முதலில் காலையில் சீக்கிரம் எழும்பலாம் தானாகவே இரவில் தூக்கம் வந்து விடும்.மனதை ரிலாக்ஸ் செய்வதோடு உடலையும் ரிலாக்ஸ்செய்துகொள்ளுங்கள்.குளித்துவிட்டுதூங்குங்கள்.நீங்கள்தூங்கும்அறையில்வெளிச்சம்அதிகம்இல்லாதவாறுபார்த்துக்கொள்ளுங்கள்.புத்தகம் வாசியுங்கள், கண்டிப்பாக தூக்கம் வரும். சிலருக்கு புத்தகம் வாசித்தால் தூக்கம் வரும்.உங்கள் பிளேலிஸ்ட்(PLAYUST) ஐ தட்டிவிடுங்கள். 'முடிந்தவரை ஒரு மணி நேரம் தூங்கும் முன், தொலைபேசி, தொலைக்காட்சி, கணிப்பொறிகுறைந்த பட்சம் அனைத்து சாதனங்களையும் தவிர்த்து விடுதல் நல்லது.இவை எல்லாமே செய்தும் தூக்கம் வரவில்லை என்றால், வீட்டை ஒட்டடை எடுத்து சுத்தமாக பெருக்கி துடைத்து, பாத்திரங்களை கழுவி வையுங்கள்.எல்லாமே முடிக்க சுமார் 3-4 மணி நேரம் எடுக்கும். அசதியில் தானாக தூக்கம் வந்து விடும். காலையில் அம்மா , மனைவியிடம் பாராட்டுக்கள் குவியும்.
Apple - குமளிப்பழம்Cherry - சேலாப்பழம்Kiwi - பசலிப்பழம்Lichee - விளச்சிப்பழம்Melon - வெள்ளரிப்பழம்Orange - கமலாப்பழம்Peach - குழிப்பேரிStrawberry - செம்புற்றுப்பழம் Wood apple - விளாம்பழம் Pine Apple - புற்றுப்பழம் Raspberry - முசுக்கட்டைப்பழம் Mulberry - செந்தாழை
பிள்ளைகளுக்கு சொத்து எழுதி வைக்காதீர்கள்.பெற்றோர்கள் ஆரம்பத்திலேயே பிள்ளைகளுக்கு சொத்து எழுதி வைக்காதீர்கள்.முதலில் சம்பாதித்து சொத்து சேர்க்க கற்றுக் கொடுங்கள்.சம்பாதித்த சொத்தினை பாதுகாக்கவும் கற்றுக் கொடுங்கள்.அதற்கு பின் நீங்கள் எழுதி வைத்தால் 'பத்திரமாக பராமரிப்பார்கள்'.அதைவிட சம்பாதித்துக்கொடுத்த உங்களையும் போற்றுவார்கள்.
காற்றாலை மின்சாரத் தயாரிப்பு என்பது சுற்றுச்சூழ லுக்குத் தீங்கு விளைவிக்காதது தான். என்றாலும் காற்றாலை விசிறிகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை அல்ல. ராட்சத விசிறிகள் சேதமடைந்துவிட்டால் பெரும்பா லும் நிலங்களில் புதைக்கப்பட்டு சூழலை மாசாக்குகின்றன. இவற்றில் கார்பன் நார்களும், ஃபைபர் கண்ணாடியும் பயன்படுகின்றன. இவற்றை இணைக்க ஈபாக்ஸி பிசின் உபயோகப்படுகிறது.20 ஆண்டுகள் வேலை செய்து சேதமடைந்த விசிறியின் இறக்கை யிலிருந்து மேற்கண்ட பொருட் களைப் பிரித்தெடுப்பது என்பது சுலபமானதல்ல. அப்படியே பிரித்தெடுத்தாலும் எடுக்கப்பட்ட கார்பன் நார்கள் மறு பயன்பாட்டிற்கு உதவாது. இதைச் சரிசெய்ய அமெரிக்காவைச் சேர்ந்த என்ஆர் ஈஎல் (NREL) ஆய்வகம் ஒரு புதிய பிசினை உருவாக்கியுள்ளது. இதன் பெயர்பெகான்(PECAN).உண்ணப்படாத சர்க்கரை,வீணாக்கப்பட்ட க்ளிசரால் ஆகிய வற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் பெகான் பிசின் எந்த வகையிலும் இயற்கை, சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கா தது. இதைக் கொண்டு 29.5 அடி நீளமுள்ள இறக்கையைச் செய்து சோதித்துப் பார்த்தனர். பழைய இறக்கைகள் போலவே இதுவும் நல்ல வலிமை கொண்டிருந்தது. கடுமையான தட்பவெப்ப சூழலையும் தாக்குப் பிடித்தது. இதன் பிறகு இறக்கையை வெட்டிச் சில வேதி வினைகளுக்கு உட்படுத்தினர். இதில் பயன்பட்ட கார்பன் நார்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் சேதமின்றிப் பிரித்தெடுக்கப்பட் டன. அவை மறுபயன்பாட்டிற்கு உரிய தரத்துடன் இருந்தன. இந்தப் புதிய பிசினை இனி காற்றாலைகளில் பயன்படுத்துவதன் வாயிலாக சுற்றுச்சூழலைக் காக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
தன்னை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள நினைக்காதவர்களுக்காக, உங்களை மாற்றிக் கொண்டு,உங்களின் நேரங்களையும்,உங்களின் சொந்த நல்ல குணங்களையும் விட்டுக் கொடுத்து விடாதீர்கள்.மாற்றவும் வேண்டாம். மாறவும் வேண்டாம். நீங்கள் நீங்களாகவே இருப்பதே சால சிறந்தது என்று அவர்கள் உங்களுக்கு உணர்த்தும் முன்பே விழித்துக் கொள்ளுங்கள். இதை அனுபவிக்கும் முன் இந்த அறிவுரையை.மனதில் கொள்ளுங்கள். யாரையும் உங்களுக்காக மாற்ற வேண்டும் என்றோ ,உங்களை போல் மாற்ற வேண்டும் என்றோ. நினைத்து விடாதீர்கள்.