விவசாயம் செய்யும் மனித குலத்திற்கு எல்லா வழிகளிலும் உதவும் பசு, கன்று, காளைகளுக்கு நன்றி சொல்லி வணங்குகிறோம்.
பொட்டிட்ட புதுப்பானையில் பொங்குகின்ற பொங்கல் போல தங்க மனம் கொண்ட தமிழர்களின் வாழ்விலும் தமிழ் நகை பொங்கட்டும் பொன்னான புதுப்பானையில் பொங்கி வரும் வெண்பரை போல் வெள்ளை மனம் கொண்ட வெள்ளந்தி தமிழர்களின் வாழ்வில் வெற்றிகள் குவியட்டும்.
108 திவ்ய தேசங்களில் முதன்மையான உலகப் புகழ்பெற்ற ஶ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் நடைபெறும் பகல்பத்து, ராப்பத்து உற்சவத்தில் இன்று பரமபத வாசல் திறப்பு வைபவம்.
புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும்.மாற்றங்கள் மலரட்டும், இன்னிசை முழங்கட்டும்.எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்.புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள் .ஓயாத அலைகளைப் போல, இந்தப் புத்தாண்டில் சந்தோசமும், நிம்மதியும் ஓயாது பெருகட்டும்.இந்த வருட புத்தாண்டு உங்களுக்கு, உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும் ,வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன். உங்களுக்கும், உங்கள் அழகான குடும்பத்திற்கும், மிகவும் மகிழ்ச்சியானமற்றும் வளமான புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025.
மார்கழி மாதத்தில் அமாவாசை திதியும், மூலம் நட்சத்திரமும் இணையும் நாளில் அவதரித்தவர் அனுமன். இந்நாளே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. பக்தி, பணிவு, பலம் நமக்கு ஏற்பட, அவற்றின் அடையாளமான அனுமனை அனுமன் ஜெயந்தி நாளில் வழிபடுவது மிகவும் சிறப்பு. அனுமன் காயத்ரி மந்திரம்- ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே ,வாயுபுத்திராயதீமஹி ,தன்னோ ஹனுமத் ப்ரசோதயாத்.
கிறிஸ்துமஸ் உங்களுக்கு புதிய தொடக்கங்களை, மகிழ்ச்சியான நினைவுகளை, மற்றும் அன்பான தருணங்களை கொண்டுவரட்டும்.
திருக்கார்த்திகையன்று காலையில் குளித்ததும், 7:30 மணிக்குள் குலதெய்வத்தை மனதில் நினைத்து பூஜை செய்ய வேண்டும். சிவனுக்கும், முருகனுக்கும் உரிய பாடல்களைப் பாட வேண்டும். அன்று மாலை வரை மனதிற்குள் அண்ணாமலைக்கு அரோகரா, நமசிவாய, சிவாயநம, சரவணபவ ஆகிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். மாலை ஆறு மணிக்கு விளக்கேற்ற வேண்டும். திரியை வெறும் கைகளால் தூண்டக் கூடாது. ஏதாவது தீக்குச்சி, பூவின் காம்பு ஆகியவற்றை பயன்படுத்தி தான் திரியை தூண்ட வேண்டும். அல்லது விளக்கு தூண்டு திரியை பயன்படுத்தி விளக்கை தூண்ட வேண்டும்.திருக்கார்த்திகை அன்று விளக்கேற்றும் போது அகல் விளக்காக இருந்தாலும் வெறும் தரையில் வைக்கக் கூடாது. வாழை இலை, அரசு இலை,செம்பருத்தி இலை, வெற்றிலை என சுபிட்சத்தை தரும் ஏதாவது ஒரு இலை மீது வைத்து தான் ஏற்ற வேண்டும்.முதலில் வாசலில் கோலத்தின் மீது வைத்த விளக்கு,பிறகு நிலை வாசலில் வைத்த விளக்கை ஏற்ற வேண்டும். அங்கிருந்து ஒரு அகல் விளக்கை எடுத்து வந்து வீட்டின் பூஜைஅறையில் விளக்கேற்றி விட்டு, அதற்கு பிறகு தான் மற்ற இடங்களில் விளக்கேற்றவேண்டும்.விளக்கை மலையேற்றும் போது, தூண்டு திரியை பயன்படுத்தி திரியை பின்னோக்கி இழுத்து விளக்கை மலையேற்றலாம். அல்லது பூவை பயன்படுத்தி தீபத்தின் சுடரை அழுத்தி, மலையேற்றலாம்.வாயால் ஊதியோ, கையை வைத்து விசிறியோ விளக்கை குளிர வைக்க கூடாது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யார் வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம்.
கார்த்திகை மாதத்தில் தினமும் விளக்கேற்ற முடியாவிட்டாலும், துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய இந்த 3 தினங்களிலாவது தீபம் ஏற்றி வழிபடவேண்டும். விளக்கேற்றும்போது, ஒரு முகம் ஏற்றினால், நினைத்த செயல்கள் நடக்கும் என்பார்கள். இரண்டு முகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை கிட்டும். மூன்று முகம் ஏற்றினால். புத்திரதோஷம் நீங்கும். நான்கு முகம் ஏற்றினால் பசு, பூமி, செல்வம் சேரும். சர்வ பீடை நிவர்த்தி ஆகும். ஐந்து முகம் ஏற்றினால், சகல நன்மையும், ஐஸ்வரியமும் பெருகும்.கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல் சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, கார்த்திகை மாதத்தைத் திருமண மாதம் என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள். விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய அரிதான மோட்ச நிலையை அடைவார்கள்.10-ந்தேதி மகா தேரோட்டம் நடைபெறுகிறது. ஒரே நாளில் 5 தேர்கள் வலம் வரும். தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 13-ந் தேதி காலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு, 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. மலையில் ஏற்றப்படும் மகா தீபம்தொடர்ந்து 11 நாட்களுக்கு காட்சியளிக்கும். தொடர்ந்து 11 நாட்களும் மலையில் தீபம் ஏற்றப்படும். அதற்காக, 4,500 கிலோ தூய நெய் ஆவினிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, 1,500 மீட்டர் திரியும் தயார் நிலையில் உள்ளது.
விவசாயம்,வணிகம் மற்றும் தனிநபர் நிதிச்சேவைகள் மூலம் இராஜபாளையம் நகரின் வளர்ச்சியில் தன் நூற்றாண்டு பங்களிப்பை கொண்டாடும்,இந்நாளில் (28.11.2024) வங்கியின் நிறுவனர்,ஒரிசா மாநில முன்னாள் ஆளுநர்,சென்னை மாகாண முன்னாள் முதலமைச்சர் “தியாகத் திருமகனார்" அமரர் திரு பி.எஸ்.குமாரசாமி ராஜா அவர்களை போற்றி வங்கியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை பாராட்டுகிறோம்.வங்கியின் சேவைகள் பல நூற்றாண்டுகள் சிறப்பாக தொடர வாழ்த்துகிறோம்.
குழந்தைகளை அங்கீகரிப்பதற்காக இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது "பால் திவாஸ்" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தேதியில் தான் நம்முடைய இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் பிறந்த நாளும் அமைகிறது. ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மீது அதிக பிரியம் கொண்டவர். ஒவ்வொரு குழந்தையையும் அவர் இந்தியாவின் எதிர்காலமாகவே பார்த்தார்.குழந்தைகள் ஒரு தோட்டத்தில் உள்ள மொட்டுகளை போன்றவர்கள், அவர்களை மிகவும் கவனமாகவும்,அன்புடனும் நாம் பரமரிக்க வேண்டும். ஏனெனில் அவர்கள்தான் இந்த நாட்டின் எதிர்காலம், நாளைய குடிமக்கள்” என்று நேரு ஒருமுறை அவருடைய உரையாடலில் கூறியிருந்தார். எனவே இவருடைய பிறந்தநாளையே குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.