25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டுஇரத்ததான நிகழ்ச்சி >> ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றமாவட்ட டேக்வாண்டோ போட்டி >> ராஜபாளையம் நகராட்சியில் இந்த ஆண்டு இலக்கினை அடைய முனைப்பு காட்டி  வரும் நகராட்சியின் அனைத்து துறையினர். >> ராஜபாளையத்தில்  மாணவர்கள் மூலம் டிஜிட்டல் சர்வே . >> சொக்கர் கோயிலில்  மாசி மக பிரம்மோற்ஸவ தேர்த் திருவிழா >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில் தெப்பத் திருவிழா >> இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தின விழா கொண்டாட்டம் >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில்மாசி மகம் பிரம்மோற்ஸவத்தில் மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம் . . >> ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை, மேக மலை புலிகள் காப்பகத்தில்எண்ணிக்கை அதிகரித்துள்ள சாம்பல் நிற அணில்கள் >> ராஜபாளையம் முடங்கியார் ரோடு, செண்பகத்தோப்பு ரோட்டில் செக்போஸ்ட் திறப்பு.  >>


மக்களின் எதிர்பார்ப்பு

Mar 22, 2025

ராஜபாளையம் கண்மாய் கரையில் மருத்துவ கழிவுகள்.

ராஜபாளையம் புது பஸ்ஸ்டாண்ட் எதிரே உள்ளபெரியாதிகுளம் கண்மாய் கரையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.மருத்துவ கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த விதிகள் உள்ளநிலையில் கழிவுகளை கொட்டி மீறலில் ஈடுபட்டவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் .

Mar 17, 2025

கரும்புக்கு ஊக்கத்தொகை தேர்தல் அறிக்கையில் டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்க நட வடிக்கை எனக் கூறி ரூ. 3500  கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் ஏமாற்றம்.

 மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி நீர்நிலை அதிகம் என்பதால் கண்மாய், ஆற்று நீர் தேக்கங்கள் அருகே நெல்லும் அதனை அடுத்து கரும்பு விவசாயம் அதிக சாகுபடி நடைபெறும். சில ஆண்டுகளுக்கு முன் சுமார் 8000 ஏக்கர் கரும்பு சாகுபடி நடந்தது. தற்போது 2000 ஏக்கர் அளவுக்கு மட்டுமே கரும்பு பயிரிட்டு அதிக அளவில் வெல்லம் வியாபாரிகளுக்கு மாற்றி விடுகின்றனர்.ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகிரி சுற்றுவட்டார விவசாயிகள் சிவகிரி அருகே தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பை பதிவு செய்து அனுப்பி வந்தனர். இதில் 2018-19ல் சப்ளை செய்த சுமார் 500 விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை வழங்கவில்லை.இதனால்தொடர் பிரச்சினைகளால் சாகுபடி பணிகளுக்கு செலவழிக்க முடியாமல் தரிசாக விட்டுள்ளனர்.ஐந்து ஆண்டு தொடர் போராட்டங்களால் பாதி தொகையான ரூ.12 கோடி மட்டும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு தவணை தேதியை கடந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து வழங்கிய விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.255 ல் இருந்து ரூ.349 என உயர்த்தியதால் ரூ. 3500 என கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்க நட வடிக்கை எனக் கூறி 4 ஆண்டுகளைக் கடந்து தற்போது தான் ரூ.3500 வந்துள்ளனர். இது மாவட்ட விவசாயிகளுக்கு பயனளிக்காது என தெரிவித்துள்ளனர். கரும்பு விவசாயிகளின் நிலையை இப்பகுதி ஆளுங்கட்சியினர் கண்டு கொள்வதில்லை. ஏற்கனவே சாகுபடி பரப்பு 30 சதவீதமாக சுருங்கிவிட்டது கரும்பு விவசாயிகளின் நிலையை இப்பகுதி ஆளுங்கட்சியினர் கண்டு கொள்வதில்லை. அறிவிப்பு நிலுவைத் தொகை கேட்டு ,போராடி வரும் இப்பகுதி விவசாயிகளுக்கு, அரசாங்கம் சரியான முடிவு எடுக்குமா? என்று விவசாய மக்கள் எதிர்பார்க்கின்றனர்

Mar 04, 2025

மண் தரையால் நெல் மூடைகள் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பு இன்றி பாதிப்பு .

மாவட்டத்தில் செயல்படும் தற்காலிக அரசு நெல்கொள்முதல் நிலையங்களிலும் சுமார் 600 முதல் 800 மூடைகள் வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் இவற்றிற்கு அருகிலேயே  தகுந்த சேமிப்பு கிடங்கு வசதியில்லை. மழைக் காலங்களில் நெல் மூடைகள் நனைந்து சேதம் அடைவதால் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர். கொள்முதல் செய்யப்படும் நெல் மூடைகள் தேக்கி வைக்கப்பட்டு லாரிகள் மூலம் தொலைவில் உள்ள கிடங்குகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் நெல் கொள்முதல் மூடைகள் கூலி பிரச்சினை, லாரி கிடைப்பதில் தாமதம், விடுமுறை என பல்வேறு காரணங்களால் கொள்முதல் செய்யும் இடங்களிலேயே தேக்கி வைக்கப்படுகிறது.திறந்த வெளி மண் தரையாக உள்ளதால் மழை நேரங்களில் தார்ப்பாய் மூடி இருந்தும் தரையில் சிமெண்ட் தளம் இல்லாததால் தண்ணீர் தேங்கி அடியில் வைக்கப்படும் நெல் மூடைகள் சேதம் அடைகின்றன. தொடர் மழை காலங்களில் இது போன்ற சிக்கலை தீர்க்க தகுந்த சிமெண்ட், கான்கிரீட் தரைதளம் கொண்ட இடங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Mar 04, 2025

அய்யனார் கோயில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் புல் பத்தி மலை தோப்புகளில் யானைகள் புகுந்து சேதம் விவசாயிகள் பரிதவிப்பு.

 புல்பத்திமலை அருகே முகாமிட்டு அனுமன் கோயில் வரை தோப்புகளில் யானைகள்  புகுந்து பெரிய தென்னை மரங்களை சாய்த்தும் 60 க்கும் அதிகமான இளம் தென்னங் கன்றுகளின் குருத்துகளை பிடுங்கியும் உள்ளன. அத்துடன் வாழை, மா மரங்களையும், மின்வேலி, தண்ணீர் குழாய்களையும் உடைத்துள்ளது.அய்யனார் கோயில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் புல் பத்தி மலை அமைந்துள்ளது. இதன் அருகே நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை, மா, வாழை, பலா உள்ளிட்ட சாகுபடி நடைபெறுகிறது.ஓடை வழியாக நுழைந்து மின் வேலியையும் உடைத்து, ஆண்டு கணக்கில் பாதுகாத்து வளர்த்த மரங்களை, யானைகள் புகுந்து  ஒரே இரவில் சேதப்படுத்தியதால் ,பல லட்சம் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது. மா மர சீசன் தொடங்க உள்ள நிலையில் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதுடன் இழப்பீடு வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்..

Feb 25, 2025

ராஜபாளையம் சுற்றியுள்ள ஊராட்சி கிராம பகுதிகளில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு

நகர் பகுதியில் உள்ள ராஜபாளையம் சுற்றியுள்ள ஊராட்சி கிராம பகுதிகளில் செயல்படும் ஹோட்டல்கள், தள்ளு வண்டி கடைகள், டீ, இறைச்சி, பூக்கடைகள் என அனைத்து பகுதிகளிலும். ஆரம்பத்தில் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்த போது உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் வாழை இலை உபயோகம், பொருட்கள் வாங்க வருபவர்கள் துணி பை கொண்டு வருவது என மாற்றத்தை காண முடிந்தது. கால் நடைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எமனாக உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கினை கட்டுப் படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்  என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.  விவசாய தோப்புகளில்  தாழ்ந்து செல்லும் மின் வயர்களால் விவசாயிகள் கவலை. பலரது விவசாய தோப்புகளிலும் மின்வயர்கள் தாழ்ந்த நிலையில் காணப்படுகிறது. மின் வயர்களை உயர்த்தி அமைக்க கோரி சம்பந்தப்பட்ட துறையினரிடம் கோரிக்கை விடுத்தும் பணிகளில் வேகம் இல்லை. குடியிருப்பு பகு திகளில் பிரச்னை எனில் உடனடியாக மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்கும் சூழலில் வனப்பகுதி ஒட்டிய தோப்புகளில் கண்டுகொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்தாலும் மிகுந்த தாமதத்துடன் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் யானைகள் தொந்தரவு இருக்கும் நேரத்தில் குடிநீர் குழாய் உடைப்பு போன்ற சூழலில் தாழ்ந்து செல்லும் மின்வயர்களால் யானைகள் மீது உரசி பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். மின் வாரியத்தினர் மின் வயர்களை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் . 

Feb 22, 2025

மத்திய அரசு புதிய கல்வி கொள்கை பி.எம்.ஸ்ரீ திட்டம் தமிழகத்துக்கு வேண்டும் என மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

பி.எம்.ஸ்ரீதிட்டத்தில் தரமான கல்வி தருவதாக, மத்திய அரசுகூறுகிறது. தமிழக அரசுதற்போதே தரமான கல்வி தான் தந்து கொண்டிருக்கிறது. பி.எம்.ஸ்ரீதிட்டம் வாயிலாக, மத்திய அரசுபுதிய கல்வி கொள்கையை புகுத்த நினைக்கிறது.புதிய கல்வி கொள்கையால் மாணவர்கள் இடை நிற்றல் அதிகரிக்கும்.. மும்மொழி கொள்கை வாயிலாக, மீண்டும் ஒரு மொழிப் போருக்கு,மத்திய அரசுதமிழகத்தை தூண்டுகிறது என நமது கல்வி அமைச்சர் கூறுகிறார்.மத்திய அரசின் நல்லகல்வித் திட்டமான பி.எம்.ஸ்ரீயை தமிழக அரசு எதிர்ப்பது சரியல்ல.1960 துகளில் ஹிந்தித் திணிப்பை எதிர்த்த இந்தஅரசு மறுபடியும் ,அதே தவறைசெய்யாமல் இருப்பது நல்லது. வட நாட்டிற்குச் செல்லும் பொழுது மொழிப் பிரச்சனை வெகுவாகப் பாதிக்கிறது. அன்று படித்திருந்தால் இந்தப் பிரச்சனை இல்லையே!1960 வது தலைமுறைகள் ஹிந்தி படிக்க முடியாமல் செய்து விட்டார்களே என்று, இன்றும் வருத்தப்படுகின்றனர்.தமிழகத்துச் செல்வங்கள் இன்னும் நன்றாகப் படிக்கட்டுமே ? பி.எம்.ஸ்ரீதிட்டத்தை ஆதரிக்க வேண்டும் என மக்கள்.எதிர்பார்க்கின்றனர். 

Feb 20, 2025

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் உள்ள விளை நிலங்களை சேதப்படுத்தும் யானைகள்.

ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் மா, தென்னை, வாழை, நெல் ஆகியவைசாகுபடி செய்யப்பட்டு உள்ளது.ராஜபாளையம் மலையடி வார பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் இரவு நேரங்களில் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். கடந்த ஒரு வாரமாக6 காட்டு யானைகள் கூட்டம் நச்சாடைப்பேரி கண்மாய் பகுதியில் உள்ள நெற்பயிர்களையும், - தென்னை, பனை மரங்களையும் சேதப்படுத்தி உள்ளது. உணவு மற்றும் நீருக்காக வனப்பகுதியை விட்டு வெளியே வரும் யானைகள் மலையடிவாரத்தில் உள்ள பகுதிகளில் தென்னை,மாமரங்களை சேதப்படுத்தும்.3 மாதங்களுக்கு மேலாக யானைகள் இதே பகுதியில் முகாமிட்டு உள்ளதால் இரவு நேரங்களில் காவலுக்கு செல்ல அச்சமாக உள்ளது. யானைகளை காட்டிற்குள் விரட்ட வனத்துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனவிவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் .

Feb 05, 2025

மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் உள்ள சிறிய ரயில் நிலையங் களில் பயணிகளுக்கான நவீன வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் அம்ரித் பாரத் திட்டம் துவங்கப்பட்டது.

மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் உள்ள சிறிய ரயில் நிலையங் களில் பயணிகளுக்கான நவீன வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் அம்ரித் பாரத் திட்டம் துவங்கப்பட்டது.அதிக வருவாய், பாரம்பரிய நகரங் கள், முக்கிய வழித்தடம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு கோட்டத்திற்கு 15 ரயில்வே ஸ்டேஷன் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது.மதுரை ரயில்வே கோட்டத்தில் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் உட்பட 15 ரயில்வே ஸ்டேஷன்கள் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் கடந்த பல மாதங்களாக நடந்து வருகிறது. ஸ்டேஷன் போர் டிகோ பகுதியில் அலங்கார முகப்பு அமைத்தல், நடை மேடை மேம்படுத்துதல், வாகன காப்பகம், காத்திருப்பு அறைகள், சுகாதார வளாகம், டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகள், லிப்ட் வசதி, நிழற்குடை வசதிகள் உள்ளிட்ட பல் வேறு வசதிகள் செய்ய திட்டமிடப்பட்டது. ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அதிகளவில் பயணிகள் வந்து செல்லும் நிலையில் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இங்கு இரண்டாவது நுழைவாயில், காத்திருப்போர் அறை, நடைமேடை மேற்கூரை பணிகள் மந்தமாக நடக்கிறது. லிப்ட் மற்றும் டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகள் மற்றும் செயல் பாட்டில் உள்ளது . விரைவில் பணிகளை முடித்து மக்கள் சிரமத்தை குறைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

Feb 05, 2025

எச்சரிக்கை பலகை இன்றி  4 வழிச்சாலை ரயில் பாதை மேம்பாலப்பணி விபத்து வாய்ப்பு.

திருமங்கலம் - கொல்லம் நான்கு வழிச்சாலை பணியில் ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் அடுத்து முதுகுடி அருகே ரயில் பாதை மேம்பால பணி தொடக்க நிலையில் உள்ளது. இதற்கான மேம்பால பணிகள் நடந்து வரும் நிலையில் நான்கு வழிச்சாலையின் எஸ்.ராமலிங்காபுரம் பிரிவு சர்வீஸ் ரோடு தொடக்கத்தில் எச்சரிக்கை அறிவிப்பு வைக்காமல்  தடையை அமைத்துள்ளனர். அட்டை மில் முக்கிலிருந்து ராஜபாளையம் அடுத்த முதுகுடி முன்பு வரை 5 கி.மீ சுலபமாக நான்கு வழிச்சா லையிலேயே பயணிக்கலாம். ஆனால் தற்போது வரை ரயில்வே பாதை மேம்பாலம் முடிவடையாமல் துண்டிக்கப்பட்டுள்ளது.இதை அறியாத கனரக வாகனங்கள் டூவீலர்கள் பாலத்தின் உச்சிவரை வந்து சங்கடத்திற்கு உள்ளாகி திரும்பு கின்றனர். கவனம் இல்லையெனில் தடுப்பை தாண்டி வாகனங்கள் விபத் துக்கு உள்ளாகும் நிலை உள்ளது.மேம்பால சாலை தொடக்கத்திலேயே எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்து விபத்துக்களை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.       

Jan 18, 2025

ராஜபாளைய நகர மக்கள் எதிர்பார்ப்புகள்

சாஸ்தா கோயில் வனப்பகுதியில் ட்ரக்கிங் வாய்ப்புகளை எதிர்பார்த்து சுற்றலா பயணிகள் காத்திருக்கின்றனர்.   ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய சாஸ்தா கோயில் வனப்பகுதியும் அறிவிப்பில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அறிவிக்காததால் இதற்கான பரிந்துரைக்கு காத்திருக்கின்றனர்.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏரா ளமான ட்ரக்கிங் மலையேற்ற பகுதிகள் இருந்து வந்த நிலையில் காட்டுத்தீ, வன விலங்குகள் எதிர் கொள்ளுதல், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக அரசால் முறைப்படுத்தி அறிவிக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டத்தில் சாஸ்தா கோயில் வனப்பகுதி ஏற்கனவே தகுந்த பாதுகாப்புடன் கண்காணிப்பின் கீழ் இருந்து வருவதுடன் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளுக்கு முறையான பாதுகாப்புடன் வனப்பகுதியின் தொடக்கம் முதல் அருவி வரை வாகனத்தில் அழைத்துச் சென்று ஆற்றில் நீராடிய பின் மீண்டும் கொண்டு வந்து விடப்படுகிறது.இதில் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் உணவு பொருள்கள் கட்டுப்பாடு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் தேவதானத்தில் போதிய வாய்ப்புகள் இருந்தும் சாஸ்தா கோயில் வனப்பகுதியில் சூழல் சுற்றுலா திட்டத்தில் ட்ரக்கிங் அமைக்க வாய்ப்புகள் இருந்தும் விடுபட்டதை அரசுக்கு பரிசீலனை செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.   ராஜபாளையம் முடங்கியார் சாலையில் உள்ள இரட்டைக் குளம் கண்மாய் தெரியாத அளவிற்கு ஆகாயத்தாமரை செடிகள்.  ராஜபாளையம்-அய்யனார் கோவில் செல்லும் வழியில் உள்ள முடங்கியார் சாலையில் இரட்டைக்குளம், புளியங்குளம் கண்மாய் உள்ளது. இதில் கண்மாய் தெரியாத அளவிற்கு ஆகாயத்தா வதந்தி மரை அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதனால் கண்மாய்களில் தண்ணீர் சேமிக்க முடியாத நிலை உள்ளது. ஆக்கிரமிப்பினால் இந்த கண்மாய்களின் அளவும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழையால் ஆற்றுப்பகுதி வழியாக இந்த கண் மாய்க்கு நீர் வந்து சேரும். தற்போது இந்த கண்மாய் பராமரிப்பு செய்யப்படாத தால் கண்மாய்க்கு நீர்வரத்து வழிகள் அடைபட்டு மழைநீர் செல்ல வழியின்றி காணப்படுகிறது. எனவே கண்மாயில் ஆக்கிரமித்து வளர்ந்து வரும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றவும், கண்மாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும் சம் பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ராஜபாளையத்தில் அடிக்கடி ஏற்படும் குழாய் உடைப்பு நிரந்தர தீர்வு காண கோரிக்கை. ராஜபாளையம் நகராட்சியில் தாமிரபரணி கூட் டுக் குடிநீர் திட்டம் மூலம் புதிய குழாய்கள் பதிக்கப்பட்டு மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் ஏற்றி  சப்ளைக்கான கடைசி கட்ட பணிகள் நடந்து வருகிறது.இதில் அழுத்தம் தாங்காமல் பல்வேறு இடங்களில் பகிர்மான குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது.ஒரு சில இடங்களில் உடைப்பு சரி செய்யப்பட்டும் பல இடங்களில் குடிநீர் வாறுகால்களில் கலந்து வீணாவதுடன் அந்தந்த பகுதி ரோடும் சேதம் ஏற்பட்டு வருகிறது.தொடரும் இப்பிரச்சனைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்

1 2 3 4 5 6 7

AD's



More News