பலா, மா அறுவடை சீசன் தொடங்கி ,ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மா, தென்னை, வாழை, பலா ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இந்த பலாப்பழங்களை உண்ண வனப்பகுதியை விட்டு வெளியே யானைகள் கூட்டம்,கூட்டமாக வருகின்றன.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தம்பாத்து ஊருணி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக தோப்புக்குள் புகுந்து 25-க்கு மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு சாய்த்து ,தென்னை மரங்கள், பலா பழங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தி விட்டன என அப்பகுதி விவசாயிகள் கூறினர்இரவுநேரங்களில் காட்டுப்பன்றிகளும் அதிக அளவில் தோட்டத்துக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. எனவே தோட்டத்திற்குள் யானைகள், காட்டுப்பன்றி கள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் அதேபோல பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கூறினர்.
ரயில் பயணிகள் பாதுகாப்பிற்காகராஜபாளையம் மூன்றாவது பிளாட்பார்மில் அமைந்துள்ள ரயில்வே போலீஸ் ஸ்டேஷனை முதல் பிளாட்பார்மில் மாற்ற வேண்டுமென பயணிகள் விரும்புகின்றனர். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள்ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் நடந்து வருகிறது. நுழைவு பாதைக்கு மாற்றாக வடக்கு பகுதியில், அகலமான நுழைவாயில் வாகன நிறுத்தம் பழைய நடைமேடையில் லிப்ட் பணிகள் முடிந்துள்ளது.பயணிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளான திருட்டு, ஆட்கள் பொருட்களை தவறவிடுதல், விபத்துக்கள் குறித்து ரயில்வே போலீசாரிடம் முறையிட வேண்டும். ஆனால் மூன்றாவது பிளாட்பார்மில் உள்ள பழைய கட்டடத்தில் போலீஸ் ஸ்டேஷன் இருப்பது பெரும்பாலான பயணிகளுக்கு தெரியாததால் புகார்கள் விடுபடுகின்றன. போலீசாரும் ஒவ்வொரு முறையும் நடைமேடை ஏறி இறங்கி ஸ்டேஷன்களுக்கு செல்வதில் சிரமம் எழுந்துள்ளது .அம்ரித் பாரத் திட்டத்தில் ஸ்டேஷன் மேம்பாட்டிற்கான கட்டிட பணி நடந்து வரும் நிலையில் பயணியர் சுலபமாக தொடர்பு கொள்வதற்காக முதல் பிளாட்பார்மில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனை மாற்றி அமைக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையத்தில் உயர் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் விருதுநகருக்கும், திருநெல்வேலிக்கும் பரிந்துரைக்கும் நிலை ஏற்பட்டு வந்தது. தொடர் கோரிக்கையை அடுத்து மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக நவீன வசதிகளுடன் தரம் உயர்த்த ரூ.40 கோடி மதிப்பில் மருத்துவமனை வளாகத்தில் 1.8 ஏக்கர் பரப்பளவில் அடிக்கல் நாட்டப்பட்டது.'மொத்தம் 227 படுக்கை வசதிகளுடன் விபத்து சிகிச்சை பிரிவு, எம்.ஆர்.ஐ ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளோடு 4 மாடியுடன் பல்நோக்கு வளாகம் பணிகள் நடந்து வருகிறது. கடந்த - ஆண்டு டிச.20க்குள் கட்டுமான பணி முடிந்து பயன்பாட்டிற்கு வரும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். அடிக்கல் நாட்டி இரண்டு ஆண்டுகள் கடந்தும் பயன் பாட்டிற்கு வரவில்லை. பணி முடிந்து பொதுப்பணித்துறை ஒப்படைக்காததால் மின் இணைப்பு பெற முடியவில்லை. 50 சதவீத உபகரணங்கள் வந்துவிட்ட நிலையில் தாமதம் காரணமாக நோயாளிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.புதிய மருத்துவமனைக்கு தேவையான 10 டாக்டர்கள், செவிலியர்கள், 'டெக்னீசியன்கள் உள்ளிட்ட 70 அலுவலர்களை உடனடியாக நியமனம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
வறட்சிக் காலத்தில் குடிநீர், உணவை தேடி, ராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் வனப் பகுதியை விட்டு வெளியே வரும் விலங்குகளால் விவசாய விளை பொருட்கள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. வேட்டையில் ஈடுபடுபவரிடம் சிக்குவதும்,. இவ்வாறு வரும் நேரங்களில் ,இதை தடுக்க மலை அடி வார பகுதிகளில், தண்ணீர் குட்டைகள் அமைத்து நீர் வற்று காலத்தில், அருகாமையில் நிலத்தடி போர் வெல் மூலம், தண்ணீர் நிரப்பப்பட்டன.பல்வேறு பகுதிகளிலும் சிமெண்ட் தொட்டிகள் அமைக்கப்பட்டு வெளியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து சேர்க்கப்பட்டது. தண்ணீர் தொட்டிகளை விட இது போன்ற அமைப்புகள் அதிக இடங்களில் அமைப்பது சுலபமாக இருந்ததால் விலங்குகளின் தண்ணீர் தேவை கோடையில் சமாளிக்கப்பட்டன.சிறிய அளவிலான தண்ணீர் தொட்டிகள் தண்ணீர் குட்டைகள் அமைத்ததால் பராமரிப்பு இன்றி சேதமடைந்து வருகிறது. இவற்றையும் முறையாக பராமரிப்பதன் மூலம், தண்ணீரைத் தேடி விலங்குகள் விளை நிலங்களுக்குள் நுழைவது தடுக்கப்படும் என வன உயிரின ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்
ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து கொல்லம் தேசிய நெடுஞ் சாலையுடன் இணைப்பு ரோடு இல்லாததால் மெயின் ரோடு, நகர் பகுதி என அனைத்திலும் போக் குவரத்து நெரிசல் அதிக ரித்து வந்தது.இந்நிலையில் இணைப்புக்கான அறிவிப்பு2023ல் வெளியிடப்பட்டது. இதற்காக பெரியாதிகுளம், கடம்பன்குளம் பாசன விவசாய பகுதிகளில்100 அடி அகலத்தில்2.10 கி.மீ., தொலைவிற்கு நிலம் கையகப்படுத்தப் பட்டது.நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த ஆண்டு பிப்.8ல் அடிக்கல் நாட்டப்பட்டது.புது பஸ் ஸ்டாண்டில் இருந்து பணி துவங்கிய நிலையில், கிழக்கு பகுதியான தென்காசி ரோடு வழியாக சாலை பணி தொடங்காமல் இருந்தது. மண் பாஸ் அனுமதி தாம தத்திற்கு காரணம் என கூறப்பட்ட நிலையில் கடந்த மூன்று நாட்களாக விவசாய நிலங்களில் மண் கொட்டப்பட்டு பச்ச மடம் சுடுகாடு வரை சமப்படுத்தும் பணிகள் நடந்துள்ளது.முழுவதும் விவசாய நிலங்கள் வழியே செல்லும் இப்பாதைக்கு18 குறு பாலம்,1 சிறு பாலம் அமைக்க உள்ளதாக கூறுகின்றனர். மண் கொட்டப்பட்டு குறைந்தது5 அடி உயரத்தில் அமைய உள்ள சாலையால் மறுபக்கம் உள்ள பாசன பகுதிக்கு சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பணிகளின் போதே தேவையான இடங்களில் குழாய்களை அமைத்து தடையற்ற பாசனத்திற்கு வழி காண வேண்டும். சாலையின் இரண்டு பக்கமும் உள்ள விவசாய நிலங்களுக்கான நீர் பாசனத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 42வது வார்டு ஆர்.ஆர்.நகர் பகுதி சத்திரப்பட்டி சாலையில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தனியார் பைப் லைன் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பதிக்கப்பட்டு இருந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் குடிநீர் வீணாக சாலையில் சென்றன. மேலும் அந்த சாலை முழுவதும் குழி தோண்டி வைத்துள்ளனர். இதனால் கனரக வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் போன்றவற்றில் செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதேபோல் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்வதால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கவும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து எதிர்பார்த்துள்ளனர்.
ராஜபாளையம் மாரியம்மன் கோயில் முன்பு தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டது.ராஜபாளையம் புதுப்பாளையம்,கடம்பன்குளம், தெற்குவெங்கா நல்லுார், வடக்கு வெங்காநல்லுார், அலப்பசேரி, கருங்குளம், அப்பனேரி உட்பட பல்வேறு பகுதிகளில் தற்போது நெல் அறுவடை தொடங்க உள்ளது.வெளி மார்க்கெட்டில் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்கும் நிலையை தவிர்ப்பதற்காக நேரடி விற்பனை நிலையம் துவக்கப் பட்டுள்ளது. ராஜபாளையம் தாசில்தார் ராஜிவ் காந்தி துவக்கி வைத்தார்.உதவி வேளாண் அலுவலர் சோமசுந்தரம், விவசாய சங்க தலைவர் ராமச்சந்திர ராஜா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.நெல் கொள்முதல் நிலையத்தில் சன்னரக நெல் கிலோ 24.50, மோட்டா ரகம் 24.05 விலை நிர்ண யிக்கப்பட்டு தினமும் 800 மூடைகள் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள புல்லுபத்தி காடு அருகே 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தென்னை, மா மற்றும் வாழை போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.இந்தநிலையில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து தென்னை, வாழை, மா என 100க்கும் மேற்பட்ட மரங்களை சேதப்படுத்தி உள்ளது. இத னால் தங்களுக்கு ரூ.1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மாம்பழ சீசன் நேரத்தில் யானைகள் கூட்டம், கூட்டமாக வந்து மரங்களை சேதப்படுத்தி உள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். எனவே வனவிலங்குகள் விவசாய நிலத்திற்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் .
ராஜபாளையம் வணிகர்கள் ,வணிக நிறுவனங்கள் அதிக வாடகை வசூலிக்கப்படுவதை சமாளிக்க கடைகளின் திறப்பு நேரத்தை 24 மணி நேரமும் திறந்து வைக்க தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை கொடுத்துள்ளனர். அதிக சொத்து வரி விதிப்பிற்கு, மாநில அளவில் கீழ்வரும் முதல் மூன்று நகராட்சிகளில் ராஜபாளையம் முக்கிய இடம் பிடித்துள்ளது. கடை உரிமையாளர்கள், வணிகம் நடத்துபவர்களிடம் வாடகையை உயர்த்தி வசூலிப்பதால் தொழில் நடத்துவதில் சிரமம் எதிர்கொள்கின்றனர்.பாதுகாப்பை காரணம் காட்டி இரவு 11:00 மணிக்கு மேல் கடையை அடைக்க போலீசார் கெடு பிடி விதித்து வரும் நிலையில் தமிழக அரசு இம்மாதம் ஜூன் 4 முதல் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் அனுமதியை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.போலீசார் பாதுகாப்பு பற்றாக்குறையை காரணம் கூறி ராஜபாளையத்தில் இரவு 11:00 மணிக்கு மேல் அனுமதிக்க மறுப்பதால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.ஏற்கனவே மாநில அளவில் உயர் வரி விகிதம் விதிக்கப்பட்டும், தொடர்ந்து மின் கட்டண உயர்வு விதிப்பு போன்ற வற்றால் நிலையற்ற தன்மையை சந்தித்து வரும் சூழலில் 24 மணி நேரம் திறக்க விருப்பப்படும் கடைகள், வணிக நிறுவனங்களுக்கு அரசு விதி முறைகளுக்கு உட்பட்டு தடை ஏற்படுத்த கூடாது என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
தென்காசியின் போககுவரத்து நெரிசலை தவிர்க்க திட்டமிடப்பட் டுள்ள பைபாஸ் ரோடு,அரசு நிலங்களை கையகப்படுத்தி திட்டத்திற்கு நிதி வழங்கிய பிறகும்,ஒப்பந்ததாரர்களால் தாமதம் ஏற்படுத்துகின்றனர் எனபொதுமக்கள் புகார் கூறுகின்றனர். பணி மிகுந்த தாமதமாக நடக்கிறது.இதனால் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் ,திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் வாகனங்கள் ஊருக்குள் சென்று செங்கோட்டை செல்லவோ, மதுரை சாலையில் செல்லவோ மிகுந்த சிரமப்படுகின்றன. மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். எனவேதென்காசி பைபாஸ் ரோடுபணியை விரைவு படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் .