2023-24 ஆம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசியைப் பிரபல உணவு வழிகாட்டி நிறுவனமான டேஸ்ட் அட்லஸ் அறிவித்துள்ளது.சமீபத்தில் டேஸ்ட் அட்லஸ் வெளியிட்ட சிறந்த உணவுகள் கொண்ட 100 நாடுகளில், இந்தியாவுக்கு 11ஆவது இடம் அளித்திருந்தது.நீளமான, தனித்துவமான சுவை, வாசனை கொண்ட பாஸ்மதி அரிசி. இந்தியத் துணைக்கண்டத்தில் அதிகளவில் உற்பத்தியாகிறது.இந்தியாவில் மட்டும் சுமார் 34 பாஸ்மதி அரிசி ரகங்கள் பயிரிடப்படுகிறது.பாஸ்மதிக்கு அடுத்தபடியாக இத்தாலியைச் சேர்ந்த அர்போரியோ மற்றும் போர்ச்சுக்கலின் கரோலினோ ரைஸ் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1.வேளாண்மைத் திட்டங்கள் குறித்த தகவல்கள் அறிய - www.tnagrisnet.gov.in2.தொழில்நுட்பங்கள் தொடர்பான தகவல்கள் அறிய - www.tnau.ac.in3.தோட்டக்கலை பயிர்கள், திட்டங்கள் குறித்த தகவல்கள் அறிய - www.tnhorticulture.tn.gov.in4. விதைகள் தொடர்பான தகவல்கள் அறிய - www.seedtamilnadu.com5. வேளாண் எந்திரங்கள் தொடர்பான தகவல்கள் அறிய - www.aed.tn.gov.in6 வேளாண்மையில் புதிய தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ள- www.13fpedia.com7 அங்ககச் சான்று தொடர்பான தகவல்கள் அறிய - www.tnocd.net.
ரோஜா வகைகளில் பன்னீர் ரோஜா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனுடைய மணமும், குணமும் விசேஷமான தன்மை உள்ளது. பன்னீர் ரோஜாவை கொண்டு பல்வேறு வாசனை திவிரயங்கள் தயார் செய்யப்படுகின்றன. பன்னீர் பல மருத்துவ விஷயங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பன்னீர் ரோஜா பார்ப்பதற்கு பிங்க் நிறத்தில் நம்முடைய கண்களுக்கு குளிர்ச்சிபடுத்துவதாக அமைந்திருக்கிறது.நாம் நர்சரிகளில் வாங்கும் பன்னீர் ரோஜா வாங்கிய புதிதில் பெரிய பெரிய மொட்டுக்களும், நிறைய பூக்களும் பூத்திருக்கும். ஆனால் வீட்டிற்கு வாங்கி வந்தவுடன் பார்த்தால் புதிதாக மொட்டுக்களும் நிறைய வைப்பதில்லை. நர்சரிகளில் செயற்கையாக கொடுக்கப்படும் உரங்களினால் செடிகளில் கொத்துக் கொத்தாக மொட்டுக்கள் இருக்கின்றன. அதை நாம் வீட்டுக்கு எடுத்து வந்து வளர்க்கும் பொழுது அந்த அளவிற்கு நிறைய மொட்டுக்கள் வைப்பதில்லை. இதற்கு இரண்டு வகையான டிப்ஸ்கள் உள்ளன. அதை சரியாக செய்து வந்தாலே ஒவ்வொரு கிளையிலும் அதிகம் மொட்டுக்கள் வைக்கத் துவங்கி விடும். செடி முழுவதும் கொத்துக்கொத்தாக பூக்கள் பூக்கும்பன்னீர் ரோஜா மட்டுமல்ல எந்த வகையான ரோஜா செடிகளுக்கும் இந்த பராமரிப்பை கட்டாயம் செய்ய வேண்டும். ஒருமுறை மொட்டுக்கள் வைத்த கிளையில் திரும்பவும் மொட்டுகள் வரவில்லை என்றால் அந்த கிளையை வெட்டி விட வேண்டும். அந்தக் கிளையின் அடிபாகத்தில் இலைகள் துளிர்க்காது. இதை வைத்தே அந்த கிளையை தேவையில்லாத கிளை என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.அந்தக் கிளையை மட்டும் முக்கால் பாகத்தில் வெட்டிவிட்டு கால் பாகத்தை அப்படியே விட்டு விடுங்கள். அதிலிருந்து புதிய கிளை பச்சையாக மீண்டும் முளைக்கத் தொடங்கிவிடும். புதியதாக வரும் கிளையில் நிறைய மொட்டுக்கள் பூக்கும். வாரம் ஒரு முறை இதற்கு ஊட்டச் சத்தான உரத்தை நாம் கொடுக்க வேண்டியது அவசியமான ஒன்று. பன்னீர் ரோஜா செடிக்கு நாம் நர்சரிகளில் காசு கொடுத்து உரத்தை வாங்கி போடுவதை விட வீட்டிலேயே வேண்டாம் என்று தூக்கி எறியும் சில பொருட்களை வைத்து உரம் கொடுத்தால் நன்றாக செழித்து வளரும்.அன்றாடம் சமையல் செய்யும் பொழுது கிடைக்கும் காய்கறிகளுடைய தோல் மற்றும் பழங்களின் தோல் இவைகளில் இருக்கும் அதிக சத்துக்கள் பன்னீர் ரோஜா செடி சிறப்பாக வளர உதவியாக இருக்கும். வெங்காய தோல், பூண்டு தோல், பழங்களின் தோல்கள் இவற்றை தனித்தனியாக சேகரித்துவாரம் ஒருமுறை உங்களுடைய பன்னீர் ரோஜா செடி வைத்திருக்கும் தொட்டியில் வேர் பகுதி அடி படாதவாறு ஓரங்களில் பள்ளம் தோண்டி சேகரித்த தோல்களைப் போட்டு மண்ணை மூடி வைத்து விடவும். மண்ணைத் தோண்டும் போது உள்ளே வேர்ப்பகுதி அடிபட்டால் செடி காய்ந்து போய் விடும். ஓரிரு நாட்களில் நீங்கள் வைத்த தோல் கழிவுகள் உரமாகி விடும். இதனை வாரம் ஒரு முறை செய்ய செடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து விடும். இந்த இரண்டு வேலைகளையும் சரியாக செய்து விட்டால் போதும். புதியதாக முளைக்கும் ஒரே கிளையில் 10 மொட்டுக்கள் கூட கொத்து கொத்தாக விரைவிலேயே விட்டுவிடும். சிறிய செடியாக இருந்தாலும் நிறைய பூக்கள் கொடுக்கும்.
வீடுகளில் 2 செண்பகமரங்களைவளர்த்தால்சொர்க்கத்தை காணலாம்எனபுராணகதைகள்கூறுகின்றன.உண்மையில், கண்களைகவரும் மஞ்சள் நிறமும், மனதை மயக்கும் ஒரு வித மணமும் கொண்ட செண் பக பூக்களை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. தமிழ்நாட்டில் மேற்குத்தொடச்சி மலைக்காடுகளில் இயற்கையாக வளர்ந்து கிடக்கும் ஒரு அழகிய குறுவகை தாவரம் ஆகும்.தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பா லான சிவ தலங்களில் செண்பக மரம் தலவிருட்சமாக காணப்படுகிறது. பொதுவாக, கோவில்களில் தல விருட்சமாக இருக்கும் மரங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், மருத்துவ குணங்கள் நிரம்பிய மரங்களாகவும் இருப்பதற்கு காரணம், முன்னோர்கள் அவற்றின் அபூர்வமான மருத்துவ குணங்களை அறிந்து அவற்றை காக்க வேண்டும். என்று இறைவனுக்கு அருகில் அவற்றை வைத்து பராமரித்தது தான்.செண்பக மரம் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் ஆற்றலை பெற் றுள்ளது. இதன் இலைகள் நீண்டும், இலைகளின் மேற்புறம் பசுமையாக, ரோமங்கள் அடர்ந்து காணப்படு கிறது. இந்த இலைகள் காற்றில் கலந்திருக்கும் தூசி துகள்களை வடிகட்டி தூய காற்றை தருகிறது.செண்பக மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் நிறைந்ததாக அறியப்படுகிறது. இதன் இலைகளை நிழலில் உலர்த்தி தேநீர் ஆக குடித்து வந்தால் வயிற்று கோளாறுகள் சரியாகும், பசியின் மையை போக்கி பசியைத்தூண்டும். இன்றைய காலத்தில் பெருமளவு காணப்படும் அல்சர் என்னும் வயிற்றுப் புண்களை ஆற்றும். இதன் துவர்ப்பு தன்மை சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும்.
வாரம் ஒரு முறை சிறிதளவு எப்சம் உப்பை தண்ணீரில் கரைத்து செடிகளுக்கு ஊற்றலாம் செடிகள் நன்கு வளரத் தேவையான மெக்னீசியம் சல்பேட் இரண்டையும் இந்த உப்பு கொடுக்கும்.முட்டை ஓடுகளை காய வைத்து நன்கு தூளாக்கி போட வேண்டும் இதில் இருக்கும் கால்சியம் செடிகளுக்கு நல்ல உரமாகும்4 ஸ்பூன் வினிகர் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊற்றவேண்டும்அலங்கார மீன் தொட்டியில் தண்ணீர் மாற்றும்போது வெளியேற்றப்படும் கழிவு நீரை செடிகளுக்கு ஊற்றலாம் செடிகள் செழிப்பாக வளரும்சாம்பல் சிறந்த உரம் கிடைத்தால் போடலாம்ஓக் மர இலைகள் அல்லது வேப்பமர இலைகளை வாளியில் உள்ள நீரில் போட்டு வெயிலில் வைக்கவேண்டும் நீரின் நிறம் நன்றாக மாறியதும் குளிர வைத்து செடிகளுக்கு ஊற்றலாம்காய்கறி கழிவுகளை செடியின் அடியில் போட்டு வரலாம்.
1. கருப்புகவுணி அரிசி -புற்று நோய் வராது. இன்சுலின் சுரக்கும்.2. மாப்பிள்ளை சம்பா அரிசி- நரம்பு, உடல் வலுவாகும் ஆண்மை கூடும்.3. பூங்கார் அரிசி - சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்4. காட்டுயானம் அரிசி - நீரழிவு, மலச்சிக்கல், புற்று நோய் சரியாகும்5.கருத்தார் அரிசி - மூலம், மலச்சிக்கல் சரியாகும்6. காலா நமக் அரிசி -மூளை நரம்பு,இரத்தம் சீறுநீரகம், சரியாகும்7. மூங்கில் அரிசி - மூட்டுவலி முழங்கால் வலி சரியாகும்8. அறுபதாம் குறுவை அரிசி - எலும்பு சரியாகும்9. இலுப்பை சம்பா அரிசி - பக்கவாதம், கால் வலி சரியாகும்10. தங்கச்சம்பா அரிசி -பல் இதயம் வலுவாகும்11. கருங்குருவை அரிசி - இழந்த சக்தியை மீட்கும். கொடிய நோய்கள் குணமாகும்12. கருடன் சம்பா அரிசி - இரத்தம், உடல்; மனம் சுத்தமாகும்13 கார் அரிசி - தோல் நோய் சரியாகும்14. குடை வாழை அரிசி - குடல் சுத்தமாகும்.15 கிச்சி சம்பா அரிசி - இரும்பு சத்து சுண்ணாம்பு சத்து அதிகம்.16. நீலம் சம்பா அரிசி - இரத்த சோகை நீங்கும்17. சீரக சம்பா அரிசி - அழகு தரும், எதிர்ப்பு சக்தி கூடும்18. தூயமல் அரிசி - உள் உறுப்புகள் வலுவாகும்19. குழியடிச்சான் அரிசி - தாய்ப்பால் ஊறும்20. சேலம் சன்னா அரிசி - தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்21. பிசினி அரசி - மாத விடாய் இடுப்பு வலி சரியாகும்22. சூரக்ககுறுவை அரிசி - பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்23. வாலான் சம்பா அரிசி - சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும் இடுப்பு வலுவாகும்24. வாடன்சம்பா அரிசி வரும் அமைதியான தூக்கம் வரும்.
நன்கு மட்கிய கால்நடை மற்றும் தாவரக்கழிவுகள் எரு எரு என அழைக் கப்படுகிறது. இதை தயாரிக்க 3 அடி ஆழம் மற்றும் 6 முதல் 8 அடி அகலம் கொண்ட குழி தோண்ட வேண்டும். 'வேண்டும். தாவரக்கழிவுகள், மாட்டுத்தொழுவத்தில் உள்ள கழிவுகள், தீவனக்கழிவுகள், காய்ந்த மர இலைகள் மற்றும் தண்டுகள் போன்றவற்றை அந்த குழியில் நிரப்ப வேண்டும். பின் சிறிதளவு தண்ணீர் தெளிக்க வேண்டும். மாட்டுச் | காள்ள வேண்டும். சாணத்துடன் நீர் கலந்துகொள்ள வேண் கலந்துகொள்ள வேண்டும். இதனுடன் கோமியம் வண்டும். இதனுடன் கலந்த மண்ணையும் குழியில் போட்டு மூடவேண்டும். ஒவ்வொரு 10 டன் அங்ககக்கழிவுகளுக்கு 5 முதல் 10 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை சேர்க்க வேண்டும். இந்த முறையை குழி நிரம்பும் வரை திரும்ப பின்பற்ற வேண்டும். மழைநீர் உட்புகாதவாறு குழியை கோமியம் கலந்த மண், தாவரக்கழிவுகள் கொண்டு மூடி, மண் குவியல் போன்று அமைக்க வேண்டும். 6 மாதங்களுக்குப்பின் இந்த குழியில் இருக்கும் மட்கு எருவை எடுத்து உரமாக வயலுக்கு பயன்படுத்தலாம்.
மக்கள் தொகை, வீடு, வாகனங்களின் எண்ணிக்கையால், சுற்றுப்புறச் சூழல் வெகுவாக பாதிக்கப்படுகிறது. சுத்தமான காற்றை சுவாசிக்க உதவும் மரங்கள் நிறைந்த மலை மாவட்டமான நீலகிரியில் கூட, சமீபகாலமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது. சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க பொதுநல அமைப்புகள் குரல் கொடுத்து வரும் நிலையில், வனத்துறையும் தனது பங்களிப்பாக, செண்பக மரங்களை நட்டு வளர்க்க யோசனை தெரிவித்துள்ளது.“மக்னோலயேசி’ என்ற தாவர இயல் குடும்பத்தில்“மைக்கேலியா சம்பகா’ என்ற அறிவியல் பெயரைக் கொண்ட சண்பகமரம், செண்பக மரம் என அழைக்கப்படுகிறது. இதன் சிறப்புகளை தென்னிந்திய தாவரவியல் வல்லுனர்கள் மேத்யூ, ஜான் பிரிட்டோ விரிவாக விளக்கியுள்ளனர்.செண்பக மரத்தின் இலைகள் நீண்டு வளர்ந்து, மேற்புறம் பசுமையாகவும், பின்புறம் உரோமங்கள் மண்டிக் கிடப்பதாலும், காற்றில் உள்ள தூசுகளை அகற்றும் தன்மையை கொண்டுள்ளது. மஞ்சள் நிறமாக உள்ள மலர்களின் வாசனை காற்றோடு கலந்து, சுற்றுப்புறத்தை மிக ரம்மியமாக வைத்திருக்க உதவுகிறது.செண்பக பூக்களில் இருந்து கிடைக்கும் கெட்டியான பசை, வேதியியல் பொருட்களால் கரைத்து எடுக்கப்பட்டு, பலவித வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. விதை, வேர், பட்டையில் பல வேதியியல் எண்ணெய், அல்கலாய்டுகள், ஒலியிக் சினாயிக் மற்றும் பால்மிடிக் உட்பட பொருட்கள் உள்ளன. மரங்கள் மிளிரும் தன்மையை கொண்டுள்ளன.மரங்கள் எடை குறைவாகவும், உறுதித் தன்மை அதிகமாகவும் உள்ளதால், கடந்த காலங்களில் விமானக் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது; வீட்டு உபயோகப் பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது. கட்டைகளைக் காய்ச்சி வடிப்பதன் மூலமாக ஒரு வகையான கற்பூரமும் தயாரிக்கப்படுகிறது. மேலும் இது கைவினைப்பொருட்கள் தயாரிப்பிலும் முக்கியப் பங்காற்றுகிறது. கடல் மட்டத்துக்கு மேல்1,000 அடி வரையுள்ள சோலைக் காடுகளில் இயற்கையாகவே இம்மரங்கள் வளரும்; எளிதாக இனப்பெருக்கம் செய்யவும் முடியும்.சாலையின் இருபுறம், வீட்டு முகப்பு, கோவில், குளக்கரை மற்றும் பொது இடங்களில் மரங்கள் வளர்க்கப்படுகின்றன; மலை மாவட்டமான நீலகிரியில், கூடுதலாக நடவு செய்தால், சுற்றுப்புறச் சூழல் ரம்மியமாக இருக்கும்.இதன் மற்றொரு வகையான“மைக்கோலியா நீலகிரிக்கா’ என்ற பெயரைக் கொண்ட வெள்ளை வண்ண மலர்களை கொண்ட காட்டு செண்பகம் மரங்கள், அழிவின் விளிம்பில் உள்ளதால் நடவு செய்ய வேண்டும்.
மக்களின் உணவில் அவசிய தேவை தக்காளி, வெங்காயம் என்று கூறுவார்கள். அதேபோல் மிளகாய் வத்தல், குடைமிளகாய் போன்றவையும் அதிகம் பயன்படுகின்றன. இது பல நிறங்களில் காணப்படுகிறது. குறிப்பாக சிவப்பு, மஞ்சள், பச்சை, ஆரஞ்சு நிறங்களில் காணப்படுகிறது.கே டீ பி எல் – 19, பயிடாகி கட்டி ஆகிய இரகங்கள் குடைமிளகாய் சாகுபடிக்கு ஏற்றவை.ஜூன் – ஜூலை மாதங்கள் குடைமிளகாய் சாகுபடி செய்ய சிறந்த பருவம் ஆகும்.நல்ல வடிகால் வசதியுடைய, உவர்ப்புத் தன்மை இல்லாத களிமண், குடைமிளகாய் சாகுபடிக்கு ஏற்றது. 6.5-7.0 வரை கார அமிலத் தன்மை கொண்ட மண்ணில் நன்கு வளரும்.ஒரு ஏக்கருக்கு 500 கிராம் விதைகள் வீதம் தேவைப்படும்.ஒரு கிலோ விதைக்கு10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் அல்லது4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.நாற்றங்கால் அமைக்க7 மீ நீளம்,1.2 மீ அகலம் மற்றும்15 செ.மீ உயரம் கொண்ட10,,12 படுக்கைகளை அமைக்க வேண்டும். விதைகளை 10 செ.மீ வரிசை இடைவெளியில் 0.5 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். 15-20 கிலோ நன்கு மட்கிய உரம் மற்றும் 500 கிராம் NPK உரத்தினை விதைத்த, 15-20 நாட்களில் ஒவ்வொரு படுக்கைக்கும் அளிக்க வேண்டும்.நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறைகள் நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவுக்கு முன் ஒரு ஏக்கருக்கு 15 டன் தொழுவுரம் அடி உரமாக இட்டு நன்கு உழவேண்டும். நடவு வயலில் 4 அடி அகலம் உடைய மேட்டுப் பாத்திகளை ஒரு அடி இடைவெளியில் அமைக்க வேண்டும். சொட்டு நீர் பாசனமாக இருந்தால் பக்கவாட்டுக் குழாய்கள் மேட்டுப்பாத்தியின் மத்தியில் இணையாகச் செல்லுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.நடுவதற்கு முன் நடவு வயலில் நீர் பாய்ச்ச வேண்டும். 35 நாட்கள் வயதான செடிகளை 0.5 சதவீத சூடோமோனாஸ் புளோரசன்ஸ் கரைசலில் 30 நிமிடங்கள் நனைத்த பிறகு இரு வரிசை நடவு முறையில் 90 x 60 x 60 செ.மீ என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.நடும் பொழுது நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். அதன்பின் மூன்றாம் நாள் உயிர்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் மண்ணின் தன்மைக்கேற்ப பாசனம் செய்ய வேண்டும்.ஏக்கருக்கு 20 கிலோ தழைச் சத்து மற்றும் 20 கிலோ சாம்பல் சத்தினை நட்ட மூன்று வாரங்களுக்கு பிறகும், 40 கிலோ தழைச்சத்து மற்றும் 40 கிலோ சாம்பல் சத்தினை நட்ட ஆறு வாரங்களுக்கு பிறகும் மேலுரமாக இட வேண்டும்.சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 0.5 சதவீதத்தை 15 நாட்கள் இடைவெளியில் இலைகளின் மீது தெளிக்க வேண்டும்.டிரையகாண்டனால் என்ற வளர்ச்சி ஊக்கியினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.25 மி.லி என்ற அளவில் நடவு செய்த 15 மற்றும் 30ம் நாட்களில் தெளிக்க வேண்டும்.நடவு செய்த 30 மற்றும் 60 நாட்களில் களையெடுத்து பராமரிக்க வேண்டும்.ஆந்தராக்னோஸ் நோயை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் மேன்கோசெப் கலந்து தெளிக்க வேண்டும்.ஒரு லிட்டர் தண்ணீரில்2.5 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடை கலந்து தெளிப்பதன் மூலம் காய் அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம்.0.3 சதவித, நனையும் கந்தகத்தை தெளிப்பதன் மூலம் சாம்பல் நோயை கட்டுப்படுத்தலாம்.நன்கு வளர்ச்சி அடைந்த காய்களை நடவு செய்த70ம் நாள் முதல் அறுவடை செய்யலாம். காய்களின் அளவைப் பொறுத்து தரம் பிரித்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும். சிறிய வளைந்த மற்றும் உருமாற்றமுள்ள காய்களைத் தனியாக பிரித்தெடுக்க வேண்டும்.குடைமிளகாய் சாகுபடியில் ஏக்கரில் 25 - 35 டன் காய்கள் வரை மகசூல் கிடைக்கும்.
ரோஸ் ஆப் ஜெரிகோ, என்று அழைக்கப்படும் இந்த தாவரம் வறண்ட சூழலுக்கும் தாக்குப்பிடித்து வளரும். அதனால் நீர் இன்றி கூட நீண்ட காலம் வாழ முடியும்.கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில் இலைகள் காய்ந்து பந்து போன்ற வடிவத்தில் சுருண்டு விடும் . பார்ப்பதற்கு இறந்துவிட்டதாகவே தோன்றும். ஆனால் அதற்கு சிறிதளவு தண்ணீர் ஊற்றினாலோ அல்லது மழை மூலம் தண்ணீர் கிடைத்துவிட்டாலோ சில மணி நேரத்துக்குள்ளேயே மீண்டும் துளிர்விட தொடங்கிவிடும். அதனால் இதனை உயிர்த்தெழும் தாவரம் என்றும் அழைக்கிறார்கள். இது இயற்கை வழங்கிய அதிசய தாவரமாக பார்க்கப்படுகிறது.