வறட்சி மாவட்டமாக விருதுநகர் மாவட்டம் உள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் ஆறுகள் நீர் ஆதாரமாக இருந்து ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சேத்துார், தேவதானம் உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதி வழியாக ஓடி பாசனத்திற்கு பயன்பட்டு வருகிறது.மழைக்காலங்களில் இவை இப்பகுதியில் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களின் பாசன விவசாயத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர்.கண்மாய்களின் மூலம் மாவட்டத்தில் சுமார் 27, 280 ஹெக்டேர் பாசனம் நடைபெற்று வருகிறது.நீர்வள ஆதாரங்களை பேணிக்காக்கவும் நிலத் தடி நீர்மட்டத்தை பெருக் கவும், மழை நீரை வீண டிக்காமல் சேமிக்கவும் மற்ற பகுதிகளுக்கு திருப்பி விடவும் கண்மாய்களே ஆதாரம். அவசர காலங்களில் கண்மாய்களில் நீரை திருப்பி விடவும், தேங்கியுள்ள தண்ணீரை தேவைக் கேற்ப வெளியேற்றவும் அடைத்து பாதுகாக்கவும் ஷட்டர்களின் பராமரிப்பு முக்கிய பங்காற்றுகிறது.இதில் ஷட்டர்களை பராமரித்தல் தேவையான இடங்களில் புதிதாக அமைத்தல், தொடர் அழுத்தத்தினால் சேதம் அடைவதை கண்டறிந்து மராமத்து செய்தல் போன்ற பணிகளை மழைக்காலத்திற்கு முன்பே பழுதுகளை தகுந்த இடைவெளியில் சரி பார்ப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் .பல ஷட்டர்கள் போதிய அளவு திறக்க முடியாமல் பயனற்று காணப்படுகின்றன. பருவ மழைக்கு முன்பே கண்மாய் ஷட்டர்களின் பராமரிப்பை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
அம்ருத் திட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம் ராஜபாளையம் நகராட்சியில் நடைமுறைக்கு வந்துள்ளது .2018ல் தொடங்கப்பட்டு 44 ஆயிரம் வீடுகள் மற்றும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. சஞ்சீவி மலை அருகே தொட்டியபட்டி ஊராட்சி பின்புறம் இதில் வெளியேற்றப்படும் கழிவுநீர் ,பம்பிங் செய்யப்பட்டு சுத்திகரிப்பு நிலையம் அமைத்து செயல்பட்டு வருகிறது. ஆர்.ஆர்.நகரில் இருந்து கலங்காபேரி ரோட்டின் வழியே செல்லும் பிரதான குழாயில் கடந்த மூன்று நாட்களாக உடைப்பெடுத்து கழிவு நீர் ரோட்டில் வழிந்தோடுகிறது. நீண்ட நாட்களாக இதன் அருகிலேயே கசிந்து கொண்டிருந்த கழிவு நீர், சரி செய்த நிலையில் தற்போது உடைப்பு ஏற்பட்டுள்ளதால் மீண்டும் துர்நாற்றம் அதிகரித்துள்ளது.கமிஷனர், ராஜபாளையம் பாதாள சாக்கடை பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் நாகராஜன், நகராட்சி கமிஷனர், வாரியத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளது. விரைந்து சரி செய்ய. மக்கள் எதிர்பார்க்கின்றனர்
ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானாவில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரயில்வே பீடர் ரோட்டில் , பஞ்சு மார்க்கெட் டில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் சென்று திரும்பி வர வேண்டிய அரசு, தனியார் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நேரத்தை மிச்சப் படுத்த ரயில்வே ஸ்டேஷன் அருகே தொடங்கும் இந்த ரோட்டில் நுழைந்து மெயின் ரோட்டை அடைகின்றன .பள்ளிகள் அதிகம் உள்ள இந்த ரோட்டில் வேகம் எடுக்கும் வாகனங்களால் பள்ளி மாணவர்கள் ரயில் பயணிகள் உயிர் பயத்தில் ஒதுங்கி வழிவிட வேண்டியுள்ளது. ஏற்கனவே மேடு பள்ளங்களாக உள்ள ரோட்டில் வேகம் எடுக்கும் வாகனங்கள் வேக கட்டுப்பாட்டை பின் பற்ற வேண்டும். வாகனங்களை வேக கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்ற செய்வதுடன், வாகனங்களில் ஒலிக்க விடும் ஏர் ஹாரன்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனமக்கள் எதிர்பார்க்கின்றனர் .
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் கட்டுமானம் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டு ரூ.3.40 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டது.திறப்பு விழா நடந்து இரண்டு மாதங்கள் கடந்தும் பஸ் ஸ்டாண்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கண்காணிப்பு கேமரா, பாதுகாப்பிற்கு போலீஸ், பஸ் நிறுத்த ஊர் பெயர் எழுதாதது, நேர அட்டவணை என அடிப்படை வசதிகளும் போதிய பாதுகாப்பும் இல்லாமல் பயணிகள் சங்கடத்திற்கு உள்ளாகின்றனர்.இது தவிர அரசு மகப்பேறு 'மருத்துவமனை முன்பு ஏற்கனவே இருந்த தற்காலிக பஸ் ஸ்டாப்பும் செயல்பாட்டில் இருந்ததால், பஸ் ஸ்டாண் டில் கூட்டம் குறைவாக இருந்து பயணிகளில் முழு அளவு வரவில்லை.இந்நிலையில் முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து நகராட்சி கமி ஷனர் நாகராஜன் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சீமான், வடக்கு போலீஸ் எஸ்.ஐ ராஜ்குமார் உடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.இதில் பஸ் ஸ்டாண்டில்பயணிகள்பாதுகாப்பிற்காக 15 கண்காணிப்பு கேமராக்கள், போக்குவரத்து ஒழுங்குபடுத்தி அறிவிப்பு செய்ய ஒலி பெருக்கி வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என போலீசார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நகரங்களை அடுத்து உள்ள நெடுஞ்சாலைகள், கிராமச்சாலைகள் என மக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளில் வடமாநில வியாபாரிகள்,இவர்கள் சீசனுக்கு தகுந்தாற்போல் தேர்ந்தெடுத்த பொருட்களை மொத்தமாக கொண்டு வந்து சில்லறை வியாபாரிகளை அணுகி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தற்காலிக கடை விரிப்பவர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். இவற்றை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் ரோட்டிலேயே வாகனங்களை நிறுத்தி பேரம் பேசுவதால் பின்னால் வரும் வாகனங்களுக்கு விபத்து அபாயம் ஏற்படுகிறது. சாலையோரம் விரிக்கும் கடைகளில் வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக ரோட்டின் வெள்ளை அபாய கோடு வரை கடை பரப்பி வைக்கின்றனர்.சாலைகளின் குறிப்பிட்ட தொடர்ச்சியாக கடை இடைவெளிகளில் பரப்பி நிற்கும் இது போன் றவர்களை போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் கண்டு கொள்வதில்லை. இவர்களின் விதி மீறலால் ஏதும் அறியா வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருவதை தடுக்க வேண்டும். ரோட்டில் இருந்து சற்று தொலைவில் கடைகள் அமைப்பது குறி த்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையம் பிரதான சாலையில் அமைந்துள்ள வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் வழக்கில் சிக்கியுள்ள டிராக்டர்கள், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்கள், போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்டுக்கு வெளியே, நிறுத்தி வைத்துள்ளனர்.வாகனங்களை அகற்றாமல் 10 அடி விட்டு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து புதிய தார்ரோடு பணிகள், நடந்து முடிந்துள்ளது.வழக்கில் சிக்கியுள்ள வாகனங்களால் ஏற்கனவே இடையூறுடன் ரோட்டின் அகலம் சுருங்கிவிட்டது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படும். முழுமையான அளவுரோடு பணிகள் நடைபெற வேண்டும். சமூக ஆர்வலர்கள், மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ராஜபாளையத்தில் காலாவதியான பொருட்கள், கலப்பட உணவு பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது உணவுப் பொருட்களின் பெயர், விலாசம், தயாரிப்பு காலாவதி தேதி உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்கள் தெரியும் வகையில் அச்சிட வேண்டும் என்பது அடிப்படை விதி.இந்நிலையில் வளர்ந்து வரும் ராஜபாளையம் நகர் பகுதியில் பெரும்பாலான உணவகங்கள், பெட்டிக் கடைகள், தள்ளுவண்டி கடைகள் போன்றவற்றில் கலப்பட உணவு பொருட் கள், அதிக நிறமி சேர்க்கப்பட்ட உணவுகள் விற்பனை நடைபெற்று வருகிறது.ஓட்டல்களில் விற்பனையாகாத உணவுகளை பிரிட்ஜ்களில் வைத்து விற்பது, பாஸ்ட் புட் கடைகளில் எந்தவித பாதுகாப்பும் சுகாதாரமும் இன்றி உணவு தயாரிப்பு போன்றவை மக்களுக்கு தேவையற்ற உடல் உபாதைகளுக்கு காரணமாகிறது.உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இவற்றைக் கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையம், தேவதானம், சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி தென்னை விவசாயம் நடக்கிறது. இவற்றில் 50 சதவீத பரப்பில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல் அதிகரித்து மகசூல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதன் தாக்கம் படிப்படியாக அதிகரித்து பரவி வருவதால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.வெள்ளை ஈக்கள் பாதிப்பு 2016 பரவ துவங்கியது முதல் மரங்களில் பல்வேறு பிரச்னை ஏற்பட்டு வருகிறது. கட்டுப் படுத்த அரசு கூறும் வழி முறைப்படி பின்பற்றியும் பலனில்லை.கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் மழைபொழிவு இல்லாதது காற்றின் தாக்கம் போன்றவை இவை வேகமாக பரவுவதற்கு வழி ஏற்படுத்தி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த அரசு முழு வீச்சில் இறங்குவதுடன் விவசாயிகளை இணைத்து ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தென்னை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையம் நடுவே செல்லும் ரயில்வே தண்ட வாளத்தை ஆம்புலன்ஸ் உள்ளிட்ட இலகு ரக. வாகனங்கள் நெரிசலில் மேம்பாலம் வழியே ஏறி செல்லாமல், சுரங்கப்பாதை மூலம் சுலபமாக கடக்க 800 மீ., நீளத்தில் ரூ.3 கோடி மதிப்பில் ரோடு டி.பி மில்ஸ் ரோடு, பி.எஸ்.கே ரோடு இணைக்க திட்ட அறிக்கைக்கு பொதுப் பணித்துறை, நகராட்சி சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.ரயில்வே சார்பில் பணிகள் தொடங்கி கான்கிரீட் பிளாக்குகள் தண்ட வாளம் கீழ்ப்பகுதியில் புதைக்கப்பட்டு மின் வழித்தட கம்பிகள் மாற்றி பொருத்தியும், சுரங்கப் பாதைக்கான கார்டர்கள் பொருத்தப்பட்டு ரயில்வே தரப்பில் பணிகள் முடிந்தது.இணைப்புக்காக டி.பி மில்ஸ் ரோட்டில் 6 மீட்டர் நிலம் ஒதுக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தது. இப்பாதை திருமங்கலம், கொல்லம் தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றுப்பாதையாக உள்ளது. எனவே ரயில்வே துறை 4 மீட்டர் நிலம் வழங்க முன்வந்தால் நகராட்சி சார்பில் 2 மீட்டர்இடம்ஒதுக்கமுடியும்எனதெரிவிக்கப்பட்டது. இணைப்பு ரோடு தாமதத்தால் சுரங்கப்பாதையை தற்காலிகமாக மண் போட்டு மூடி விட்டனர். செயல் பாட்டிற்கு வரும் என எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறுவதாக தெரியவில்லை. போக்குவரத்து நெரிசல், எரிபொருள் விரயம், ஆபத்தாக கடந்து செல்வதால் விபத்து அபாயம் போன்ற சிக்கல்களை தினமும் சந்தித்து வருகின்றனர். விபரீதம் ஏற்படுவதற்கு முன் சிக்கலுக்கு வழிகாண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை 71.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி முழுமை அடையும் நிலையை எட்டியுள்ளது. பலஇடங்களில் மேம்பால பணிகள் மட்டுமே முடிவடைய வேண்டிய நிலையுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணன் கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் புதிய பஸ்ஸ்டாண்ட் வரையுள்ள நான்கு வழிச்சாலையில் பல கனரகவாகனங்கள், கார்கள், இளைஞர்களும் பைக் ரேஸில், அதி வேகத்தில் வந்து விபத்தில் சிக்கும் நிலை கடந்த சிலநாட்களாக ஏற்பட துவங்கியுள்ளது. ஒருகார் கவிழ்ந்து நான்கு பேர் காயமடைந்தனர்.டூவீலரில் சென்ற எஸ்.ஐ. ஒருவர் தவறிவிழுந்து பலியானார்.வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் கிருஷ்ணன் கோவிலுக்குள் செல்லாமல் நான்கு வழிச்சாலையிலேயே பயணிக்கின்றன. இவர்கள் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே சர்வீஸ் ரோட்டில் இறங்கும் போது வேகத்தை கட்டுப் படுத்தாமல் விபத்து ஏற்படுகிறது.விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர் பார்க்கின்றனர்.