பிறந்த நட்சத்திர நாளன்று கோயில் வழிபாடு செய்தால் முன்வினை பானம் தீரும். அன்று அவரவர் நட்சத்திரத்திற்கு உரிய தெய்வம். மரத்தை வழிபடுவது இன்னும் சிறப்பு, அதற்குரிய விசேஷ தலமாக திருவண்ணாமலை மாவட்டம் உக்கம்பெரும்பாக்கம் கூழமந்தல் ஏரிக்கரை அருகிலுள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோயில் உள்ளது.காஞ்சி மஹாபெரியவரின் வழிகாட்டுதலால் சிவானந்த சரஸ்வதி சதாசிவ சித்தர் சுவாமிகள் இங்கு நட்சத்திர விருட்சங்களை (மரம்) பிரதிஷ்டை செய்தார். பிறந்த நட்சத்திர நாளில் இங்குள்ள விநாயகரை வழிபட்ட பின் நட்சத்திர அதிதேவதைக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்வது நல்லது. அப்போது மரத்தை மூன்று முறை சுற்றுவது அவசியம். இதனால் சகல தோஷங்களும் விலகும். வேலைவாய்ப்பு. திருமணம், குழந்தைப்பேறு என சுபவிஷயங்கள் தடையின்றி நிறைவேறும். நட்சத்திரம் தெரியாதவர்கள் 27 நட்சத்திரம், 12 ராசிக்கான மரங்களை எல்லாம் பொதுவாக வழிபாடு செய்யலாம்.காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிரதிஷ்டை செய்த அத்திருத்ராட்ச லிங்கேஸ்வரர் இங்கு இருக்கிறார். வள்ளி, தெய்வானையுடன் சிவசுப்பிரமணியர், குருபகவான், சனீஸ்வரர், ராகு, கேதுவுக்கு சன்னதிகளும் உள்ளன.
கேரளாவிலுள்ள ஆலப்புழா மாவட்டம் மருத்தோர்வட்டம் சேர்த்தலாவில் தன்வந்திரி கோயில் உள்ளது. இங்கு வழிபடுவோர் நூறாண்டு நோயின்றி வாழ்வர். வயலார் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் வயிற்று வலியால் அவதிப்பட்டார். வைத்தியம் செய்தும் பலனில்லை. வைக்கம் மகாதேவர் கோயிலுக்கு சென்று தரிசித்தார். வலி குறைந்தது.கோயிலை விட்டு வெளியே வந்தவுடன் மீண்டும் வலி ஏற்பட்டது. எனவே அங்கேயே தங்கினார். அன்றிரவு கனவில், "இங்கிருந்து சேர்த்தலைக்கு செல் அங்குள்ள குளத்தில் மூழ்கினால் மூன்று தன்வந்திரி சிலைகள் கிடைக்கும்.முதலில் கிடைக்கும் சிலை சக்தி வாய்ந்ததால் அதைக் குளத்திலேயே விட்டு விடு. இரண்டாவது சிலையை அந்தணருக்கு தானமாக கொடு, மூன்றாவது சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் நோய் தீரும்' என்றார் சிவபெருமான். அதன்படி இரண்டாவதாக கிடைத்த சிலையை வெள்ளுடு மனையை சேர்ந்த நம்பூதிரிக்கு தானம் அளித்தார்.சில ஆண்டுக்கு பிறகு மண்மூஸ் என்பவரின் உதவியுடன் மூன்றாவது சிலையை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினார். இருவரின் குடும்பத்தினரும் நிர்வாகத்தை நடத்தினர்.இவர்களின் காலத்திற்குப் பின் கோயில் யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை எழுந்தது. இதில் மண்முஸ் குடும்பத்தினர் சிலையின் கையை உடைத்து கோட்டயம் அருகிலுள்ள, ஒளச்ச என்னும் இடத்தில் புதிதாகச் சிலை செய்து கோயில் கட்டினர்.வெள்ளுடு நம்பூதிரியின் குடும்பத்தினர் கை உடைந்த சிலையை மருத்தோர் வட்டத்தில் பிரதிஷ்டை செய்தனர். உடைந்த கையையும் வெள்ளியால் செய்து பொருத்தினர். இங்கு மேற்கு நோக்கியுள்ள வட்ட வடிவ சன்னதியில் சுவாமி இருக்கிறார்.*இக்கோயிலில் முக்குடி என்னும் மருந்தை தயிரில் கலந்து தயாரிக்கின்றனர். பூஜையின் போது சுவாமியின் கையிலுள்ள தங்கக்குடத்தில் இந்த மருந்தை நிரப்புவர். இதைப் பருகினால் நோய் தீரும். குணம் பெற்றவர்கள் சுவாமிக்கு வெண்ணெய், சந்தனம் சாத்துகின்றனர்.உடல் நலம் பெருக 'கயற்றேல் வானம்' என்னும் பூஜையை நடத்துகின்றனர். அமாவாசையன்று முன்னோர் வழிபாட்டில் சேப்பங்கிழங்கால் ஆன 'தாள்கறி நைவேத்யம்' செய்வர். இதைச் சாப்பிட்டால் நாள்பட்ட நோய்கள் தீரும்.
டில்லி க்யாலாவில் குடியிருக்கும் கருமாரியம்மனை வெள்ளியன்று தரிசித்தால்,திருமணத்தடை விலகும். திங்களன்று 'இங்குள்ள புற்றில் பால் ஊற்றி வழிபட நாகதோஷம் தீரும்.இக்கோயிலில் அகத்திய முனிவருக்கு காட்சியளித்த கருமாரி அம்மனுக்கு ,விளக்கேற்றினால் விரும்பிய வரம் கிடைக்கும். சித்தரான காகபுஜண்டர் இத்தலத்தை 'உத்திர வேதபூமி' எனப் பெயரிட்டு அழைத்தார்.முன்பு இப்பகுதியில் நாகப்புற்று ஒன்று இருந்தது. அதை பக்தர்கள் அம்மனாக கருதி வழிபட்டனர். காலப்போக்கில் கருமாரி அம்மனுக்குகோயில்கட்டப்பட்டது.இங்கு விநாயகர், முருகன், சிவன், ஆஞ்சநேயர், காலபைரவர், தட்சிணாமூர்த்தி, துர்கை, நவக்கிரக சன்னதிகள் உள்ளன. தற்போது கோதண்ட ராமர், தன்வந்திரி, சப்த கன்னியர் சன்னதிகள் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் விரைவில் நடக்க இருக்கிறது.ராகுதோஷம், திருமணம் ஆகாதவர்கள் வெள்ளியன்று அம்மனுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்துகின்றனர். சித்திரை திருவிழாவில் அக்னி சட்டி எடுத்து தீக்குழி இறங்கும் வைபவம் நடக்கிறது.குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சியின் போது சிறப்பு பூஜை நடக்கும்.
கும்பகோணம் அருகிலுள்ள திருமங்கலக்குடி பிராணநாதர் கோயில் மங்களாம்பிகையை தரிசித்தால் திருமணம் நடக்கும், சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.முற்பிறவியில் செய்த பாவத்தால் தனக்கு தொழுநோய் வரவிருப்பதை உணர்ந்தார் காலவ முனிவர். அதிலிருந்து விடுபட தவம் செய்தார். அதன் பயனாக காட்சியளித்த நவக்கிரகங்கள் 'இது விதிப்பயன் என்பதால் எங்களால் இதனை மாற்ற முடியாது' என்றனர். கோபம் கொண்ட முனிவர், 'உங்களுக்கு தொழுநோய் இப்போதே வரட்டும்' என சபித்தார். நோயால் அவதிப்பட்ட நவக்கிரகங்கள் இங்கு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து குணம் அடைந்தனர், காளி, பூமிதேவி, ஆகாசவாணி, மங்களாம்பிகை, பிரம்மா, விஷ்ணு, அகத்தியர் இங்கு சிவனை வழிபட்டுள்ளனர்.முதலாம் குலோத்துங்க சோழனின் அமைச்சர் அலைவாணர். லவாணர். இவர் மன்னரிடம் அனுமதி பெறாமல், கோயில் கட்டுவதற்கு அரசு பணத்தை பயன்படுத்தினார். இதையறிந்து அமைச்சருக்கு மரண தண்டனை விதித்தார் மன்னர். தண்டனைக்குப் பின் தன் உடலை சொந்த ஊரான திருமங்கலக்குடிக்கு கொண்டு செல்லுமாறு அலைவாணர் வேண்டினார். அதன்படி உடல் எடுத்துச் செல்லப்பட்டது. இதற்கிடையே அமைச்சரின் மனைவி திருமங்கலக்குடி அம்மனைச் சரணடைந்தாள். அம்மனும் உயிர்பிச்சை தரும்படி சிவபெருமானிடம் முறையிட்டாள். சிவனருளால் அமைச்சர் உயிர் பெற்றதால் சுவாமிக்கு 'பிராண நாதர்' என்றும், அம்மனுக்கு 'மங்களாம்பிகை' என்றும் பெயர் வந்தது.மூலவர் சிவலிங்கத்தின் மேல்பாகமான பாணம், கீழ்பாகமான ஆவுடையாரை விட உயரமாக இருக்கும். தொடர்ந்து 11 ஞாயிறு அன்று எருக்க இலையில் தயிர்சாதம் நைவேத்யம் செய்ய கிரகதோஷம் விலகும். நடராஜர் சன்னதியில் உள்ள மரகத லிங்கத்திற்கு தினமும் உச்சிக்காலத்தில் (மதியம் 12:00 மணி) பூஜை நடக்கிறது.மங்கள விநாயகர், மங்களாம்பிகை, மங்கள தீர்த்தம், மங்கள விமானம், திருமங்களக்குடி என அனைத்தும் மங்களகரமாக உள்ளது. எனவே இத்தலத்தை 'பஞ்ச மங்கள க்ஷேத்ரம்' என்கிறார்கள்.மங்காளாம்பிகை தெற்கு நோக்கி அருள்கிறாள். அம்மனின் வலக்கையில் சாத்திய தாலிக்கயிறு சுமங்கலி பெண்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. இதை அணிவோருக்கு சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.
ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் மலைகளுக்கு இடையில் உள்ளது புகழ் மிக்க ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில். இது பராசக்தியின் 51 சக்தி பீடங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள சரஸ்வதி, மகாலட்சுமியை தரிசித்தால் மாமியார், மருமகள் ஒற்றுமை பலப்படும்.தட்சனின் மகளான தாட்சாயிணியை மணம் செய்தார் சிவபெருமான். ஆணவம் மிக்க தட்சன் ஒருமுறை சிவபெருமானை அழைக்காமல், தேவர்களை அழைத்து யாகம் ஒன்றை நடத்தினார். கோபம் கொண்ட தாட்சாயிணி நியாயம் கேட்க சென்றாள். ஆனால் மகள் என்றும் பார்க்காமல் தட்சன் அவமானப்படுத்தினான். இதனால் வருந்தியவள் யாக குண்டத்தில் விழுந்து உயிர் நீத்தாள். கோபம் கொண்ட சிவபெருமான் அந்த உடலை சுமந்தபடி நாடெங்கும் அலைந்தார். இதைதடுக்கதிருமால்தன்சக்கராயுதத்தை வீச, அவளின்உடல்பாகங்கள்பலஇடங்களில்சிதறின.அந்ததலங்களே 51 சக்தி பீடங்களாக உள்ளன. இதில் தாட்சாயிணியின் மணிக்கட்டு இங்கு விழுந்தது. இத்தலம் 27வது சக்தி பீடமாகஉள்ளது.கருவறையில் பார்வதியை அணைத்தபடி சிவபெருமான் இருக்கிறார். இவருக்கு இடப்புறம் காளியும், வலப்புறம் கவுரி விநாயகரும் உள்ளனர். இந்தச் சிலைகள் திரேதாயுகத்தைச் சேர்ந்தவை.சிவனை சிந்தித்தபடி பார்வதி இங்கு இருப்பதால் இத்தலம் 'பிரிய பீடம்' எனப்படுகிறது. தம்பதியர் இங்கு வழிபட்டால் ஒற்றுமையாக வாழ்வர்.ஞானத்திற்கு அதிபதி சரஸ்வதி. செல்வத்திற்கு அதிபதி மகாலட்சுமி. இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி காளை வாகனத்தில் இங்குள்ளனர். காயத்ரி, மகாகாளியான சாமுண்டீஸ்வரியை வழிபட்டால் எதிரிபயம் விலகும். நந்தி பகவானே பைரவராக இங்குள்ளார்.
திருமலைக்கேணி ஸ்ரீ பாலசுப்ரமண்ய சுவாமி திருக்கோவில் கரந்தமலை தொடரில், மலை உச்சியில் அழகிய வனத்தின் மத்தியில் அமைந்துள்ளது. இது திண்டுக்கல் மாவட்டத்தில் சாணார்பட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் வற்றாத சுனையொன்று உள்ளது. பொதுவாக குன்றில் அமைந்திருக்கும் மலைக்கோவில்களில் சுவாமியை தரிசிக்க படியேறி செல்ல வேண்டும். ஆனால், இக்கோவில் படி இறங்கி சென்று தரிசனம் செய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த கோவிலை 'கீழ் பழனி' என்றும் அழைக்கிறார்கள்.இந்த கோவில் அமைந்த விதம் பற்றி ஒரு கதை சொல்லப்படுகிறது. ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதியை ஆண்ட பாண்டிய மன்னர் ஒரு முருகன் கோவில் கட்ட விருப்பம் கொண்டார். ஒரு நாள் வேட்டைக்காக இந்த வனப்பகுதிக்கு வந்தபோது இங்கிருக்கும் சுனையில் நீர் பருகி சற்று கண் மூடி ஓய்வெடுத்தார். அப்போது அவர் கனவில் வந்த முருகன் அந்த சுனைக்கு அருகிலேயே தனக்கு ஒரு கோவில் எழுப்பும்படி கூறுகிறான். மன்னரும் அவ்வாறே ஒரு கோவிலை எழுப்பினார்.வனத்திற்கு நடுவில் அமைந்த இந்த மலைக்கோவிலில் காலப்போக்கில் மூலவர் சிலை பின்னமடைந்தது. பூஜைகளும் நின்று போயின. பிரதான மூலவர் சிலை பின்னமடைந்ததால், வேறொரு சிலை செய்யப்பட்டது. ஆனால் எவ்வளவு முயன்றும் பின்னமடைந்த சிலையை வெளியே எடுக்க முடியவில்லை. எனவே அதன் மேல் ஒரு மண்டபம் கட்டி, அதற்கு மேலே ஒரு கோயிலைக் கட்டி புதிய முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தனர். இவ்வாறாக கீழே ஒரு முருகன், மேலே ஒரு முருகன் என்று இரண்டடுக்காக இந்த கோவில் அமைந்துள்ளது. 1979 இல் கிருபானந்த வாரியார் இந்தக் கோவிலை சீரமைக்கும் பணியை செய்தார்.மேலடுக்கிலுள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம் கீழ் அடுக்கிலுள்ள ஆதி முருகன் மீது விழும்படியாக இந்த சன்னதியை கட்டமைத்துள்ளனர். இதற்காக மேலேயுள்ள முருகன் பாதத்திற்கு கீழே ஒரு துளையும் அமைக்கப்பட்டுள்ளது.இந்த மூலஸ்தானத்தில் முருகன் பாலகனாக அருள்புரிகிறார். இவர் வலக்கையில் தண்டம் ஏந்தி, இடக்கையை இடுப்பில் வைத்தபடி தலையில் கிரீடத்துடன் காட்சியளிக்கிறார். இந்த பாலமுருகனுக்கு தினமும் இராஜ அலங்காரம் செய்யப்படுகிறது. இங்கே வள்ளி, தெய்வானை முருகனுடன் இல்லை. ஆனால் முருகன் சன்னதிக்கு இருபுறமும் இரு தீர்த்தங்கள் உள்ளன. இதை வள்ளி தெய்வானை தீர்த்தம் என்று சொல்கிறார்கள். அதிலும் வள்ளி தீர்த்தம் கிணறு வடிவத்தில் உள்ளது.மலையின் நடுவே உள்ள கிணறு என்பதால் இந்த இடம் 'மலைக்கேணி' என்று பெயர் பெற்றது என்று சொல்கிறார்கள். இந்த தீர்த்தங்களின் வடிவில் தேவிகள் வள்ளியும் தெய்வானையும் இங்கே பக்தர்களுக்கு அருள்புரிவதாக ஐதீகம். திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் ஏற்பட பக்தர்கள், இங்கேயுள்ள வள்ளி தெய்வானை தீர்த்தங்களின் நீரை பக்தியோடு பருகுகிறார்கள்.சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, ஐப்பசி கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தை கிருத்திகை, தைப்பூசம் போன்ற நாட்களில் விழாக்கள் கோலாகலமாக நடைபெறும். இங்கே வந்து தினமும் இராஜ அலங்காரத்துடன் காட்சியருளும் இந்த பாலமுருகனை வழிபட்டால் பொறுப்பான தலைமை பதவிகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
ஒடிசாவின் கோனார்க்கில் இருந்து 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அவரது சிலை, புது தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது. அவரது 12 பெயர்களும் அவற்றின் அர்த்தங்களும் இங்கே. 1/ மித்ரயா - அனைவரின் நண்பர்சூரியக் கடவுள் அனைத்து உயிரினங்களுக்கும் பாசத்தையும் உதவியையும் குறிக்கிறது. 2/ ராவயா - அனைவராலும் போற்றப்படுகிறார்அவரது கருணை மற்றும் ஒளிக்காக அனைவரும் அவரை மதிக்கிறார்கள். 3/ சூரியயா - அனைவருக்கும் வழிகாட்டிசூரியன் பகலின் அடையாளமாகவும் வாழ்க்கையின் வழிகாட்டியாகவும் இருக்கிறார். 4/ பனவே - அழகைக் கொடுப்பவர்அவரது கதிர்கள் இயற்கைக்கும் வாழ்க்கைக்கும் அழகைக் கொண்டுவருகின்றன. 5/ ககாயா - புலன்களைக் கட்டுப்படுத்துபவர்சூரியன் நமது புலன்களை எழுப்பி சமநிலைப்படுத்துகிறார். 6/ புஷ்னே - அனைத்தையும் வளர்ப்பவர்அவரது ஆற்றல் உலகம் முழுவதையும் வளர்க்கிறது. 7/ ஹிரண்யகர்பயா - படைப்பாளர்சூரியன் பிரபஞ்சத்தின் படைப்புக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. 8/ மாரிச்சாய - நோய்களை அழிப்பவர்அவரது கதிர்கள் நோய்களைக் குணப்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளன. 9/ ஆதித்யாய - ஊக்கமளிப்பவர்அவை நமக்கு புதிய ஆற்றலையும் உத்வேகத்தையும் வழங்குகின்றன 10 சாவித்ரே - தூய்மைப்படுத்துபவர்சூரியனின் கதிர்கள் மனதையும் உடலையும் தூய்மைப்படுத்துகின்றன 11/ அர்காய - ஒளியூட்டுபவர்அவரது பிரகாசம் உலகை ஒளிரச் செய்கிறது 12/ பாஸ்கர்யா - ஒளியூட்டுபவர்சூரியன் இருளை அகற்றி அறிவையும் ஒளியையும் பரப்புகிறார் ஓம் சூரியாய நமஹ .
படைப்புக் கடவுளான பிரம்மாவின் கோயில் ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் நகரில் உள்ளது. இங்கு சாவித்ரி, காயத்ரியுடன் பிரம்மா அருள்புரிகிறார்.ஒருமுறை பிரம்மா உலக நலன் கருதி யாகம் நடத்த விரும்பினார். அதற்காகத் தன் வாகனமான அன்னப் பறவையிடம் தாமரை மலரைக் கொடுத்து வழியில் அது எங்கு கீழே விழுகிறதோ அங்கு நடத்த முடிவு செய்தார். அந்த இடமே புஷ்கர் எனப் பெயர் பெற்றது. இதற்கு 'நீலத்தாமரை' என்பது பொருள்.யாகத்தை தொடங்கும் முன் பிரம்மாவின் மனைவி சாவித்ரிக்காக காத்திருந்தார். அவள் வர தாமதமானதால் யாகத்தை தொடங்க முடியாமல் போனது. பின்னர் இந்திரனிடம் ஆலோசித்து காயத்ரி தேவியைத் திருமணம் செய்து யாகத்தில் அமர்ந்தார். தாமதமாக வந்த சாவித்திரி, தன் கணவருடன் வேறொரு பெண் அமர்ந்திருப்பதைக் கண்டு, 'இனி பிரம்மாவுக்கு கோயில் இல்லாமல் போகட்டும்' என சாபமிட்டு, அருகிலுள்ள குன்றான அருணகிரி மீதேறி அமர்ந்தாள்.கோயிலின் முகப்பில் 'ஸ்ரீஜகத்பிதா பிரம்மா மந்திர்' என எழுதப்பட்டுள்ளது. இதற்கு 'உலகத்தின் தந்தை பிரம்மாவின் கோயில்' என பொருள். கருவறையின் மீது 70 அடி உயர விமானத்தில் பிரம்மாவின் வாகனமான அன்னப்பறவை காட்சியளிக்கிறது. பிரகாரத்தின் ஒரு பகுதியில் காணிக்கையாக வந்த வெள்ளி நாணயங்கள் குவிக்கப்பட்டுள்ளன. கருவறையை நோக்கி வெள்ளி ஆமை உள்ளது. தீர்த்தத்தின் பெயர் புஷ்கர்.நான்கு முகங்கள் கொண்ட பிரம்மாவின்சலவைக்கல் சிலையை ஆதிசங்கரர் நிறுவினார். அவரது கைகளில் புத்தகம், அருகம்புல், கமண்டலம், ஜபமாலை உள்ளன. இதை 'விஸ்வகர்மா கோலம்' என்கின்றனர். பிரம்மாவின் இடது புறம் காயத்ரி, வலது புறம் சாவித்திரி உள்ளனர்.பராசர கோத்திரத்தைச் சேர்ந்த பிரம்மச்சாரிகள் அர்ச்சகர்களாக உள்ளனர். சந்நியாசி, பிரம்மச்சாரிகள் மட்டுமே கருவறைக்குள் நுழையலாம். எதிரெதிர் திசைகளில் உள்ள குன்றுகளில் கோயில்கள் உள்ளன. உயரமான குன்றின் மீது சாவித்திரி, சிறிய குன்றின் மீது காயத்ரி கோயில்கள் உள்ளன. கார்த்திகை மாத பவுர்ணமியன்று ஒட்டகத் திருவிழா நடக்கிறது.
ராணி சதி கோவிலானது நாராயணி தேவி கோவில், தாதி மா கோவில் என்றும் அழைக்கப்படுகிறது . தாதி என்றால் பாட்டி என்று பொருள். இது இந்தியாவின் ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் தேவி சதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவிலாகும். இது 13 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் வாழ்ந்த ராஜஸ்தானி பெண்மணியான ராணி சதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட மிகப்பெரிய கோவிலாகும், இவர் தனது கணவர் இறந்த பிறகு தன்னையும் எரித்து தீக்குளித்தார். அதற்காக தான் அவருக்கு சதி தேவி என்ற பெயர் வந்தது. இந்தியாவில் சதி வழக்கத்தை முற்றிலும் தடை செய்த போதிலும், ராஜஸ்தானிலும் பிற இடங்களிலும் உள்ள அவருடைய பல கோயில்கள் அவருடைய வீரமான செயல்களை நினைவு கூறும் வகையில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.கம்பீரமான வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலின் படைப்பானது கண்களுக்கு விருந்தாகவும் அனைவரையும் கவரும் வகையிலும் இருக்கிறது.இந்த கோவில் பக்தர்களின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்களை இந்த கோவில் ஈர்க்கிறது, அவர்கள் ராணி சதி தாதியின் ஆசீர்வாதங்களைப் பெறவும் அவருக்கு மரியாதையை செலுத்தவும் வருகிறார்கள்.ராணி சதி தாதி கோவில் பாரம்பரிய ராஜஸ்தானி வடிவமைப்பின் தலைசிறந்த படைப்பாகும், இதில் சிக்கலான ஓவியங்கள், அழகாக செதுக்கப்பட்ட தூண்கள் மற்றும் பிரமாண்டமான வளைவுகள் உள்ளன. கோயில் வளாகம் ஒரு பெரிய பகுதியை உள்ளடக்கியது, மைய சன்னதி ராணி சதி தாதிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு குறிப்பிடத்தக்க சிலை அல்லாத வடிவத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறார் - ஒரு திரிசூலம்... இது துர்கா தேவியுடன் அவரது தொடர்பைக் குறிக்கிறது.பிரதான சன்னதியைத் தவிர, இந்தக் கோவிலில் மற்ற தெய்வங்களுக்கும் பல சிறிய கோவில்கள் உள்ளன. அவை அந்த இடத்தின் ஆன்மீக ஒளியை மேம்படுத்துகின்றன. கோவில் வளாகமானது பசுமையான தோட்டங்களாலும், பளிங்குத் தரைகளாலும் மற்றும் ராணி சதி தாதியின் கதைகளையும் அவரது தெய்வீகப் பயணத்தையும் விளக்கும் அற்புதமான கலைப்படைப்புகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.இந்தக் கோவிலின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, அதன் தனித்துவமான சிலை அல்லாத வழிபாடாகும். திரிசூலம் தெய்வத்தின் சக்தியை குறிக்கிறது, ராணி சதி தாதியின் உடல் வடிவத்தை விட ஆன்மீக ஆற்றலையும் சக்தியையும் இந்த திரிசூலமானது வலியுறுத்துகிறது.ராணி சதி கதை மகாபாரதத்துடன் தொடர்புடையதாக புராணங்கள் கூறுகின்றன. மகாபாரதப் போரில் அபிமன்யு இறந்தபோது, அவர் மனைவி உத்திரா தனது உடலையும் அபிமன்யுவின் இறுதிச் சடங்கில் எரித்து கொண்டு சதி ஆக விரும்பினார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்கள் அந்த நேரத்தில் அவளுக்கு காட்சி கொடுத்து, நீ இப்போது கர்ப்பமாக இருக்கிறாய், ஆகவே இப்போது சதி செய்வது சரியில்லை என்றும் மேலும், உன்னுடைய சதி ஆக வேண்டும் என்ற விருப்பம் அடுத்த பிறவியில் கண்டிப்பாக நிறைவேறும் என்ற வரத்தையும் அவளுக்கு வழங்கினார்.கிருஷ்ணரின் அருள் வாக்குப் படி, அவள் அடுத்த பிறவியில் ராஜஸ்தானில் உள்ள டோக்வா கிராமத்தில் குர்சமாலின் மகளாகப் பிறந்தாள். அவளுக்கு நாராயணி என்று பெயரிடப்பட்டது.அதேபோல், அபிமன்யு ஹிசாரில் ஜலிராமின் மகனாகப் பிறந்து தந்தன் என்று பெயரிடப்பட்டான். தந்தனும் நாராயணியும் திருமணம் செய்துகொண்டு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.அபிமன்யுவிடம் ஒரு அழகான குதிரை இருந்தது. அதை ஹிசார் மன்னரின் மகன் நீண்ட காலமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.மன்னரின் மகன் அந்த குதிரையை தனக்கு தர வேண்டும் என்று கேட்ட போது, தந்தன் தன் விலைமதிப்பற்ற குதிரையை ராஜாவின் மகனிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டான்.பின்னர் ராஜாவின் மகன் குதிரையை வலுக்கட்டாயமாக வாங்க முடிவு செய்து, தந்தனை சவால் விடுத்து போருக்கு அழைத்தான். தந்தன் தைரியமாக போரிட்டு, ராஜாவின் மகனைக் கொன்று விட்டான். இதனால் கோபமடைந்த ராஜா, போரில் நாராயணியின் முன்னால் தந்தனைக் கொன்று விட்டார். பெண் துணிச்சலுக்கும் சக்திக்கும் அடையாளமாக நாராயணி ராஜாவுடன் சண்டையிட்டு ராஜாவையே கொன்று விடுகிறாள். பின்னர் அவள் ராணாஜிக்கு (குதிரையின் பராமரிப்பாளர்) உடனடியாக தீக்குளிக்க ஏற்பாடு செய்யுமாறு கட்டளையிட்டாள். அவளது கணவரின் தகனத்துடன் அவளையும் சேர்த்து எரிக்குமாறும் ஆணையிட்டாள்.தனது கணவருடன் சதி ஆக வேண்டும் என்ற தனது விருப்பத்தை நிறைவேற்றுவதில் ராணாஜி முக்கிய பங்கு வகித்த காரணத்தினால், வரலாற்றில் தன் பெயரோடு உன் பெயரையும் சேர்த்து வழிபடுவார்கள் என்று அவனுக்கு ஆசி வழங்கினாள். அன்றிலிருந்து நாராயணி ராணி சதி என்று அழைக்கப்படுகிறார்.விசுவாசம், தைரியம் மற்றும் சுய தியாகத்தின் உருவகமாகக் கருதப்படும் ராணி சதி தாதியின் கதை, பெண்களை ஆழமாகப் பாதிக்கிறது. மேலும் அவரது கோயில் அவர்களுக்கு ஆன்மீக அடைக்கலமாக மாறியுள்ளது.பெண்கள் தங்கள் கணவர்களின் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுள், குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும் மற்றும் தங்களுடைய குடும்ப ஒற்றுமைக்காகவும் ராணி சதி தேவியை பிரார்த்தனை செய்கிறார்கள்
திருமலை உருவாக காரணம், அதன் பெருமைகள், அங்கு நடத்தப்படும் உற்சவங்கள் என ஒவ்வொன்றிற்கும் திருப்பதி ஏழுமலையானை பற்றி விதவிதமான கதைகள் சொல்லப்படுகின்றன. அந்த வகையில் குபேரனிடம் பணக்கார கடவுள் ஏழுமலையான் வாங்கிய கடன் எப்போது அடையும் ?பவித்ரோற்சவம்திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் வருடம் தோறும் ஏழுமலையானுக்கு நடைபெறும் பூஜைகள், மந்திரங்கள் , உபசாரங்கள் ஆகியவற்றில் ஏதாவது தவறு நேர்ந்தால் அதனால் ஏற்படும் தோஷத்தை அல்லது பாவங்களை நீக்குவதற்காக சடங்குகள் செய்யப்படும் பவித்ரோற்சவம் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வெகு விமரிசையாக நடைபெறும்.சீனிவாசன் அவதாரம்பூலோகத்தில் சீனிவாசராக அவதரித்த வெங்கடேச பெருமாள் ஆகாச ராஜனுக்கு மகளாக அவதரித்த மகாலட்சுமியின் அவதாரமான பத்மாவதி தாயாரை மணப்பதற்காக பெரிய தொகையை வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என சீனிவாசனிடம் கேட்டார் ஆகாச ராஜன்.ஏழுமலையானுக்கு குபேரன் விதித்த நிபந்தனைபத்மாவதியை மணம் முடிக்க குபேரனின் உதவியை நாடிய வெங்கடேச பெருமாளுக்கு குபேரன் ஒரு கோடியே 14 லட்சம் தங்க காசுகளை ஒரு நிபந்தனையுடன் கடனாகக் கொடுத்தார். கலியுகம் முடியும் வரை, கடனாக வாங்கிய தொகையை வட்டியுடன் சேர்த்து திருப்பித் தரும் வரை, பூலோகத்திலேயே இருக்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.ஏழுமலையானின் கடன் உணர்த்தும் உண்மைகள்குபேரனிடம் ஏழுமலையான் வாங்கிய கடன் என்பது மூன்று விஷயங்களை உணர்த்துகிறது. ஒன்று கடவுளே மனித உருவில் வந்தாலும் கடன் உள்ளிட்ட கர்ம வினைகளுக்கு உட்பட்டுத் தான் ஆக வேண்டும். இரண்டாமாவது, தன் மீது அன்பு வைப்பவர்களுக்காக இறைவன் எதையும் செய்வார் என்பது. மூன்றாவது, திருமலைக்கு வரும். பக்தர்களை மட்டுமல்ல, கலியுகம் முடியும் வரை தொலைவில் இருந்தும் தன்னை நினைக்கும் பக்தர்களை காக்க பெருமாள் பூமியில் தான் இருப்பார்.ஏழுமலையான் கடன் எப்போது அடையும்?குபேரனிடம் வாங்கிய கடனுக்கு பெருமாள் இன்று வரை வட்டி மட்டும்தான் கட்டிக் கொண்டிருக்கிறார். தான் பட்ட கடனை பக்தர்கள் காணிக்கையாக கலியுகத்தில் செலுத்தி ,அடைப்பார்கள் என்று பெருமாள் சொன்னதாக சில கதைகளும் ,குபேரனிடம் வாங்கிய கடனை பெருமாள் எப்போதோ அடைத்து விட்டார் என்றும் கதைகள் சொல்லப்படுகின்றன. தூணிலும் துரும்பிலும் இருக்கும் பரந்தாமனுக்கு குபேரன் விதித்த நிபந்தனைகளின் படி, ஏழுமலையானின் கடன் கலியுகம் முடியும் நேரத்தில் தான் அடையும்.அதுவரை ஏழுமலையானாக மக்களை காக்க பூமியிலேயே இருப்பார் பெருமாள். கலியுகம் முடியும் நேரத்தில், தனது பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்தையும் நிகழ்த்திய பிறகு தான், மீண்டும் வைகுண்டத்திற்கு பெருமாள் திரும்புவார் எனவும் சில நம்பிக்கைகளின் அடிப்படையில் சொல்லப்படுகிறது.