொடரில் இந்தியாவுக்கு இதுவரை 2 வெள்ளி, 2 வெண்கலம் என 4 பதக்கங்கள் .

Oct 18, 2024

தெற்காசிய பெண்கள் கால்பந்தில் இந்தியா வெற்றி

தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 7வது சீசன் நேற்று நேபாளத்தில் துவங்கியது. 'A' பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, தனது முதல் போட்டியில் நேற்று பாகிஸ்தானை சந்தித்தது. இந்திய அணி கேப்டன் ஆஷாலதா தனது 100 வது சர்வதேச போட்டியில் களமிறங்கினார். முடிவில் இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Oct 17, 2024

டில்லியில் உலக கோப்பை “கோ கோ'லோகோ அறிமுகம் .

 டில்லியில், 'கோ கோ' உலக கோப்பை முதல் சீசன் அடுத்த ஆண்டு ஜன. 13-19ல் நடக்கிறது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான லோகோ நேற்று டில்லியில் அறிமுகமானது. டெல்லி உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில்  இந்திய வீரர் அகில் ஷியோரன்.வெண்கலம் வென்றார் ..

Oct 17, 2024

தெற்காசிய கால்பந்தில் இந்தியா பாகிஸ்தான் பெண்கள் போட்டி

தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், பெண்களுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 7வது சீசன் இன்று நேபாளத்தில் துவங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான் உட்பட 7 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டி முதலில் லீக் முறையில் நடக்கின்றன. புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள், அரையிறுதிக்கு அக்டோபர் 27-ம் தேதி முன்னேறும். இதில் வெல்லும் அணிகள் அக்டோபர் 30-ல் நடக்கவுள்ள பைனலில் பலப்பரிட்சை நடத்தும்.இந்திய அணி "A" பிரிவில் பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் வங்கதேசம் என வலுவான அணிகளுடன் இடம் பிடித்துள்ளது. இன்று தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.இந்திய அணி கேப்டன் ஆஷாலதா தேவி 31 மணிப்பூரின் இம்பாலை சேர்ந்தவர் தனது 15 வயதில், இந்தியாவின் 17 வயதுக்குட்பட்ட அணியில் முதன் முறையாக தேர்வானார்  .கடந்த 2011-ல் வங்கதேசத்திற்கு எதிராக அறிமுகம் ஆனார். இன்று தனது 100வது சர்வதேச போட்டியில் களமிறங்குகிறார். இந்திய பெண்கள் கால்பந்தில் இம் மைல் கல்லை எட்டும் முதல் வீராங்கனை என்ற பெருமை பெறவுள்ளார்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 25 26

AD's



More News