ராஜபாளையம் சுற்றுவட்டார பள்ளிகளில் மாணவர்களின் ஆதார் அப்டேட் செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில் ஒரு வாரத்திற்குள் இதற்கான கெடு என தகவல் வந்ததில் தினமும் ராஜபாளையத்தில் செயல்படும் ஏழு முகாம்களுக்கு மாணவர்களின்பெற்றோர் படை எடுத்தனர்.மொத்தம் உள்ள ஆதார் சேவை மையங்களில் ஸ்டேட் பேங்க், நகராட்சி அலுவலகம் இரண்டும் பழுது காரணமாக செயல்படாத நிலையில் தனியார் வங்கி தாலுகா அலுவலகம் உள்ளிட்ட மற்ற இடங்களில் பள்ளி மாணவர்களு டன் பெற்றோர் கூடினர்.பி.எஸ்.கே பார்க் அருகே நேற்று தனியார் வங்கியில் நுாற்றுக்கும் அதிகமான பெற்றோர்ஒன்று கூடியதால் சிக்கல் ஏற்பட்டது. தினமும் வந்து பதிவு செய்ய முடியாமல்திரும்பி செல்வதாக கூறி வங்கி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசார் மாணவர்களின் பெற்றோரிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுகலைந்து போக செய்தனர்.நாள் ஒன்றுக்கு 30 டோக்கன் மட்டும் வழங்குகின்றனர். அப்டேட்டிற்கான கால அவகாசம் இல்லாததால் தொலைதூரத்தில் இருந்து வந்துஏமாற்றத்துடன் திரும்புகிறோம். பள்ளி சார்பில் சிறப்பு முகாம் ஏற்பாடுசெய்து மாற்று வழி காண வேண்டும், என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையம் நகர் பகுதி பாதசாரிகளின் பாது காப்பிற்காக அமைக்கப்பட்ட நடைபாதைகள் ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் சென் றுள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை,முடங்கி யார் ரோடு, ரயில்வே பீடர் ரோடு உள்ளிட்ட நகரைசுற்றிலும் செல்லும் மாநில நெடுஞ்சாலை ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் பலஆண்டுகளாக முழுமையாக அகற்றப்படாமல் உள்ளன.சாலைகளில் பாதசாரிகள் பாதுகாப்பிற்காகவும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாமல் இருக்கவும், நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.ஐந்து ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ் சாலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்காகநெடுஞ்சாலைக்கு இடங்கள் அளவீடு செய்யப்பட்டு குறியீடு வரையப்பட்டு,ஆக்கிரமிப்பு சொந்தமான அகற்றும் பணிகள் நடக்காததால் மேலும் புதிதாகமுளைத்துள்ளன. சாலைகளில் பாதசாரிகள் பாதுகாப்பிற்காகவும் ,வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், அமைக்கப்பட்ட இவற்றை பாதசாரிகள் பயன்படுத்த முடியாமல் ,ரோட்டில் நடந்து செல்ல வேண்டி உள்ளதால் போக்குவரத்து நெரிசலும் ,அதிகரித்து வருவதுடன், மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. நகர் பகுதிபோக்குவரத்து நெரிசலை சீராக்க நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி, வருவாய்துறை, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறனர்.
ராஜபாளையம் சம்பந்தபுரம், டி.பி மில்ஸ் ரோடு, மலையடிப்பட்டி பகுதிகளில் ஏற்கனவே மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அருகே கஞ்சா இளைஞர்கள் நடமாட்டம், மது அருந்துதல், தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி குளியல் போன்றசெயல்கள் நடந்துள்ளது.ராஜபாளையம் நகராட்சி குடிநீருக்காக அய்யனார் ஆற்றில் இருந்து தண்ணீரை தேக்கி சுத்திகரிப்பு குழாய் மூலம் நகர் பகுதியில் அமைந்துள்ள 6 மேல்நிலை குடிநீர் தொட் டிகளில் சேமித்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.கூடுதல் குடிநீர் தேவைக்காக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கி புதிதாக 10 மேல்நிலை தொட்டிகள் அமைக்கப் பட்டு விநியோகம் நடக்கிறது. குடிநீர் தொட்டி சுற்றி உள்ள இடங்களில் இளைஞர்கள், சமூக விரோதிகளின் செயல்கள் அதிகரித்துவருகிறது. இது போன்ற பிரச்சனை அதிகரித்துள்ள நிலையில் ராஜபாளையம் மேல்குடிநீர் தொட்டிகளில் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளபடி கண்காணிப்பு கேமரா அமைத்து சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
புலிகள் காப்பக மலைப்பகுதியாக தேவதானத்தில் இருந்து ராஜபாளையம், ஸ்ரீவில்லி புத்துார், வத்திராயிருப்பு, சாப்டூர் வரை நீடிக்கிறது. இந்த மலைப் பகுதியில் புலிகள் கரடி, யானைகள்,சாம்பல் நிற அணில்கள் பல்வேறு வகை வண்ணத்துப்பூச்சிகள் உட்பட ஏராளமான வன உயிரினங்கள் உள்ளது.புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் தலைமையில் நான்கு வனச்சரகர்கள் மற்றும் வனக்காப்பாளர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் இவற்றைக் காக்கும் பொருட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலையில் 24 மணி நேர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.சமூக விரோத கும்பல்கள் வனப்பகுதிக்குள் புகுந்து மான் வேட்டையில்தொடர்ந்து , செயல்பட்டு வருகிறது. இதனை வனத்துறையினர் கண்டறிந்து வழக்குகள் பதிவு செய்தாலும், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள்கைது செய்யப்பட்டாலும், நீதிமன்ற ஜாமின் பெற்று மீண்டும் வனவிலங்குவேட்டையில் ஈடுபடுகின்றனர். இதனால் இப் பகுதியில் வனவிலங்குகள் வேட்டைஎன்பது தொடர்கிறது.கூடுதல் வேட்டை தடுப்பு காவலர்கள் நியமித்தும், மலையடி வாரத்தில் போலீஸ் செக் போஸ்ட் அமைத்தும், விவசாயிகள் அல்லாத தனி நபர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதிக்கு வருவதை தடுக்கவும், வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் மேல்நிலைப் பள்ளிகள், ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரயில் பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் கடந்து செல்லும் நிலையில் பெயரளவிற்கு சீரமைக்கும் பணி நடப்பதை ஆய்வு செய்து முழுமையாக மேடு பள்ளங்கள் இன்றி சீரமைக்க வேண்டும். ராஜபாளையம்நகர் பகுதி ரவுண்டானாவில் இருந்து ரயில்வே ஸ்டே ஷன் செல்வதற்கு ரயில்வேபீடர் ரோடு அமைந்துள்ளது. அரசு ஆண்கள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,இரண்டு தனியார் மேல்நிலைப் பள்ளிகள், துவக்கப்பள்ளி அமைந்துள்ள நிலையில் 24 மணிநேரமும் ரயில்கள் வந்து சென்று பயணிக்கும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.புது பஸ் ஸ்டாண்ட் செல்வதை எதிர்க்க பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் பஸ்கள்இந்த ரோட்டை பயன்படுத்துகின்றன. ஆறாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் உபயோகிக்கும் இச்சாலையில் உள்ள சீரற்ற மேடு பள்ளங்கள் ஆபத்தை விளைவிப்பது டன், வேக கட்டுப்பாடு குறியீடுகள், பாதசாரிகள் நடைமேடை, எச்சரிக்கை பலகைகள் என எதுவும் செயல்பாடு இல்லை.முழுமையாக மேடு பள்ளங்கள் இன்றி ரோடுகளை மேம்படுத்திபாதுகாப்பு குறியீடுகள் அமைத்து வேகக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திவிபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்
ராக்காச்சிஅம்மன்கோயில் பாதையில்,ராஜபாளையம் மேற்குதொடர்ச்சிமலைஅடிவாரம் ,ஓடைக்காடுபகுதியில் தென்னை மரங்களும், ஆயிரத்திற்கும் அதிகமான வாழை மரங்களை கடந்த ஒரு வருடத்திற்கும்அதிகமாக முருகன் குத்தகை எடுத்து 20 ஏக்கர் விவசாயம் செய்து பராமரித்து வந்தார் இரவுநேரத்தில் தோப்பிற்குள் புகும் யானை கூட்டம் வாழை மரங்களை ஒடித்துசேதப்படுத்தியதுடன், தென்னை மரங்களையும் கடந்த சில நாட்களாக சாய்த்து பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில நாட்களில் பயன் தரக்கூடிய வாழை மரங்கள் முழு வதும் யானை கூட்டம் புகுந்து சேதம் ஏற்படுத்தியதால் பல லட்சம் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள் ளது. வனத்துறையினர், வருவாய்த் துறையினர் இழப்பீடை அரசுக்கு பரிந்துரை செய்து பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவிவசாயி முருகன் எதிர்பார்த்துள்ளார் .
.2023ல் ரூ.8.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ராஜபாளையம் புது பஸ்ஸ்டாண்டிலிருந்து தென்காசி தேசிய நெடுஞ்சாலைக்கு நேரடிஇணைப்பு ரோடுபணிகளுக்காக,. பெரியாதிகுளம், கடம்பன்குளம்கண்மாய்பாசனபகுதிவழியே 30 மீட்டர்அகலத்தில் 2.10 கி.மீ., துாரத்திற்கு சாலை அமைக்க நெடுஞ்சாலை துறை சார்பில்ரூ. 30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.பிப்.8ல் அடிக்கல் நாட்டப்பட்டு 10 மாதத்திற்குள் பணிகள் முடிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு 18 நீர்வழி பாலங்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் பாசன வயல்களுக்கு நடுவே இணைப்பு சாலை செல்வதால் வாய்க்கால் தண்ணீர் மறுபக்கம் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் 30 சதவீதத்துக்கும் அதிகமான நெல் வயல்கள் பாசனத்திற்கு வழியற்ற நிலை ஏற்பட்டடுள்ளது . பணிகள் தொடங்கி ஏற்கனவே ஒரு போகம் நீர் பாய்ச்ச முடியாமல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தொடர் தாமதத்தால் தற்போது முதல் போக சாகுபடியும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாசன வாய்க்காலுக்கு தடையின்றி தண்ணீர் போக வழி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மலையில் பெய்யும் மழை நீர் அய்யனார் கோவில் ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் குழாய் மூலம் 6-வது மைல் குடிநீர் தேக்கத்திற்கு வருகிறது. இந்த நீர் தேக்கத்தில் இருந்து சுத்திகரிப்பு நிலையம் சென்று சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ராஜபாளையம் நகராட்சி மூலமாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவில் ஆற்றில் மழை பெய்யாமல் வறண்டு உள்ளது.பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறு மற்றும் போர்வெல் மூலம் தினசரி 50 லட்சம் தண்ணீரை திறந்து நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தண்ணீரின் தேவையும் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் போதிய அளவு மழை இல்லாததால் இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து பொது மக்களுக்கு சரியாக குடிநீர் வழங்க முடியாத நிலை உள்ளது.தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம்வருகிற தண்ணீரை குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி பொதுமக்களுக்குவழங்குவதற்காக தண்ணீரை திறந்து விடுகின்றனர்.குடிநீரில் மருந்து அதிகம் கலப்பதால் தண்ணீரை பொதுமக்கள் குடிக்க அச் சப்படுகின்றனர். எனவே பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதிகாரிகளின் மெத்தனத்தால் சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி, ராஜபாளையம் நகர் பகுதி நடுவே காந்தி சிலை ரவுண்டானா முதல் தாலுகா அலுவலகம் வரை உள்ள முடங்கியார் ரோடு சுருங்கிவிட்டது. இதனால் மக்கள் தினமும் போக்குவரத்து நெருக்கடிக்குள்ளாக வருகின்றனர்.. கடைகளுக்கு வருவோர் ரோட்டில் வாகனங்களை நிறுத்தி செல்வதும், வரிசையாக பார்க்கிங் பகுதிகளாக மாற்றியும் வருகின்றனர். தனியார் சந்தை முன்பு ஆட்டோக்கள் நிறுத்தும் இடமாக சாலையின் வெள்ளை கோடு மேல் வரை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஏற்கனவே இந்த இடம் குடியிருப்புகள் பள்ளி கல்லுாரி மாணவர்கள் கடக்கும் இடமாக இருந்து வருகிறது. இங்கு தனியார் சந்தை, உழவர் சந்தை அரசு கால்நடை மருத்துவமனை அருகருகே அமைந்துள்ளது.போட்டி போட்டுக் கொண்டு ரோட்டை ஆக்கிரமித்து நிற்பதால் டூவீலரில் செல்வோர், பாதசாரிகள், பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்பட்டு சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளும் முளைத்து நிரந்தர இடமாக மாற்றி வைத்துள்ளனர். நெடுஞ்சாலை துறையினரின் மெத்தனத்தால் சாமானிய மக்கள் விபத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.ராஜபாளையம் நகர் பஞ்சு மார்க்கெட்டில் இருந்து கோயில் மாரியம்மன் வரையிலான இரண்டு கி.மீ., தொலைவில் நெடுஞ்சாலையின் நடுவே சிறிய பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகளை பாதித்து வருகின்றன. திடீரென தென்படும் இக்குழிகளால் டூவிலரில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்திற்கு உள்ளாகி வருவதுடன் பின்னால் வருபவர்களும் மோதலுக்கு ஆளாகின்றனர்.இவ்வழியாக சென்றும்அதிகாரிகள் சரி செய்யாமல் வைத்துள்ளனர். . நெடுஞ்சாலை துறையினரின் மெத்தனத்தால்சாமானிய மக்கள் விபத்திற்கு உள்ளாகி வருகின்றனர் மாவட்ட நிர்வாகம் தீர்வு காணவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் வனச்சரக வனச் சரணால்யப் பகுதியில் நீரோடைகள் மற்றும் காப்புக்காடுகள் அதிகம் உள்ளன். யானைகள், இதனால் மிளா, மான்கள், காட்டுப் பன்றி, சிறுத்தை, கரடி, காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் பல்வேறு பறவை இனங்கள் உட்பட பல வகையான வன உயிரினங்கள் வாழ்விடமாக திகழ்கிறது.கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மலைப்பகுதியில் இருந்த நீராதாரங்கள் வற்றி வருகின்றன. இதை அடுத்து தண்ணீர் மற்றும் உணவை தேடி காட்டு மாடுகள், மான்கள், காட்டுப்பன்றிகள் மலையை ஓட்டி உள்ள விளை நில பகுதியை நோக்கி நகர்கின்றன. இதை எதிர்பார்த்து வனவிலங்குகள் வேட்டை யில் ஈடுபடும் சமூக விரோதிகள் பட்டா நிலங்களில் விவசாயிகள், தொழிலாளர்கள் போர்வையில் வனவிலங்குகளை வேட்டையாடுகின்றனர். இவர்களின் போக்கு வன உட்பகுதி வரை வேட்டைக்கான விலங்குகளை தேடி செல்லும் நிலை உள்ளது.ஆயிரக்கணக்கான ஏக்கர் பறந்து விரிந்துள்ள வனப்பகுதியில் சில நூறு வனக்காவலர்கள் மூலம் கண்காணித்து கட்டுப்படுத்தும் செயல் முழுமை அடையவில்லை. வனப்பகுதிக்கு உள்ளே செல்லும் பாதைகளான ராஜபாளையம் அய்யனார் கோயில், ராக்காச்சி அம் மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.செண்பகத் தோப்பு ரோடு, மாவூத்து பாதை, அத்திக்கோயில், வக்கல் நீர்தேக்க பாதை, தேவதானம் அசையாமணி விலக்கு உள்ளிட்ட வனப்பகுதிக்கு செல்லும் முக்கிய சாலைகளில் போலீஸ் சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பதன் மூலம் பெருகிவரும் வன விலங்கு வேட்டைகளை தடுத்து கட்டுப்படுத்த முடியும்.