பிறக்கும் போது வால் உண்டு, இறக்கும் போது வால் இல்லை. அது என்ன? - தவளை. முற்றத்தில் நடப்பான், மூலையில் படுப்பான். அவன் யார்? - துடைப்பான் .
சூடு பட்டு சிவந்தவன், வீடு கட்ட உதவுவான். அவன் யார் ? செங்கல் .வட்ட வட்ட பாய், வாழ்வு தரும் பாய், ஊரெல்லாம் சுற்றும் பாய், ஒவ்வொருவரும் விரும்பும் பாய். அது என்ன பாய் ? ரூபாய்
ஆலமரம் தூங்க, அவனியெல்லாம் தூங்க, ஸ்ரீ ரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை. அவன் யார்? - மூச்சு ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும். அது என்ன? - ஊதுபத்தி
தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்க முடியாது. அது என்ன? - முதுகு.கலர்ப்பூ கொண்டைக்காரன் காலையில் எழுப்பிவிடுவான். அவன் யார்? - சேவல்
கடலில் கலக்காத நீர், எவரும் குடிக்காத நீர். அது என்ன?- கண்ணீர் கத்தி போல் இலை இருக்கும், கவரிமான் பூ பூக்கும், தின்ன பழம் கொடுக்கும், தின்னாத காய் கொடுக்கும். அது என்ன? வேம்பு
கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ. அது என்ன? - உப்புகந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அவன் யார்? - சோளக்கதிர்
கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன் நீரைச் கண்டு பதைபதைக்கிறான். அவன் யார்? நெருப்பு.மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம் வலதிலும் துவாரம் இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம், வெளியிலும் துவாரம், இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன். நான் யார்? – பஞ்சு.
காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான். அவன் யார்? -தென்னை மரம்.சுற்றும் போது மட்டும் சுகம் தரும். அது என்ன ? - மின் விசிறி
வாலிலே எண்ணெய், தலையிலே கொள்ளி. அது என்ன? - விளக்குத் திரி. ஆயிரம்பேர் அணி வகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது. அவர்கள் யார்? - எறும்புக் கூட்டம்.
மேலே மேலே செல்லும், ஆனால் கீழே வராது. அது என்ன? வயது அனலில் பிறப்பான், ஆகாயத்தில் பறப்பான். அவன் யார்? புகை