25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


இந்திய சட்டம் சொல்வது

May 07, 2024

வாடகை ஒப்பந்தம்

ஒரு வீடு அல்லது ஒரு சொத்தினை நீங்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்துகிறீர்கள் என்றால் , இந்தியாவைப் பொறுத்தவரை அந்த உரிமையாளரிடம் நீங்கள் சட்டப்படி வாடகை ஒப்பந்தம் மேற்கொள்வது அவசியமாகும். இந்த வாடகை ஒப்பந்தம் இருதரப்பிலும் உள்ள அனைத்து நிபந்தனைகளும் இடம்பெற்ற ஒரு சட்டப்பூர்வ ஆவணமாக கருதப்படுகிறது.வாடகை ஒப்பந்தங்கள் நான்கு வகையில் போடப்படுகின்றன. 1. வணிக நோக்கத்துக்காக மேற்கொள்ளப்படும் வாடகை ஒப்பந்தம் , 2. குடியிருப்புகள் 3.தனிப்பட்ட ஒரு அறை , 4. ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஓரிடத்தை பகிர்ந்து பயன்படுத்துவது. இந்த நான்கு வகைகளில் வாடகை ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால் பொதுவாக இந்த மாதிரியான வாடகை ஒப்பந்தங்களின் காலம் என்பது 11 மாதங்கள் மட்டுமே. இதற்கு என்ன காரணம் பார்க்கலாம். நமது அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 17 பதிவு சட்டம் 1918-இன் படி வாடகை ஒப்பந்தத்தின் காலம் என்பது ஓராண்டுக்கு கீழ் இருந்தால் அதனை பதிவு செய்ய தேவையில்லை. எனவே தான் பொதுவாக இது போன்ற வாடகை ஒப்பந்தங்கள் 11 மாதங்கள் மற்றும் அதற்கு குறைவான காலத்திற்கு மட்டுமே அலைய வேண்டிய தேவை இருக்காது.குறிப்பாக வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்கான பதிவு கட்டணம் நாம் செலவிட வேண்டிய தேவையில்லை. நீண்ட கால அடிப்படையில் நீங்கள் ஒப்பந்தம் போடும்போது அதற்கான பதிவு கட்டணம் அதிகமாக இருக்கும். இதுபோல 11 மாத காலத்திற்கு மட்டுமே ஒப்பந்தங்களை போடும்போது உரிமையாளர்களுக்கு அது சாதகமாக உள்ளது. குறிப்பாக வாடகை உயர்வு மற்றும் வாடகை காலத்தை முடிவுக்கு கொண்டு வருவது ஆகியவற்றுக்கான சுதந்திரம் உரிமையாளர்களுக்கு கிடைக்கிறது. மறுபுறம் வாடகைக்கு குடியிருப்பவர்கள் முத்திரை வரி அல்லது பதிவு செலவுகளை செய்ய வேண்டிய தேவை இருக்காது. ஆனால் நீண்ட கால அடிப்படையில் ஒரு இடத்தை வாடகைக்கு பயன்படுத்தப் போகிறீர்கள் எனில் ஒப்பந்தம் செய்து அதனை முறையாக பதிவு செய்வது இரு தரப்புக்குமே சட்ட ரீதியான பாதுகாப்பை தரக் கூடியது, நல்லது என்கின்றனர் வழக்கறிஞர்கள். 

Apr 20, 2024

தந்தையின் சொத்தில் மகளுக்கு சமபங்கு உள்ளது. சட்டம் சொல்வது என்ன?

தந்தையின் சொத்தில் சமபங்கு உள்ளது என 1956 ஆம் ஆண்டின் இந்து வாரிசு சட்டத்தின் கீழ் சட்டபூர்வ உரிமை உறுதி செய்யப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது. ஆனால் இன்னும் வாரிசுரிமை அடிப்படையில் ஆண் மற்றும் பெண்களுக்கான பாகுபாடுகள் சில குடும்பங்களில் நீடிக்கத் தான் செய்கிறது. சில பெற்றோர்கள் சொத்து என்று வரும்போது மகள்களை விட மகன்களை தான் அதிகம் ஆதரிக்கின்றனர். என்னதான், சட்டங்கள் சமபங்கு என்று சொன்னாலும், பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு திருமண செலவுகளை ஏற்றுக்கொள்ளும் பெற்றோர்கள் சொத்து என்று வரும் பட்சத்தில் மகன்களுக்கே அதிக கவனம் செலுத்துகின்றனர். இது போன்ற சில விஷயங்கள், இன்னும் பல குடும்பங்களில் வேரூன்றி உள்ளது எனலாம்.இதனால் இந்தியாவில் இருக்கும் பல பெண்கள் தங்களது தந்தையின் சொத்துக்களில் தங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று நம்பிக் கொண்டு இருக்கின்றனர். இதற்கான முக்கிய காரணம் தங்களது தந்தையின் சொத்துகளில் சமமான உரிமை உள்ளது என்பதை கூறும் சட்டம் பற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் மகள்களுக்கு என பிரத்தியேக சட்டங்கள் உள்ளன. ஆனால் அதை பற்றி தெரியாத சிலர் தங்களுக்கு சொத்தில் பங்கு இல்லை என இன்றளவும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். 1956 ஆம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டத்தில், 2005 ஆம் ஆண்டில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் தனது தந்தையின் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை உண்டு என சட்ட பூர்வ உரிமையை வழங்கியது. இந்த சட்டத்தின்படி மகன்களைப் போலவே மகள்களும் தங்களது தகப்பனின் சொத்துகளுக்கு உரிமை கோர முடியும் என திருத்தம் செய்யப்பட்டது.எப்போது மகள்களால் தந்தையின் மேல் நடவடிக்கை எடுக்க முடியாது?: இப்பொழுது தந்தை தனது சொந்த முயற்சியால் வீடு மற்றும் நிலங்களை வாங்கி வைத்திருக்கும் பட்சத்தில், அவர் தானாக முன்வந்து தனது மகளுக்கோ அல்லது மகனுக்கோ அதனை எழுதி வைக்க சட்டபூர்வமான சட்டங்கள் உண்டு. ஆனால் அதனை அவர் எழுதி வைக்க மறுத்து தனது மகனுக்கே எழுதி வைக்கும் பட்சத்தில், அந்த மகளால் அவரை எதிர்த்து நடவடிக்கை எடுக்க முடியாது. 2005 ஆம் ஆண்டிற்கும் முன் தனது தந்தையின் மூதாதையர்கள் சொத்தில் மகன்களைப் போலவே மகள்களுக்கும் சம உரிமை உண்டு என்ற சட்டம் இல்லை. அது திருமணமான பெண்கள் ஆனாலும் சரி திருமணம் ஆகாத பெண்கள் ஆனாலும் சரி. ஆனால் 2005 ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்ட இந்து வாரிசு சட்டத்தில் மகன்களைப் போலவே மகள்களுக்கும் சமமான உரிமை உண்டு என திருத்தம் செய்யப்பட்டது. இதனால் திருமணத்திற்கு பிறகும் தங்களது தந்தையின் சொத்துகளில் மகள்களால் உரிமைக் கோர முடியும்.

Apr 05, 2024

சொத்தில் பங்கு தர முடியாது என்று மாமாக்கள் மறுப்பு

 இரண்டு பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தாகி விட்டது. சொத்தில் பங்கு தர முடியாது என்று மாமாக்கள் மறுப்பு. தாத்தா இரண்டு சுயமாக சம்பாதித்த வீடுகளில்,3 மகன்கள் மற்றும்2 மகள்கள் என்று உயில் எழுதப்படாத சொத்தில் அனைத்து பிள்ளைகளுக்கும் சம பங்கு இருக்கிறதா?உங்களுடைய தாத்தா எந்த விதமான உயிலையும் எழுதாமல் இறந்து விட்டார். ஆனால் அவருக்கு இருக்கும் அனைத்து சொத்துமே அவர் சுயமாக சம்பாதித்து என்ற பொழுது அவருடைய கிளாஸ்1 நேரடி வாரிசுகளுக்கு, அதாவது மேற்கூறிய5 பிள்ளைகளுக்கும் அந்த உயிலில் சமமான பங்கு இருக்கிறது. அதாவது தாத்தாவின் மகளான திருமணமான பெண்ணான உங்கள் அம்மாவிற்கும் அதில் பங்கு இருக்கிறது.அதுமட்டுமில்லாமல் அதேபோல உங்கள் சித்திக்கும் அதில் பங்கு இருக்கிறது. எனவே, உங்களுடைய மாமாக்கள் சொல்வது போல, இதில் திருமணமானவர்கள் ஆகாதவர்கள் என்று எந்தவிதமான வேறுபாடும் கிடையாது. திருமணத்திற்கு வரதட்சணை கொடுத்தது, திருமணத்திற்கு செலவு செய்திருக்கிறோம் என்பதெல்லாம் இதில் பொருந்தாது. எனவே இருவருக்குமே சொத்தில் பங்கு இருக்கிறது.

Mar 28, 2024

விவாகரத்தான ஒரு பெண் மகனுக்கு தன்னுடைய முன்னாள் கணவரின் பூர்வீக சொத்தில் பங்கு இருக்கிறதா?

விவாகரத்தான ஒரு பெண் மகனுக்கு தன்னுடைய முன்னாள் கணவரின் பூர்வீக சொத்தில் பங்கு இருக்கிறதா? என்ற கேள்வி எழுப்பியிருக்கிறார். வாரிசு உரிமை சட்டத்தின்படி பூர்வீக சொத்தில் அனைத்து நேரடி வாரிசுகளுக்குமே பங்கிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விவாகரத்து ஆகி இருந்தாலும், முன்னாள் கணவர் மற்றொரு பெண்ணை மணந்து அவருக்கு குழந்தைகள் இருந்தாலுமே, இந்தப் பெண்ணின் மகனுக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறது.

Mar 22, 2024

திருமணமான மகளுக்கு தந்தை உயில் எழுதாத சொத்தில் பங்கு கிடைக்குமா..?

வாரிசுரிமை சட்டப்படி மகன்களுக்கு பங்கு இருப்பது போலவே, மகள்களுக்கும் பங்கு இருக்கிறதா என்ற சந்தேகம் இப்போது வரை பலருக்கும் இருந்து வருகிறது. அதிலும், அப்பாவுக்கு] சுயமாக சம்பாதித்த சொத்து இருந்து, அதை உயிலாக எழுதி வைக்கவில்லை என்னும் பட்சத்தில், பெண்கள் தந்தையின் சொத்தில் உரிமை கோர முடியுமா? திருமணமான பெண்களுக்கு உரிமை இல்லையாஅப்பா சுயமாக சம்பாதித்த சொத்தில், திருமணம் ஆனாலும் சரி திருமணமாகவில்லை என்றாலும் சரி, எல்லா வாரிசுகளுக்கு, பெண்களுக்கும் பங்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்து வாரிசுரிமை(திருத்தியமைக்கப்பட்டது) சட்டம்2005 இன் படி அப்பா சுயமாக சம்பாதித்த சொத்தில் மகனுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதேபோல மகளுக்கும் இருக்கிறது. திருமணம் ஆனாலும், ஆகவில்லை என்றாலும் இந்த சட்டம் பொருந்தும்.அப்பா உயில் எழுதாத பட்சத்தில், கிளாஸ் 1 சட்டபூர்வமான வாரிசுகள் என்று கருதப்படும் நேரடி வாரிசுகளுக்கு (குழந்தைகள்) பாலின வேறுபாடு இன்றி, அப்பாவின் சுய சம்பாத்தியத்தில் சம பங்கு உள்ளது. ஆனால் ஒருவேளை திருமணமான பெண்ணின் அப்பா தான் சுயமாக சம்பாதித்த சொத்தை வேறு யாருக்காவது உயில் எழுதி வைத்திருந்தால் அதில் பங்கு கேட்க முடியாது. சுய சம்பாத்தியம் இல்லாமல் பூர்வீக சொத்தாக இருந்தால் அதில் அனைவருக்கும் சமமான பங்கு உள்ளது.பொதுவாகவே சுயமாக சம்பாத்தியம் இருக்கும் அப்பாக்கள் தன்னுடைய காலத்திற்கு பிறகு பிள்ளைகள் இடையே சொத்து பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்கு உயில் எழுதும் வழக்கம் இருந்து வருகிறது. எனவே உயிரோடு இருக்கும் காலத்திலேயே யாருக்கு எவ்வளவு சொத்து என்பதை தெளிவாக குறிப்பிட்டு உயில் எழுதுவது பலவிதங்களில் சௌகரியமாக இருக்கும்.ஒரு சிலர் உயிருடன் இருக்கும்போதே தன்னுடைய சொத்துக்களை பரிசாக வாரிசுகளுக்கு வழங்கவும் விருப்பப்படுவார்கள். குறிப்பாக திருமணமான பெண்கள் இருந்தால் பெண்ணுக்கு சென்று வீடு, நிலம், ரொக்கம், நகை உள்ளிட்டவற்றைஉயிருடன் இருக்கும் போது அம்மாக்கள் பரிசாக கொடுக்க விரும்புவார்கள்.உதாரணமாக ஒரு நபர் சுயமாக சம்பாதித்த இரண்டு வீடுகள் இருக்கின்றன. அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இருவரும் வசதியாக, நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்கள். ஆளுக்கு ஒரு வீடு என்று தனது பிள்ளைகளுக்கு அந்த நபர் கொடுக்க விரும்புகிறார். ஆனால் ஒரு வீட்டில் அவர் வசித்து வருகிறார். எனவே, உயிருடன் இருக்கும் காலம் வரை அவரே அந்த வீடுகளின் உரிமையாளராக இருந்து, அவருடைய காலத்துக்கு பிறகு அந்த வீடுகள் பிள்ளைகளுக்கு செல்லும் படி உயில் எழுதி வைக்கலாம்.

Jan 04, 2024

குடும்ப சொத்துக்கள் யாருக்கு கிடைக்கும்

சொத்துக்கள் பிரிப்பது தொடர்பாக இந்தியாவில் தெளிவான சட்டங்கள் இருக்கின்றன ஆனாலும் மக்களுக்கு இதைப் பற்றி தெளிவாக தெரியவில்லை இதனால் தான் நம் நாட்டில் பல சொத்து பிரச்சனைகள் நீதிமன்றங்களில் பல வருடங்களாக நடைபெற்று வருகின்றன எனவே ஒவ்வொருத்தரும் இது குறித்த சட்டங்கள் தெளிவாக தெரிந்துவைத்திருந்தால் நீதிமன்றங்களுக்கு அலைய வேண்டியதில்லை.தாத்தாவின் சொத்து யாருக்கு சொந்தம்.சொத்தை பிரிக்காமல் ஒருவரின் தாத்தா இறந்து விட்டால் அந்த தாத்தாவின் சொத்து முதலில் பேரனுக்கு கிடைக்காது .பேரனின் தகப்பனாருக்கு சேரும் அதன் பிறகு தான் தகப்பனாரிடம் இருந்து மகனுக்கு கிடைக்கும் சில சமயம் தாத்தா இறப்பதற்கு முன்பு பேரனின் தந்தை இறந்து விட்டால், அப்போது தாத்தாவின் சொத்துநேரடியாக பேரனுக்கு கிடைக்கும் இதுதான் சட்டம்.

AD'sMore News