மாவட்டத்தில்மேற்குதொடர்ச்சிமலையைஒட்டியஇராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதியில் மா மரங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. 2023 நிதி ஆண்டில் மாமரங்கள் பூக்கும் காலத்தில் சாரல் மழை பெய்ததால் பூக்கள் அழுகி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.இதனையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலெக்டரிடம் இழப்பீடு குறித்து கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மா மரங்களை நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட 144.45 ஹெக்டேர் மா பயிர்களுக்கு இழப்பு வழங்குவதற்காக ரூ.26 லட்சத்து 190 ஒதுக்கீடு செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட 185 விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்டம் முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார மருத்துவர்களுக்கும் “திரை தவிர்” என்ற ஒரு நாள் பயிலரங்கம் நிகழ்ச்சியானது 14.11.2024 அன்று நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியில், மேனாள் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரு.செ.சைலேந்திரபாபு,இ.கா.ப., (ஓய்வு) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.மேலும் இந்நிகழ்ச்சியானது, காலை 09.00 மணி முதல் 12.45 மணி வரை மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும், பிற்பகல் 02.00 மணி முதல் 05.00 மணி வரை மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியில், மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் நவம்பர் - 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 22.11.2024 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.மேற்படி, கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
ராஜபாளையம் தாலுகா மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சனைகள், இதர குறைகளை தீர்க்கும் வகையில், விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லதா, ராஜபாளையம் பொன்னகரம் செயற்பொறியாளர் அலுவலகத் தில் நவ.12 செவ்வாய்க் கிழமை காலை 11:00 மணி முதல் 1:00 மணி வரை குறைகளை கேட்ட றிய இருப்பதால், மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என ராஜபாளையம் மின் கோட்ட செயற்பொறியாளர் முத்துராஜ் தெரிவித்துள்ளார்.
தீபாவளிப் பண்டிகையை ஒட்டி ,டாஸ்மார்க் கடைகளில் 430 கோடி ரூபாய்க்கு விற்றதாகக் கூறி தமிழகமே ஏதோ சாதனை விற்பனை ஆனது போல செய்திகளை வெளியிடுவது வெட்கமும், வேதனையும் தருகிறது.தமிழ்நாட்டில் முதியோர் முதல், பள்ளி, மாணவ மாணவிகள் வரை மது குடிப்பதை பெருமையாக எண்ணிக் கொண்டு குடிக்கின்றனர். பெற்றோர்களே உங்கள் குழந்தைகள் என்ன செய்கின்றனர் என்பதை கவனிக்க வேண்டும். இப்படியே சென்றால் தமிழகம் போதைக்கு அடிமையாகி சீரழிவது நிச்சயம்.மது விலக்கை கொண்டு வந்தால் தான், நம் தமிழகம் முன்னேறும் என்பதில் சந்தேகமில்லை. மது விலக்கை கொண்டுவருவதாக வாக்களித்தால் ஒட்டு கிடைக்காது என்பதால் ஆட்சிக்காரர்கள் ஐரூராக மது விற்பனை செய்கின்றனர். இந்தக் கடைகளை மூடிவிட்டால், கள்ளச்சாராயம் விற்பனைக்கு வந்து விடும் என சாக்கு சொல்கின்றனர் அமைச்சர்கள். கள்ளச்சாராயத்தை அரசு, மற்றும் காவல் துறையினால் தடுக்க முடியாதா ?குஜராத் மற்றும் பீஹார் மாநிலங்களில் ஒட்டு குறைந்தாலும், பரவாயில்லை, மக்கள் நலனை கருத்தில் கொண்டு பூரண மது விலக்கை அங்கே உள்ள ஆட்சியாளர்கள் கொண்டு வந்து பின் தங்கிய தங்கள் மாநிலங்களை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு வருகின்றனர்.தமிழகத்தில் டாஸ்மார்க் விற்பனை அதிகரிப்பதால் தமிழ்நாடு குட்டிச்சுவராகும் என்பதில் ஐயமில்லை.
ஹிந்துக்களின் பண்டிகைகளில் மிக முக்கியமானது அவசியமானது,தீபாவளி என்றாலே பெரியவர்களுக்கு புது துணி போடப் போகிறோம் என்ற சந்தோஷம், குட்டீஸ்கள் வெடி வெடிப்பதில் சந்தோஷம். இந்த தீபாவளி, ஏழைகளின் எட்டாக்கனியான போதிலும், எந்த ஏழையும் தீபாவளியை புறக்கணிப்பதில்லை, அவர்களால் முடிந்த பட்ஜெட்டிற்கு துணிமணிகள், பட்டாசுகள், பலகார பண்டங்கள் வாங்கி மகிழ்ந்து கொண்டாடுகின்றனர். அதிகாலை எண்ணெய் வாசனையும், சாம்பிராணி, ஊதுபத்தி வாசனையும், இனிப்பு பலகாரங்களின் வாசனையும், புதுத்துணியின் வாசனையும், என, அனைத்தும், மகிழ்ச்சி தான்.பட்டாசுகளின் விலை தாறுமாறாக ஏறிவிட்டது. ஏழை எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகி விட்டது. மலைபோல் குவியும் குப்பையால் சுற்றுச்சூழல் கேடு, தூய்மைப் பணியாளர்களுக்கு பணிச்சுமை, தீ விபத்துகள், உயிரிழப்புகள், காயங்கள் ஏற்படும் என்றெல்லாம் எழுதியிருந்தார். உண்மைதான். பட்டாசிலிருந்து வெளிவரும் நச்சுத்தன்மை மிகுந்த புகை எத்தனை நோய்களை உருவாக்கும் என்ற விழிப்புணர்வை நம் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுவோம். என்ன தான் பசுமைப் பட்டாசு என்றாலும் அதிலிருந்து வரும் புகை சாதா பட்டாசை விட 50 சதவிகிதம் நச்சுப் புகையை வெளியேற்றும்,இதிலிருந்து வரும் நச்சுப்புகை ஆஸ்துமா, மூச்சிரைபப்பு, உள்ளவர்களுக்கு அதிகமாகி மூச்சுக்குழல், நுரையீரல் அரிப்பு எரிச்சல் போன்ற இன்பெக்ஸன் ஏற்படுகிறது. இதிலிருந்து வெளிவரும் சப்தம் முதியோர்கள், குழந்தைகளை பாதித்து உயர் ரத்த அழுத்தம், ஒற்றைத்தலைவலி உள்ளவர்களுக்கு இன்னும் பாதிக்கும் மிருகங்கள், பறவைகள் பதற்றத்தில் இருக்கும். சில சமயம் நாய், பூனை, பறவை அதற்கு காது கேட்கும் திறனும் போய்விடும். இப்படிப்பட்ட வெடியைப் போட்டு சந்தோஷப் பட என்ன இருக்கிறது.தீபம் ஏற்றி கொண்டாடலாமே ! வெடி வேண்டாமே !
மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் குறைதீர் முகாம் நவம்பர் 6-ம் தேதி காலை 10.00 மணிக்கு விண்ணப்பதாரர்களுக்காக நடக்க உள்ளது. இதில் 2023 டிசம்பர் 31 வரை பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து இதுவரை கிடைக்காதவர்கள் பங்கேற்கலாம். அவர்கள் முன்னதாக தங்கள் வேண்டுகோள் கடிதத்தை பைல் எண், அலைபேசி எண்ணுடன், விரைவு தபாலில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், பாரதி உலாவீதி, ரேஸ்கோர்ஸ் ரோடு, மதுரை 2 என்ற முகவரிக்கு நவம்பர் 1ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கடிதத்தின் முகப்பில் பாஸ்போர்ட் அதாலத் நவம்பர் 2024 என்று குறிப்பிடுவது அவசியம். அம்மனுவின் நகலை 'rpo.madurai@mea.gov.in என்ற இணைய முகவரிக்கு, பாஸ்போர்ட் அதாலத் என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். விவரங்களுக்கு 0452-2521204 ல் தொடர்பு கொள்ளலாம், என பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் தெரிவித்துள்ளார் .
ரயில்களில் டிக்கெட்டை முன்கூட்டியே முன்பதிவு செய்வதற்கான காலம், 120 நாட்களில் இருந்து 60 நாளாக குறைத்து ரயில்வே வாரியம் உத்தரவு. வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.வெளிநாட்டு பயணிகளுக்கு 365 நாட்கள் என்ற கால அளவில் மாற்றமில்லை.
விருதுநகர் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர்/அருப்புக்கோட்டை/சாத்தூர்/திருச்சுழியில் 2024-ம் ஆண்டிற்கான ஓராண்டு /ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேர பயிற்சியாளர்கள் நேரடிச்சேர்க்கை மூலம் 30.09.2024 முடிய சேர்ந்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது ஒரு சில தொழிற்பிரிவுகளில் 100மூ பயிற்சியாளர்கள் சேர்க்கை பூர்த்தியடையாத காரணத்தினால் மேலும் 30.10.2024 முடிய நேரடி சேர்க்கைக்கு காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கு இருபாலரும் (ஆண்/பெண்) 30.10.2024-க்குள் உரிய தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாக விண்ணப்பித்து பயன் பெறலாம். இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் பயின்ற அனைவரும் தகுதியானவர்கள். வயது வரம்பு ஆண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 முதல் அதிகபட்ச வயது 40 வரை மற்றும் மாற்றுத்திறனாளி / முன்னாள் இராணுவத்தினருக்கு விதிகளின்படி 5 ஆண்டு வயது வரம்பில் தளர்வு உண்டு. பெண்களுக்கு குறைந்தபட்சம் 14 முதல் அதிகபட்ச வயது உச்ச வரம்பு ஏதும் இல்லை. விண்ணப்பக்கட்டணமாக ரூ.50/-யை செலுத்தி விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள (இயந்திர வேலையாள், தீயணைப்பு தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை, உட்புற வடிவமைத்தல் மற்றும் அலங்கரித்தல் மற்றும் தொழிற்துறை) ஓராண்டு/ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேரலாம். மேலும், சேர்க்கை கட்டணம் ஓராண்டு தொழிற்பிரிவிற்கு ரூ.185/- ஈராண்டு தொழிற்பிரிவிற்கு ரூ.195/- ஆகும். அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ / மாணவிகளுக்கு தமிழக அரசால் பின்வருமாறு விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மிதிவண்டி / கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை /மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750/- (வருகைக்கு ஏற்ப) /சீருடை 2 செட் (தையல்கூலியுடன்) / மூடு காலணி 1 செட் /பாடப்புத்தகங்கள் / வரைபட கருவிகள் / பயிற்சியாளர் அடையாள அட்டை/ அரசு பள்ளியில் 6 முதல் 10 ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பெறும் பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 /- மற்றும் 2024-ம் ஆண்டு ஆகஸ்ட முதல் பயிற்சியில் சேரும் ஆண் பயிற்சியாளர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 ஃ- கூடுதலாக உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் (10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (2021-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் 9-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்) / பள்ளி மாற்றுச்சான்றிதழ் / சாதிச்சான்றிதழ் / ஆதார் அட்டை / பாஸ்போர்ட் அளவு புகைப்படம்) மற்றும் மின்னஞ்சல் முகவரி கைபேசி எண் விவரம்.மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அரசு தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண்கள் : விருதுநகர்: 04562-294382 / 252655, அருப்புக்கோட்டை: 04566-225800 சாத்தூர்: 04562-290953 / திருச்சுழி: 9578855154 / 7010040810 என்ற எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகரில் புதிய பேருந்து நிலையம் பொது மக்களின் நலன் கருதி 21.08.2024 அன்று முதல் முழு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு செயல்பட்டு வருகிறது.தற்போது பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, விருதுநகர் கர்மவீரர் காமராஜர் புதிய பேருந்து நிலையத்தினை இன்னும் சிறப்பாக பயன்பாட்டில் கொண்டுவரும் வகையில் சிவகாசி முதல் மதுரை மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மீனாம்பிகை பங்களா வழியாக மதுரை செல்வதற்கும், விருதுநகர் முதல் திருமங்கலம், மதுரை மார்க்கமாக செல்லும் நகரப் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் / மீனாம்பிகை பங்களா வழியாக மதுரை செல்வதற்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டு, இந்த நடைமுறையானது நாளை 16.10.2024, முதல் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.வழித்தடங்கள்:விருதுநகர் முதல் கள்ளிக்குடி, திருமங்கலம்,(நகர் பேருந்துகள்)விருதுநகர் புதிய பேருந்து நிலையம் - எம்ஜிஆர் சிலை - ஆத்துப்பாலம் - பழைய பேருந்து நிலையம் - கள்ளிக்குடி - வழியாக திருமங்கலம் செல்ல வேண்டும். மீண்டும் திருமங்கலத்திலிருந்து அதே வழித்தடத்தில் திரும்பவும் விருதுநகர் புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.விருதுநகர் முதல் கள்ளிக்குடி, திருமங்கலம், மதுரை மார்க்கம். ( புறநகர் பேருந்துகள்)விருதுநகர் புதிய பேருந்து நிலையம் - எம்ஜிஆர் சிலை - ஆத்துப்பாலம் - மீனாம்பிகை பங்களா - கள்ளிக்குடி - திருமங்கலம் - மதுரை செல்ல வேண்டும். மீண்டும் மதுரையிலிருந்து அதே வழித்தடத்தில் மதுரையிலிருந்து விருதுநகர் புதிய பேருந்து நிலையம் வர வேண்டும். சிவகாசி முதல் மதுரை மார்க்கம் (புறநகர் பேருந்துகள்)சிவகாசி - நந்தா ஹோட்டல் - புறவழிச்சாலை - எம்ஜிஆர் சாலை - புதிய பேருந்து நிலையம் - கருமாதி மடம் - ஆத்துப்பாலம் - மீனாம்பிகை பங்களா - கள்ளிக்குடி வழியாக மதுரை செல்ல வேண்டும். மீண்டும் மதுரையிலிருந்து அதே வழித்தடத்தில் சிவகாசி செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.