25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


விடுகதை

Apr 06, 2026

.மண்ணைச் சாப்பிட்டு மண்ணிலேயே வாழ்ந்து, மண்ணோடு மண்ணாவான்.

என் குதிரை கருப்புக் குதிரை, குளிப்பாட்டினால் வெள்ளைக் குதிரை. அது என்ன?  - உளுந்து. .மண்ணைச் சாப்பிட்டு மண்ணிலேயே வாழ்ந்து, மண்ணோடு மண்ணாவான். அவன் யார்? - மண்புழு.

Mar 30, 2026

உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம். 

உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம். அது என்ன? தராசு. தாடிக்காரன், மீசைக்காரன், கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன். அவன் யார்/-?  தேங்காய்.

Mar 23, 2026

 உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். 

நான் வெட்டுப்பட்டால், வெட்டியவனை அழ வைப்பேன். நான் யார்? - வெங்காயம்  உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்? - கடல் அலை

Mar 16, 2026

காற்றால் உயிர் பெறும், காதுக்கு இனிமை தரும்.

காற்றால் உயிர் பெறும், காதுக்கு இனிமை தரும். அது என்ன?--நாதஸ்வரம்  காற்று இல்லாத கண்ணாடி கூண்டில், மஞ்சக் கோழி மயங்கி கிடக்குது.--முட்டை

Mar 09, 2026

காலால் உதைத்தால், காற்றால் உருளும். 

காலால் உதைத்தால், காற்றால் உருளும். அது என்ன? - மிதிவண்டி . காளை கட்டிக்கிடக்குது, கயிறு ஓடிக் கிடக்குது. அது என்ன? - பரங்கிக்காய்

Mar 02, 2026

பூ இருந்தும், பறப்பதில்லை. அது என்ன?

கால் இல்லை கை இல்லை, கண்கள் உண்டு, வால் உண்டு, சிறகுண்டு. அது என்ன?  மீன்  பூ இருந்தும், பறப்பதில்லை. அது என்ன? சேவல் கொண்டை 

Feb 23, 2026

விழுந்தால் படுக்காது, எழுந்தால் நிற்காது. அது என்ன?

பூவை பூவெடுத்து பூ மீது வைத்தால், பூ போக மீதி பூ என்ன இருக்கும்?எறும்பு, கரும்பு, வரப்பு விழுந்தால் படுக்காது, எழுந்தால் நிற்காது. அது என்ன?தஞ்சாவூர் பொம்மை .

Feb 16, 2026

வண்ண நிலா விண்ணிலே, மலர்ந்திடுவாள் மண்ணிலே.

கரிச்சட்டி வயிற்றிலே, வெள்ளை முத்துக்கள். அது என்ன? சாதம் வண்ண நிலா விண்ணிலே, மலர்ந்திடுவாள் மண்ணிலே.அது என்ன? -அல்லிப்பூ .

Feb 09, 2026

கட்டுப்பட்டு இருந்த மகளை, விட்டுப் பிரிந்து வந்தாள்.-

ஒரு மரம் ஏறி, ஒரு மரம் பூசி, ஒரு மரம் வீசிப் போகிறாள். --பாதகுறடு, சந்தனம், விசிறி . கட்டுப்பட்டு இருந்த மகளை, விட்டுப் பிரிந்து வந்தாள்.-உமி, நெல் .

Feb 02, 2026

ஏனக் கோணல் மூன்று, கண் ஆறு, கால் பத்து. அது என்ன?

குடிக்கலாம், அடிக்கலாம். அது என்ன? - காப்பிஏனக் கோணல் மூன்று, கண் ஆறு, கால் பத்து. அது என்ன? - கலப்பை  

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

AD's



More News