37 வயது வரை தான் வாழ்வு வாய்த்தது இந்த அன்பு மனம் கொண்ட பெண்ணிற்கு. இன்னும் சில வருடங்களாவது காலம் கருணை காட்டியிருக்கலாம்.கமலா நேரு, உடல்நலம் நலிவுற்றவர். எனினும் மனநலனுக்கோ உள்ள உறுதிக்கோ எக்குறையும் இல்லை.உயர் சிகிச்சைக்காக வெளிநாடு கிளம்பும் முன் , காந்தியைச் சந்தித்து ஒரு வாக்குறுதியைப் பெறுகிறார். தான் திரும்பி வர மாட்டோம் என்று அவர் உள் மனதின் குரல் சொல்லியிருக்கலாம்.சுயராஜ் பவனில் , ஒரு சிறிய மருந்தகத்தைக் கமலா நேரு தொடங்கியிருந்தார். அதை மருத்துவமனையாக்கி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்பது அவர் கனவு. எனவே, கிளம்பும் முன் ,, தான் ஒரு வேளை வராமல் போனாலும் அதை மருத்துவமனையாக மாற்றி விட வேண்டும் என்ற சொல்லுறுதியைக் காந்தியிடம் கேட்டுப் பெற்ற பிறகே சிகிச்சைக்குக் கிளம்புகிறார். காந்தியும் தன் சக்திக்கு உட்பட்டு அதை நிறைவேற்றுவதாக வாக்களிக்கிறார்.1939 பிப்ரவரி 19 ஆம் தேதி அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது காந்தியே அதை முன்னின்று நடத்தினார்.அது குறித்து மனதைத் தொடும் அழகான குறிப்பையும் காந்தி ஹரிஜன் இதழில் எழுதினார். Woman of spritual beauty என்று.எவ்வளவு பெரிய மருத்துவமனை. இப்படியும் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
சூரியக் குடும்பத்திலேயே மிகப் பெரிய கோள், வியாழன். அதில் பூமியில் வீசுவது போல பல மடங்கு வேகமாக புயல் வீசுகிறது என்று நமக்கு தெரியும். இந்தப் புயலானது ஒரு சூறாவளியைப் போல ஒரே இடத் தில் நிலைகொண்டு இருக்கும் என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால், சமீபத்திய ஆய்வில் இந்தப் புயலானது நகர்வது தெரியவந்துள்ளது.நாசாவின் 'ஹப்பிள்' தொலைநோக்கி அனுப்பிய புகைப்படங்கள் வாயிலாக விஞ்ஞானிகள் இதை உறுதி செய்தனர். நாம் சாப்பிடுகின்ற ஜெல்லியை ஒரு கிண்ணத்தில் வைத்து லேசாக ஆட்டினால் எப்படி அதனுடைய மேற்பரப்பு முன்பின்னாக நகருமோ அதுபோல இந்தப் புயலும் அவ்வப்போது நகர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.டிசம்பர் 2023ம் ஆண்டிலிருந்து மார்ச் 2024ம் ஆண்டு வரை 90 நாட்கள் தொடர்ந்து இந்தப் புயலை விஞ்ஞானிகள் கண்காணித்து வந்தனர். அப்போதுதான் இந்தப் புயலின் மையம் லேசாக வடக்கு நோக்கியும் தெற்கு நோக்கியும் அவ்வப்போது நகர்வது தெரிய வந்தது. இந்தப் புதிய கண்டு பிடிப்பானது, வியாழன் கோளைப் பற்றி ஆழமாக அறிந்துகொள்ள உதவும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.
தென் அமெரிக்க நாடுகளில்100 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து விட்டதாக கருதப்பட்ட அதிசய விலங்கு மீண்டும் காடுகளில் தென்பட்டுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.உலகம்முழுவதும்பரிணாமவளர்ச்சியில்பலவிலங்குகள்அழிவுற்றபோதிலும்,மனிதவளர்ச்சிக்குபிறகுவேட்டையாடிகளால்பலஉயிரினங்கள்மொத்தமாகஅழிவுற்றன.அப்படியாகஉலகநாடுகளில்அழியும்நிலையில்பலவிலங்குகள்உள்ளன.அப்படியாகசமீப100 ஆண்டுகளில்உலகில்மொத்தமாகஅழிந்துவிட்டதாககருதப்பட்டவிலங்குகளில்தென்அமெரிக்காவில்காணப்பட்டடாபிர்இனங்களும்ஒன்று.கடந்த1914ம்ஆண்டில்இதுகேமிராவில்பதிவுசெய்யப்பட்டபின்னர்அப்பகுதிகளில்தென்படவேஇல்லை.பலஆண்டுகளாகவிலங்குஆர்வலர்கள்தேடியும்இந்தவிலங்கினம்தென்படாதநிலையில்இதுமொத்தமாகஅழிந்துவிட்டதாகவேகருதப்பட்டது. இந்நிலையில்தான் சிலநாட்களுக்கு முன்பாக யாருமே எதிர்பார்க்காத வண்ணம்இந்த விலங்கு பிரேசிலில் உள்ள தேசிய பூங்கா ஒன்றில் காணப்பட்டுள்ளது. ஒருதாய் டாபிர் இரண்டு குட்டிகளுடன் செல்லும் காட்சியை சிலர், வித்தியாசமான உயிரினமாக தெரிந்ததால் படம் பிடித்துள்ளனர். அதன்மூலம் டாபிர் இன்னும் அழியவில்லை என்ற செய்தி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் எவர் கண்ணுக்கும் சிக்காமல் டாபிர்கள் வாழ்ந்தது குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் அங்குள்ள டாபிர்களை கண்காணித்து அவற்றை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனபிரபல தொழிலதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து, செலவுகளை குறைக்கவும், பிற நாடுகளுக்கு வழங்கப்படும் தேவையில்லாத நிதி உதவிகளை நிறுத்தும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கி வந்த நான்காயிரம் கோடி ரூபாய் நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளதுஎன்பதைகுறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், அடுத்த கட்டமாக அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், தாமாகவே முன்வந்து ராஜினாமா செய்பவர்களுக்கு எட்டு மாத சம்பளம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும், அரசு ஊழியர்கள் தாங்கள் வேலை செய்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும், பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.எலான் மஸ்க் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் கணிசமான அளவில் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுவதால், அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, அமெரிக்காவில் அடுத்த 4 ஆண்டுகளில்500 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்ய உள்ளதாகவும், இதனால்20,000 வேலைவாய்ப்புகள் உருவாக்க உள்ளதாகவும்அவர்தெரிவித்துள்ளார்.ஆராய்ச்சி, சிலிக்கான் பொறியியல், மென்பொருள் மேம்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த துறைகளில்தான் அடுத்த நான்கு ஆண்டுகளில்500 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஆப்பிள் நிறுவனம் இந்தியா உள்பட சில வெளிநாடுகளில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால் அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்ததை அடுத்து, அமெரிக்க இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, இந்த முதலீடு அனைத்தையும் அமெரிக்காவிலேயே செய்ய ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறதுஇன்னும் பல நிறுவனங்கள் அமெரிக்காவில் புதிய முதலீடு செய்ய காத்திருக்கின்றன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவ தாவரங்களில் தொட்டால் சிணுங்கிக்கு தனி சிறப்பு உண்டு. இது, மனிதனின் குணத்துடன் ஒப்பிடப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் மிமோசா பியூடிகா. தொட்டால் சுருங்கி, இலச்சகி, தொட்டால் வாடி, வசிய மூலிகை, மாய மூலிகை, ஈர்ப்பு மூலிகை, மந்திர மூலிகை, ஆள் வணங்கி என்ற பெயர்களும் உண்டு.மற்ற தாவரங்களை போன்றே, இதன் இலையும் செல்களின் சேர்க்கையால் ஆனது.இலைக்குள் இருக்கும் செல்கள் ஒரு வகை திரவத்தைக் கொண்டிருக்கும்.இலையைத் தொட்டவுடன் தாவரத்தின் தண்டுப் பகுதியில் வினோத அமிலம் சுரக்கும். உடனே, இலையின் அடிப்பகுதியில் திரவத் தன்மை நீங்கி விடும். மேற்பகுதியில் அது நீங்குவது இல்லை. இதனால், எடையில் மாறுபாடு ஏற்பட்டு இலை சுருங்கும். தொட்டவுடன் அது சுருங்கி விடுவதாக கூறுகிறோம்.
சில தாவரங்கள் ஆண் மரம், பெண் மரம் என்று தனித்தனியாக இருக்கும். ஆனால், வால்நட் மரம் பருவத்திற்கு ஏற்ப தன் பூக்களின் பாலினத்தை மாற்றிக் கொள்ளும். இது அறியப்பட்ட விஷயம் தான் என்றாலும், முதன்முறையாக இதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலை ஆய்வாளர்கள் தெளிவான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
எஸ்பிஐ வங்கி உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகும், இந்த வங்கியின் பெயரை அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இந்த வங்கி லோகோ எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமா? . எஸ்பிஐ வங்கியின் லோகோ கங்காரியா ஏரி மற்றும் பைலின் ஏரியிலிருந்து எடுக்கப்பட்டது.
உலகை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று புற்றுநோய்.அதிலும் குடல் புற்றுநோய் என்பது மிகவும் அபாயகரமா னது. அதிலிருந்து தப்பிப்பதற்கு சிறந்த உபாயத்தை இங்கிலாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.ஏறத்தாழ 5,42,000 மக்களைக் கொண்டு ஓர் ஆய்வுநடத்தப்பட்டது.ஒவ்வொருவருடையஉணவுப்பழக்கம்பற்றியும்கேட்டறியப்பட்டுஆவணப்படுத்தப்பட்டது.அனைவரும் 16 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட் டனர். அதில், 12,259 பேருக்கு குடல் புற்றுநோய் ஏற்பட்டது தெரியவந்தது. இவர்களுக்கு மட்டும் எப்படி வந்தது ? பிறருக்கு ஏன் வரவில்லை என்பது குறித்து ஆராயப்பட்டது.இதிலிருந்து தினமும் 300 மில்லி கிராம் கால்சியம் எடுத்துக்கொண்டு வருபவர்களுக் குக் குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு 17 சதவீதம் குறையும் என்று கண்டறிந்துள்ளனர். தின மும் ஒரு குவளை பால் சாப்பிட்டால் இந்தச் சுண்ணாம்புச் சத்து நமக்கு கிடைத்துவிடும்.பால் சாப்பிடப் பிடிக்காதவர்கள் டோபு அல்லது பிரக்கோலி போன்ற காய்கறிகள் மூலம் இந்த கால்சியத்தைப் பெறலாம்.அதேபோல இந்த ஆய் வில் மற்றொரு விஷயமும் தெரியவந்துள்ளது. தினமும் 100 கிராம் ரெட் மீட் அதாவது ஆடு, பன்றி, மாடு, முயல் ஆகிய விலங்குகளின் மாமிசம் சாப்பிடுவது இந்தப் புற்றுநோய்வரும் வாய்ப்பை 29 சதவீதம் அதிகரிக்கிறது.தினமும் 200 கிராம் மது குடிப்பது புற்றுநோய் வரும் வாய்ப்பை 15 சதவீதம் அதி கரிக்கிறது. ஆகவே மது, மாமிசத்தைத் தவிர்த்துவிட்டு, பால் குடிப்பது நல்லது என்று ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
புத்தகம் அமைதியாக இருக்க, படித்தவன் ஆட்டம் போடுகிறான்...பாட்டில் அமைதியாக இருக்க ,குடித்தவன் ஆட்டம் போடுகிறான்..பணம் அமைதியாக இருக்க, வைத்திருப்பவன் ஆட்டம் போடுகிறான்..பிணம் அமைதியாக இருக்க, எடுத்து செல்பவன் ஆட்டம் போடுகிறான்..