25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சமையல் குறிப்பு

Jul 08, 2026

சுவையான பொரியலுக்கான எளிய குறிப்புகள்.

வாழைக்காய் பொரியல் செய்யும்போது ஒரு சிட்டிகை மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்தால் நிறமும் சுவையும் அருமையாக இருக்கும்.nana சேனைக்கிழங்கு பொரியலை வறுக்கும் முன் சிறிது எலுமிச்சைச் சாறு தெளித்தால் அரிப்பு குறையும். காலிஃப்ளவர் பொரியலுக்கு சிறிதளவு சோள மாவு தூவி வறுத்தால் மொறுமொறு மொறுமொறுப்பாக வரும். முருங்கைக்கீரை பொரியலில் பூண்டு சேர்த்து வதக்கினால் ஆரோக்கியமும் அதிகரிக்கும். சுரைக்காய் பொரியலுக்கு சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்தால் தனித்துவமான சுவை கிடைக்கும்.

Jun 30, 2026

மீன் வறுக்கும்போது அடிக்கடி திருப்பிப் போடாதீர்கள்; 

காய்கறிகளை  வெட்டுவதற்கு  முன் கழுவுங்கள்; வெட்டிய பிறகு கழுவினால் சத்துக்கள் குறையலாம். கொதிக்கும் பாலில் சர்க்கரையை ஆரம்பத்திலேயே சேர்க்காதீர்கள்; பால் பொங்கும் வாய்ப்பு அதிகரிக்கும். & முட்டையை நேரடியாக ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து உடனே வேக வைக்காதீர்கள்; வெடிக்கலாம். வெங்காயத்தை அதிக தீயில் தொடர்ந்து வதக்காதீர்கள்; எளிதில் கருகி கசப்பாகிவிடும். மீன் வறுக்கும்போது அடிக்கடி திருப்பிப் போடாதீர்கள்; துண்டுகள் உடையலாம். பிரஷர் குக்கரை அதிகமாக நிரப்பாதீர்கள்; உணவு சரியாக வேகாமல் போகலாம்.

Jun 22, 2026

சமையலை சுவையாகவும், சுத்தமாகவும் மாற்ற…

காய்கறிகளை நறுக்கி நீண்ட நேரம் திறந்தவெளியில்  வைக்காதீர்கள் சத்துக்கள் குறைந்து விடும். சாதம் வெந்தவுடன் உடனே மூடி வைக்காதீர்கள்,ஆவி தங்கி சாதம் ஒட்டிக் கொள்ளும். பொரியல் செய்யும்போது அடிக்கடி கிளறாதீர்கள் காய்கள் உடைந்து விடும். உப்பை ஒரே நேரத்தில் அதிகமாக சேர்க்காதீர்கள் சுவை கெட்டுப் போகும். மாவுகளை திறந்தபடியே வைக்காதீர்கள் ஈரப்பதம் சேர்ந்து கெட்டுப்போகும். சூடான உணவை உடனே ஃபிரிட்ஜில் வைக்காதீர்கள் சீக்கிரம் கெடலாம். ஒரே கரண்டியை எல்லா உணவுக்கும் பயன்படுத்தாதீர்கள் சுவை மாறும்.

Jun 02, 2026

பன்னீர் மென்மையாக இருக்க,....

1. ரசம் கொதிக்கும் போது ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால் ருசி கூடும். 2. சாம்பாரில் பூண்டு சேர்த்தால் வாசனை அதிகரிக்கும். 3. தோசை மாவு புளிக்காமல் இருந்தால், சிறிது புளி கலந்த தயிர் சேருங்கள். 4. உப்புமாவில் சிறிது இஞ்சி துருவி சேர்த்தால் செரிமானத்திற்கு உதவும். 5. பன்னீர் மென்மையாக இருக்க, கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்.

May 29, 2026

வடாம் டிப்ஸ் !

 வடாம் மாவுடன் ஒரு கைப்பிடி உளுந்தை சேர்த்து அரைத்தால், வடாம் அதிக மொறுமொறுப்பாக இருக்கும் * மிளகாய்க்கு பதில், மிளகைப் பொடித்து சேர்த்து வடாம் பிழிந்தால், மாறுதலான சுவையோடு வடாம் மணக்கும். * வடாம் மாவில் ஓமத்தை பொடி செய்து சேர்த்து, 'புட் கலர்' ஏதாவது சேர்த்து, ஓமப்பொடி அச்சில் பிழிய வேண்டும். இதை மாலை நேர ஸ்நாக்ஸாக பொரித்து சாப்பிடலாம். * வடாம் மாவை முதல் நாள் இரவே கிளறி வைத்துக் கொண்டால், காலையில் உப்பு, காரம் சேர்த்துக் கிளறி, வெயிலுக்கு முன் வடாம் போட்டு முடித்து விடலாம் *இளம் நாரத்தை இலைகளைக் கழுவி, பொடியாக நறுக்கி வடாம் மாவில் சேர்த்துப் பிழிந்தால் மணமும், சுவையும் கூடும்.

May 06, 2026

இட்லி மாவு 10 நாளும் fresh இருக்கும். (ப்ரிட்ஜ் இல்லாமல்)

இட்லி மாவு 2-3 நாள் கழிச்சா புளிச்சு சுவை மாறிடும்.இந்த ரகசியம்பின்பற்றினா, ப்ரிட்ஜ்இல்லாமே 10 நாளும் புது மாதிரி இருக்கும். முதல்ல அரைச்ச மாவுல உப்பு போடாதீங்க. சுத்தமான ஸ்டீல் அல்லது மண் பாத்திரத்தில் வைங்க. மேல் பக்கத்துல ஒரு சின்ன கப் தண்ணி ஊற்றுங்க - இது மாவு உலராம, புளிக்காம காப்பாத்தும். தினமும் காலை அந்த மேல் தண்ணி எடுத்து போட்டுட்டு, புதுசா தண்ணி ஊற்றணும். மாவு எடுத்துக்கொள்ளும் ஸ்பூன் நனைந்திருக்க கூடாது. இந்த முறையில் சேமிச்சா, 10 நாளும் மாவு புது சுவையோடு இருக்கும்.வெற்றிலையை இட்லி மாவில் குப்புறப் போட்டு வைத்தால் மாவு,புளிக்கவோ ,பொங்கி வழியவோ செய்யாது.

Apr 28, 2026

குக்கர் கேஸ்கட் நீண்ட நாட்கள் உழைக்க...

குக்கரில் மிகவும் முக்கியமானது என்றால் அது கேஸ்கட் தான்.அதனால், குக்கரில் சமையல் செய்த பின், 15 நிமிடங்கள் கழித்து (அதாவது 1/4 மணி நேரம்) கேஸ் கட்டைத் தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்.பின், கேஸ் கட்டை நன்றாகச் சுத்தம் செய்து தனியாக வைக்க வேண்டும்.குக்கரில் உள்ள ரப்பர் வளையம் நீண்ட நாட்கள் உழைக்க என்ன செய்ய வேண்டும்?.குக்கரில் சமையல் செய்து முடித்தப் பின், அதன் மேல் மூடியை திறந்து வைக்க வேண்டும்.பின். அதன் மேல் மிகக் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும்.குளிர்ந்த நீரை ஊற்றுவதால் குக்கரில் உள்ள ரப்பர் வளயத்தை நீண்ட நாட்கள் உபயோகிக்க முடியும்.

Mar 30, 2026

ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.  காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.  மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.  காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

Mar 10, 2026

மொறுமொறுப்பாக சேப்பங்கிழங்கு சிப்ஸ்.

சேப்பங்கிழங்கை வேகவைத்து தோலை எடுத்துவிட்டு வட்டமாக நறுக்கி சிப்ஸ் செய்ய மொறுமொறுப்பாகவும், ருசியாகவும் இருக்கும். வெண்டைக்காயை கொண்டு சாம்பாரும் பொரியலும் செய்வதை விட பக்கோடா தயாரித்தால் குடும்பத்தினர் விரும்பி சாப்பிடுவார்கள். வெண்டைக்காய்களை மெல்லிய வட்டங்களாக நறுக்கி கடலை மாவு, உப்பு, காரத்தூள், கரம் மசாலா, சிறிது கருவேப்பிலை சேர்த்து 2 ஸ்பூன் தயிர் கலந்து எண்ணெய்யில் கிள்ளிப்போட்டு பொரித்தெடுக்க சுவையான பக்கோடா தயார்.  ஒரு ஸ்பூன் மைதா மாவும், அரை கப் பாலும் சேர்த்து கலந்து ஆப்பம் செய்ய ருசியும் கூடும். மென்மையாகவும் இருக்கும்.  முள்ளங்கியை துருவி எடுத்து, கோதுமை மாவோடு கலந்து தேவைக்கேற்ப மிளகாய், உப்புடன் சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து சப்பாத்தி செய்தால், சுவையாக இருக்கும்.  காலிபிளவரை சிறு துண்டுகளாக நறுக்கி சூடான நீரில் போட்டு ஊறவைத்து எடுத்து வடிகட்டி ஒரு துண்டில் பரப்பி நிழலில் உலர்த்தினால், புழுக்கள் இருக்காது. 

Mar 09, 2026

பழங்கள்,காய்கள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை .

பழங்கள் காய்கள் வாங்கும் போது நல்ல சிவப்பு நிறமுள்ள தாக பார்த்து வாங்க வேண்டும்.சிவப்புநிறத்தில் தான் இருப்பு சத்து அதிகம் உள்ளது.பச்சை காய்கறிகள் வாடாமல் இருக்க,காய்கறிகளை ஒரு கூடையில் போட்டு ஈரத் துணியினால் மூடி வைக்க வேண்டும்.இதனால், 3 அல்லது 4 நாட்களுக்கு காய்கறிகள் வாடாமல் இருக்கும்.மழைக்காலங்களில் அரிசி பருப்பு டப்பாக்களில் வண்டுகள் பிடிக்கும். வண்டு, பூச்சிகளுக்கு காரமான வாசனை ஆகாது, பருப்பு அரிசி டப்பாக்களில் வண்டு வைக்கும். டப்பாக்களில்  காய்ந்த மிளகாய் காம்பு இல்லாமல் அப்படியே போட்டு வைத்தால் மிளகாய் காரத்துக்கு வண்டுகள் வராது. பிரியாணி இலையை கூட போட்டு வைக்கலாம். பூண்டு பற்களை தோல் உரிக்காமல் அரிசி அல்லது பருப்பு டப்பாக்களில் புதைத்து வைப்பது நல்லது. பூண்டின் காரமான மணம் பூச்சிகளை விரட்டும் ாஆனால் பூண்டு ஈத்தன்மை உடையது. அவ்வப்போது மாற்ற வேண்டும் தீப்பெட்டியை போட்டு வைக்கலாம். அதிலுள்ள கந்தகம் பூச்சியை வரவிடாது. இவ்வளவு செலவு செய்து வாங்கிய மளிகை பொருட்களை இப்படி செய்து பாதுகாக்கலாம்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 13 14

AD's



More News