25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >>


ஆன்மீகம்

Nov 01, 2024

திருமீயச்சூர் லலிதாம்பிகை

திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலயத்தில் வைகாசி பௌர்ணமி, தை அமாவாசை நவராத்திரியின் கடைசி நாளான விஜய தசமி நாளில் நெய்குள தரிசன உற்சவம் நடைபெறும் இந்நாட்களில் அம்பாள் சன்னதியின் முன்பாக 15 அடி நீளம், 4 அடி அகலத்திற்கு வாழை இலைகளை பரப்பி, சுற்றிலும் தென்னமட்டைகளை வைத்து, தடுப்பு அமைத்து விடுவர். பதினைந்து அடிநீள பகுதி, மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, முதல் பகுதியில் சர்க்கரைப் பொங்கல்,இரண்டாம் பகுதியில் புளியோதரை, மூன்றாம் பகுதியில் தயிர் சாதம் என நிரப்பப்படும் முதல் பகுதியான சர்க்கரைப் பொங்கலின் நடுவே பள்ளம் அமைத்து, அதில் உருக்கிய நெய் ஊற்றி குளம் போல் அமைத்து அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு திரையிடப்படும் அலங்காரங்கள் முடிந்து திரை விலக்கப்படும் போது சர்வ அலங்காரத்தில் அம்பாளின் திருமுகம் அந்த நெய்க்குளத்தில் தெரியும் இதுவே நெய்குள் தரிசனம் இந்த நெய்குள் தரிசனம் காண்பவருக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை.

Oct 25, 2024

ஹயக்ரீவரும்.. சரஸ்வதியும்..

திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் செல்லும் சாலையில் சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தாடிக்கொம்பு திருத்தலம். இங்கு சவுந்தரராஜப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.மண்டுக மகரிஷி தனது சாபம் அகல தவம் செய்த திருத்தலம் இதுவாகும். இங்கே கல்வி அருளும் தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதி ஆகியோருக்குத் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன.திருவோண நட்சத்திரத்தில் ஹயக்ரீவருக்கு தேன் அபிஷேகம் செய்தும். தேங்காய். நாட்டுச் சர்க்கரை, நெய் கலந்த நைவேத்தியத்தை படைத்தும், ஏலக்காய் மாலை அணிவித்தும் வழிபடுவது. சிறப்பான பலனைத் தரும். சரஸ்வதி பூஜையன்று இத்தல சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

Oct 18, 2024

மகாலட்சுமியின் அருளை பெற…

பூஜை அறையில் விளக்குபிரம்ம முகூர்த்த வேளையில், கை, கால்களை கழுவி விட்டு, பூஜை அறைக்குள் வலது காலை எடுத்து வைத்து செல்ல வேண்டும். பூஜை அறையில் விளக்கேற்றி, ஊதுபத்தி மட்டும் ஏற்றி வைத்து விட்டு வந்து விட்டால் போதும். அந்த வீட்டிற்கு மகாலட்சுமி வந்து விடுவாள். எந்த ஒரு வீட்டில் பிரம்ம முகூர்த்த வேளையில் விளக்கு ஏற்றப்படுகிறதோ அந்த வீட்டிற்கு மகாலட்சுமி வருவாள். அதோடு மகாலட்சுமிக்கு விருப்பமான ஊதுபத்தி, பச்சை கற்பூரம் மணம், வெற்றிலை பாக்கு அங்கு இருந்தால் மன மகிழ்ச்சியுடன் வந்து, தன்னுடைய பூரண அருளை வழங்கி, இங்கேயே இருந்து விட வேண்டும் என மகாலட்சுமி விரும்புவாள் . சமையல் அறையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தினமும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு, வீட்டின் சமையல் அறையை சுத்தம் செய்து, அடுப்பை சுத்தமாக வைக்க வேண்டும். அடுப்பு வைத்திருக்கும் மேடையில் சிறிய கோலமிட்டு விட்டு செல்லுங்கள். காலையில் எழுந்து வந்ததும், அடுப்பை தொட்டு வணங்கி விட்டு சமையல் வேலைகளை துவங்குங்கள். இப்படி தினமும் செய்பவர்களை மகாலட்சுமிக்கு மிகவும் பிடிக்கும். எந்த விட்டில் சமையலறை சுத்தமாக உள்ளதோ அந்த வீட்டில் மகாலட்சுமியும், அன்னபூரணியும் மகிழ்ச்சியாக வந்து தங்குவார்கள். அந்த வீட்டில் குறைவில்லாத அரிசி, தானியங்கள் பெருகிக் கொண்டே இருக்க அருள வேண்டும் என அன்னபூரணியிடம் மகாலட்சுமியே சொல்லுவாளாம்.

Oct 11, 2024

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் 

புரட்டாசி மாதம். கன்னிராசியின் அதிபதி புதன் பகவான். புதன் பகவான் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதனால்தான் புரட்டாசி மாதம் பெருமாளை வழிப்படுவது மிக சிறந்தது. புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளை வழிப்பட்டால், அனைத்து விதமான கஷ்டங்கள், துன்பங்களில் இருந்து விடுபட்டு வளமான வாழ்வைப் பெறலாம் என்பது நம்பிக்கை. வெங்கடேச பெருமாள் திருப்பதி திருமலையில் அவதரித்தது புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் தான். அம்பிகைக்கு உரித்தான நவராத்திரியும் புரட்டாசியிலேதான் வரும்.

Oct 11, 2024

நவராத்திரி விரதம்

நவம் என்றால், ஒன்பது என்று பொருள். ஒன்பது இரவுகள் அம்பிகையை,பல வடிவங்களில் பூஜை செய்து, அவளின் அருளைப் பெற்று, 10ம் நாள் வெற்றித் திருநாளாக அதாவது, விஜயதசமியாக கொண்டாடுவர். புரட்டாசி மாதமும், பங்குனி மாதமும் எமதர்மனுடைய கோரைப் பற்கள் எனவும், ஜீவ ராசிகள் அவற்றில் கடிபடாமல் இருக்க, நவராத்திரி பூஜையைமேற்கொள்ள வேண்டும் என்று, 'அக்கினி புராணம்' கூறுகிறது.முதலில், பார்வதி தேவியாக மூன்று நாட்களும், லட்சுமி தேவியாக மூன்றுநாட்களும், சரஸ்வதி தேவியாக, மூன்று நாட்களும் வழிபட்டு, பத்தாம் நாள். அனைத்து அம்சங்களும் பொருந்திய மகிஷாசுரமர்த்தினியாக வழிபடுகின்றனர்.பணி நிமித்தமாக, நவராத்திரி பூஜையை செய்ய முடியாத பெண்கள், ஒன்பது நாட்களில் கடைசியாக வரும், சப்தமி, அஷ்டமி, நவமி நாட்களில் பூஜை செய்து, பூரண நற்பலன்களைப் பெறலாம்.இதுவும் முடியாத செயல் என்றால், நவமி அன்று ஒருநாள், சரஸ்வதி பூஜையுடன் வழிபாடு செய்து விடலாம். இப்படிச் செய்வதால் வாழ்வில் தன வளமும், தேவி தரிசனமும் கிடைக்கும்.

Oct 04, 2024

நவகிரகத்தை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள்

சூரியன் -உடல் ஆரோகியத்தை வழங்கும். சந்திரன் -புகழ் கீர்த்தியை கொடுக்கும். செவ்வாய் -தைரியத்தையும் தன்னம்பிக்கையும் தரும். புதன் -அறிவு வளத்தை பெருக்கும். குரு -மதிப்பையும் மரியாதையும் பெருகும். சுக்ரன் -அழகையும் ஆற்றல் மிகுந்த பேச்சையும் தரும். சனி -ரோகத்தைத் தவிர்க்கும் இழப்பை ஈடுசெய்யும். ராகு- பயத்தை போக்கும். கேது -பாரம்பரியத்தை வளர்க்கும்.

Oct 04, 2024

ஆலய கொடி மரங்களில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வாசம் செய்யும் இடம்

ஆலய கொடி மரத்தின் அடியில் சாஷ்டாங்கமாக வழிபட்டு கொடி மரத்தின் அடியில் சற்று அமர கடன், திருமணத் தடை, புத்திர பாக்கியம், உடல் நலம் பாதிப்பு, பகை, வழக்குகள், போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் பெறலாம்.கொடி மரங்களில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வாசம் செய்வதாக ஐதீகம். 

Sep 27, 2024

கிருஷ்ணரின் பாத ரகசியம்

 பெருமாள் கோவிலுக்கு சென்றால் முதலில் பாதங்களை தரிசித்த பிறகு தான், முகத்தை தரிசிக்க வேண்டும் என்பார்கள். அதாவது, இறைவனின் திருவடியை அடைவதே இந்த பிறவியின் நோக்கம் என்பதை உணர்த்தவே இப்படி சொல்லப்படுகிறது. இதற்குள் பலரும் அறியாத மற்றொரு ரகசியமும் உள்ளது. கிருஷ்ணரின் பாதங்களை தாமரை பாதங்கள் என்பார்கள். தாமரை, சேற்றில் முளைத்தாலும் அதனால் பாதிக்கப்படாமல் மேலே உயர்ந்து நிற்கும். அது போல உலக இன்பங்களாக சேற்றை விட கிருஷ்ணரின் கருணை உயர்ந்தது என காட்டுதாகும். கிருஷ்ணரின் வலது பாதத்தில் 11. இடது பாதத்தில் 8 என அனைத்து புனித சின்னங்களும் கிருஷ்ணரின் திருவடிகளில் உள்ளது. சங்கு, சக்கரம், வில், ஸ்வஸ்திக், தாமரை, பிறை சந்திரன், மீனம் வஜ்ராயுதம் உள்ளிட்ட பலவிதமான ஆயுத சின்னங்கள் உள்ளன. இவைகள் இருக்கும் இடத்தில் அனைத்து விதமான நன்மைகளும் பெருகும். தீமைகள் எதுவும் நெருங்காமல் பக்தர்களை காக்கும். இது தான் கிருஷ்ணரின் பாதத்தை தரிசிப்பதற்கும், பாதங்களை வீடுகளில் வரைவதற்கு, வைத்து வழிபடுவதற்குமான காரணம்

Sep 27, 2024

பகுமுகி லிங்கம்

259 திருமுகத்துடன் 4000 கிலோ எடையுள்ள " பகுமுகி லிங்கம்". இது சோலாப்பூர் ஸ்ரீ ஹரிஹரரேஷ்வரர் ஆலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த பகுமுகி லிங்கத்தை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது ஐதீகம்.  நாமும் தொழுது வாழ்வில் நன்மைகள் கோடி அடைவோம்.

Sep 20, 2024

புரட்டாசி சனிக்கிழமை பற்றிய புராண கதை

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். புரட்டாசி சனிக்கிழமைகளில் காகத்திற்கு எள்ளும் வெல்லமும் கலந்த சாதம் வைத்தால் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும். மறந்து கூட சில தவறுகளை செய்யக்கூடாது அப்படி செய்தால் பணப்பிரச்சினை வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. சனிபகவானைப் பார்த்து பலரும் பயப்படுகின்றனர். காரணம் சனியின் பார்வை பயங்கரமானது. மக்கள் தன்னைப்பார்த்து பயப்படுவதை விட தன்மீது அன்பு செலுத்த வேண்டும் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் சனிபகவான் விரும்புகிறார். சனிபகவானுக்கு பெருமைப்படுத்த அந்த ஏழுமலையானே ஒரு புரட்டாசி சனிக்கிழமை நாளில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். இது பற்றிய புராண கதை ஒன்று உள்ளது. சனி உஷஸ் எனப்படும் சனிக்கிழமையின் விடியற்காலை வேளை மங்களமானதாகவும், அனைத்து சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு உகந்த நாட்களாகவும் விளங்குகின்றன. இது ஏன் எப்படி என்று பல கேள்விகள் எழலாம்.. சூரியனுக்கு சஞ்ஜனா, சாயா என இரண்டு மனைவிகள். சூரியனுக்கும் சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்ம ராஜாவும், யமுனா நதியும். சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன். கண்ணபிரான் யமுனையில் உள்ள காளியனை அடக்கி யமுனா நதியைத் தூய்மையாக்கிய பின் அனைத்துத் தேவர்களும் யமுனையைப் போற்றத் தொடங்கினார்கள். கங்கையை விடப் புனிதமான நதியென அதைக் கொண்டாடினார்கள்.. அதைக் கண்ட சனீஸ்வரன் யமுனையிடம் வந்து, "சகோதரியே! உன்னை மங்களமானவள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால் என்னை முடவன் என்றும் அமங்களமானவன் என்றும் கூறுகிறார்களே. உன்னைப் போல நானும் மங்களகரமானவனாக ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.அங்கே வந்த நாரதர், "சனீஸ்வரா! யமுனை கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தாள். அதனால் மங்களகரமானவளாக இருக்கிறாள். நீயும் கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தால் மங்களமாகி விடுவாய்!" என்று கூறினார். கண்ணனை மகிழ்விக்க நான் என்ன செய்ய வேண்டும்?" என்று சனீஸ்வரன் கேட்டார். அதற்கு நாரதர், "ஹோலிகா என்று இரணியனுக்கொரு சகோதரி இருந்தாள். அவளுக்குத் தீயால் சுடப்படாமல் இருக்கும் விசேஷத் தன்மை உண்டு. பிரகலாதனைப் பல விதமான தண்டனைகளுக்கு உள்ளாக்கியும் அவன் அவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பதைக் கண்ட இரணியன், ஹோலிகாவிடம் பிரகலாதனை ஒப்படைத்தான். பிரகலாதனைத் தீயில் தள்ளிய ஹோலிகா, தானும் தீக்குள் இறங்கி அவனை வெளிவரமுடியாதபடி அழுத்தினாள். அப்போது நரசிம்மப் பெருமாள் ஹோலிகாவின் பிடியிலிருந்து பிரகலாதனைக் காத்து வெளியே அழைத்து வந்தார்.ஹோலிகாவிடமிருந்து நரசிம்மர் பிரகலாதனைக் காத்த நாளைத்தான் ஹோலிப் பண்டிகையாக மக்கள் கொண்டாடுகின்றார்கள். அந்த ஹோலிகா பெண் என்பதால் நரசிம்மர் அவளைக் கொல்லாமல் விட்டுவிட்டார். இப்போது அவள் தன் சகோதரனான இரணியனைக் கொன்ற திருமாலைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறாள். திருமால் கண்ணனாக அவதாரம் செய்ததை அறிந்து கோகுலத்துக்கு அவள் வந்துவிட்டாள். ஹோலிப் பண்டிகை தினத்தன்று தன்னிடம் இருந்து பிரகலாதனை அவன் காத்த கண்ணனையும் அவன் தோழர்களையும் தீக்கு இரையாக்கிப் பழிதீர்க்கத் திட்டம் தீட்டியிருக்கிறாள். சனீஸ்வரா! நீ அந்த ஹோலிகாவைக் கண்டறிந்து அவளை எரித்துச் சாம்பலாக்கிவிட்டால், கண்ணனை மகிழ்விக்கலாம். அவன் அருளைப் பெறலாம். நீயும் மங்களகரமாக ஆகலாம்!" என்று உபதேசித்தார். ஹோலிப் பண்டிகை நாளன்று கண்ணனும் அவன் தோழர்களும் பெரிய பெரிய கொள்ளிக் கட்டைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து, நரசிம்மர் மற்றும் பிரகலாதனின் திருநாமங்களைப் பாடி, ஹோலிகாவின் கொடும்பாவியை எரித்து ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கொள்ளிக்கட்டைகளுக்குள் ஹோலிகா ஒளிந்திருந்தாள். தீ மூட்டப்பட்டவுடன் கண்ணனையும் அவன் தோழர்களையும் உள்ளே இழுத்துவிட வேண்டும் என்று எண்ணிய அவள் மேல் சனீஸ்வரன் தன் பார்வையைச் செலுத்தினான். சனிபார்வை பட்டவுடனேயே ஹோலிகா தன் சக்திகள் அனைத்தையும் இழந்து விட்டாள். கண்ணன் தீ மூட்டினான். அத்தீயில் ஹோலிகா எரிந்து சாம்பலானாள். நாரதர் சனீச்வரனைக் கண்ணனிடம் அழைத்துச்சென்று நடந்தவற்றை விவரித்தார். அப்போது சனீஸ்வரனது தொண்டுக்கு மனமுகந்த கண்ணன், "சனீஸ்வரா! நீ இனிமேல் மங்களமானவனாகத் திகழ்வாய் என்று வரம் கொடுத்தார். அன்றைய தினம் புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் பக்தர்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்களை சனிபகவான் தொல்லை செய்வதில்லை. புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும். புனிதமிக்க புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்கள் புண்ணிய பலன் அதிகம் தரும் என்பது ஐதீகம். புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம். காகத்திற்கு அன்று எள்ளும் வெல்லமும் கலந்த சாதம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும். 

1 2 3 4 5 6 7 8 9 10 ... 16 17

AD's



More News